என்ன சாப்பிட்டாலும் வெய்ட் ஏறவே மாட்டேங்குதா? இந்த அல்வாவை சாப்பிடுங்க!!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

எதை சாப்பிட்டாலும் வெய்ட் தாறுமாறா எகிறுத்துப்பா..... என்று புலம்புகிறவர்களுக்கு மத்தியில் எவ்வளவோ சாப்பிடுறேன் ஆனால் வெய்ட் மட்டும் ஏறவே மாட்டேங்குது... என்று புலம்புகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உடல் பருமன் எப்படி ஒரு பிரச்சனையோ அதை போல் உடல் மெலிந்து இருப்பதும் ஒரு பிரச்சனை தான். ஆனால் அதை பெரும்பாலும் சமூகம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

Try this simple halwa to gain your body weight

உடல் நிறை குறியீட்டெண் [Body Mass Index (BMI)] :

ஒருவருடைய உயரத்தையும் எடையையும் ஒப்பிடுகின்ற ஒரு அளவீடு பிஎம்ஐ ஆகும். இது

ஒரு ஆரோக்கியமான உடல் எடையை, உயரத்தின் அடிப்படையில் கணக்கிடும் ஒரு அளவீடாகும். இதன் மூலம் கணக்கிடுவது சுலபமாக இருப்பதால் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற ஒன்றாக இருக்கிறது. இந்த அளவீட்டின் மூலம் குறைந்த எடை, சரியான எடை , உடல் பருமன் என்ற மூன்றில் ஒரு தனி நபர் எந்த அளவில் இருக்கிறார் என்பதை அவராகவே புரிந்து கொள்ள முடிகிறது.

உடல் நிறை குறியீட்டெண் அளவீடு :

உங்கள் எடை மற்றும் உயரம் கொண்டு உடல் நிறை குறியீட்டெண்ணை எப்படி அளப்பது என்பதாக காண்போம்.

Try this simple halwa to gain your body weight

தேவை:

உங்கள் எடை(கிலோவில்)

உங்கள் உயரம் (மீட்டரில்)

1. உங்கள் எடை / உங்கள் உயரம் = விடை

(உங்கள் எடையை உங்கள் உயரம் கொண்டு வகுக்க வேண்டும்)

2. விடை / உங்கள் உயரம் = உடல் நிறை குறியீட்டெண்

(எண் 1 இல் கிடைத்த விடையை உங்கள் உயரம் கொண்டு மறுபடி வகுக்க வேண்டும். அதில் வரும் விடையே உங்கள் BMI )

16.5 க்குறைவாக இருப்பது கடுமையான எடைகுறைவு

16.5 - 18.4 இருந்தால் குறைவான எடை

18.5 - 24.9 இருந்தால் சரியான எடை

25 - 29.9 இருந்தால் அதிக எடை

30 - 35 இருந்தால் உடல் பருமன் முதல் நிலை

35 - 40 இருந்தால் உடல் பருமன் இரண்டாம் நிலை

40 க்கு மேல் இருந்தால் உடல் பருமன் மூன்றாம் நிலை

இந்த கணக்கீடு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே பொருந்தும்.

ஒல்லிப்பிச்சானா நீங்கள் ? இப்படி செய்தால் விரைவில் குண்டாகலாம் !!

உடல் பருமனை பற்றியும் அதனை குறைக்க மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் நாம் பல இடங்களில் கேட்டிருப்போம். இங்கு நாம் உடல் எடையை அதிகரிக்க சில இயற்கை வழிமுறைகளை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை பூசணிக்காய் அல்வா:

வெள்ளை பூசணிக்காய் அல்வா:

இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

வெள்ளை பூசணிக்காய் - 1 சிறிய துண்டு

வெல்லம் - 100கிராம்

உலர்ந்த திராட்சை - 1 கைப்பிடி

நெய் - தேவையான அளவு

வெல்லத்தை பாகு காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும். பூசணிக்காயை தோல் மற்றும் விதைகள் நீக்கி அறிந்து பசை ஆக்கி கொள்ளவும். உளர் திராட்சையை நீரில் ஊறவைத்து அதையும் பசை ஆக்கி கொள்ளவும்.

