உங்கள் மெனுவில் இருக்கிறது சுறுசுறுப்பின் ரகசியம்!

Posted By:
Subscribe to Boldsky

நம்முடைய அன்றாட உணவுகளில் அரிசி உணவு முக்கியமான இடத்தை வகிக்கிறது. மூன்று வேலையும் அரிசி உணவைத் தான் பெரும்பாலானோர் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைய இருக்கிறது.அவை, நம் உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது அது உடல் நலனுக்கு தீங்கை ஏற்படுத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோர்வு :

சோர்வு :

அரிசியைத் தவிர மற்ற பொருட்களிலும் கார்போஹைட்ரேட் நிறைய இருக்கிறது. கார்போஹைட்ரேட்டுடன் ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் சேர்ந்திருக்கும். இவற்றில் ப்ரோட்டீன் ஜீரணிக்க தாமதமாகும். மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைவாகும் போது நாம் சோர்வாகவே உணர்வோம்.

ஒபீசிட்டி :

ஒபீசிட்டி :

நாம் எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவு கூடும் போது ஒபீசிட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அரிசி உணவில் இருக்கும் கலோரி மட்டுமல்லாமல் பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ் எடுக்கிறோம். கார்போஹைட்ரேட் அதிக அளவு எடுத்துக் கொண்டு மற்றுச்சத்துக்கள் குறைவானாலும் உடல் நலனில் பிரச்சனை தான் ஏற்படும்.

கேஸ் தொல்லை :

கேஸ் தொல்லை :

கார்போஹைட்ரேட் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அவை செரிமானம் ஆக தாமதமாகும் இதனால் சரியாக செரிக்காது கேஸ் பிரச்சனை, வயிறு உப்பசம் அஜீரணம் போன்றவை ஏற்படும்.

கொலஸ்ட்ரால் :

கொலஸ்ட்ரால் :

ஏற்கனவே கார்போஹைட்ரேட்டிலும் குறிப்பிட்ட அளவு குளுக்கோஸ் இருக்கும். அவற்றுடன் மேலும் சர்க்கரை எடுக்கும் போது அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்திடும். இதனல் சர்க்கரை நோய், மாரடைப்பு போன்றவை ஏற்படும்.

என்ன செய்யலாம்? :

என்ன செய்யலாம்? :

இனிப்பு நிறைந்த தீனி வகைகள், சிப்ஸ், மாவுப் பொருட்கள், சாஃப்ட் டிரிங்ஸ் போன்றவற்றில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். இயற்கையாகவே கார்போஹைட்ரேட் இருக்ககூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள்,பழங்கள்,போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons For Avoiding Rice

If eating rice food causes drowsiness. Here is the reason.
Story first published: Friday, August 4, 2017, 17:04 [IST]