வெல்ல பாகில் அரைத்த பூசணிக்காயையும் திராட்சையையும் கலந்து வேக வைக்கவும். அதனுடன் நெய் சேர்த்து கிளறி அல்வா பதத்தில் இறக்கவும்.

ஒல்லியாக இருப்பவர்கள் சோர்வாக காணப்படுவார்கள். அவர்கள் முகம் ஒட்டியது போல் இருக்கும். இந்த அல்வாவை தினம் 1 ஸ்பூன் சாப்பிடும் போது முகம் பொலிவு பெற்று சோர்வு நீங்கும்.

வேர்க்கடலை வெண்ணெய்:

வேர்க்கடலை வெண்ணெய்:

உடலெடை அதிகமாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் நாடும் முதல் பொருள் வேர்க்கடலை. உண்பதற்கு சுவையானதாகவும் எல்லார் வீட்டிலுமொரு செல்ல பிள்ளையாகவும் இருப்பது வேர்க்கடலை. இதில் புரத சத்து அதிகமாக உள்ளது.

வெண்ணையில் வறுத்து சிறிது மிளகாய் தூள் உப்பு சேர்த்து ஒரு சிற்றுண்டியாக அப்படியே சாப்பிடலாம் அல்லது கடைகளில் இப்போது வேர்க்கடலையும் வெண்ணையும் கலந்த பேஸ்ட் கிடைக்கிறது .

அதனை சப்பாத்தியில் அல்லது தோசையில் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். 1 தேக்கரண்டி வேர்க்கடலை வெண்ணையில் 100கலோரிகள் உள்ளது.

இது தவிர மெக்னீசியம், போலிக் அமிலம், வைட்டமின் ஈ,வைட்டமின் பி போன்றவையும் இதில் கிடைக்கிறது.

எள்ளு:

எள்ளு:

நமது பெரியவர்கள் "இளைத்தவனுக்கு எள்ளு" என்று கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். இளைத்த உடலை உடையவர்கள் அவர்களது அன்றாட உணவில் எள்ளு பொடி, எள்ளு துவையல் போன்றவற்றை சேர்க்க வேண்டும். எள் உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் நல்ல மாற்றத்தை உணரலாம்.

நீராகாரம் :

நீராகாரம் :

அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் அல்லது குடற்புண் இருப்பர்வர்களுக்கு உடல் எடை அதிகரிக்காது. அவர்கள் தினமும் புழுங்கல் அரிசி சாதத்தில் வெந்தயம், சீரகம் சேர்த்து கஞ்சியாக்கி காலையில் குடிக்க வேண்டும்.

மதிய வேளையில் நிறைய மோர் குடிக்க வேண்டும். மாலையில் வாழை பழம் உண்ண வேண்டும். அப்படி செய்தால் வயிற்று புண் கட்டுப்பட்டு உடல் எடை கூடும். வாழை பழத்தில் 100 கலோரிகள் உள்ளது.

முட்டை:

முட்டை:

முட்டையில் அதிகமான புரத சத்து உள்ளது. தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டு வந்தால் நல்ல கொலெஸ்ட்ரோல், வைட்டமின் ஏ, டி, மற்றும் ஈ போன்ற சத்துகள் கிடைக்கும். இதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.

ஓட்ஸ்:

ஓட்ஸ்:

ஓட்ஸ் ஒரு ஊட்டச்சத்து உள்ள உணவு. இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இதனால் உடல் பருமனடையும். பால் பொருளான தயிரில் 118 கலோரிகள் இருக்கிறது. இதை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் வனப்புடன் எடையும் அதிகரிக்கும்.

கலோரிகள் அதிகமாக இருக்கிறது என்பதற்காக எல்லா உணவுகளையும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பதப்படுத்தப்பட்ட பொருட்களில் கலோரிகள் அதிகமாக இருக்கும் அதே சமயம் அதிலிருக்கும் ட்ரான்ஸ் கொழுப்பு தவிர்க்கப் பட வேண்டும்.

ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க செய்து வாழ்வில் ஆனந்தம் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try this simple halwa to gain your body weight

Try this simple halwa to gain your body weight
Story first published: Monday, July 31, 2017, 18:00 [IST]