தினமும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு யூஸ் பண்றீங்களா? இதப் படிச்சா இனிமேல் யூஸ் பண்ணவே மாட்டிங்க!

Posted By:
Subscribe to Boldsky

உலக ஆராய்ச்சியாளர்களால் காலை உணவுக்கு சிறந்த உணவு என கூறப்பட்டுள்ள ஆரோக்கிய உணவு இட்லி. இதற்கு காரணம் இதில் எண்ணெய் கலப்பு இல்லை மற்றும் நீராவி மூலம் சமைக்கும் முறை தான்.

இதனால் செரிமான கோளாறோ, கொலஸ்ட்ரால் பிரச்சனையோ ஏற்படாது என்பதால் தான் இட்லி சிறந்த காலை உணவு என கூறப்படுகிறது.

Health Hazards of Eating Instant Idly Maavu

ஆனால், இன்று நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனம் போன்ற காரணத்தால் நாம் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கிறது என்பதை அறியாமலேயே நாம் அதை தினந்தோறும் பயன்படுத்தி வருகிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுகாதாரமின்மை!

சுகாதாரமின்மை!

முன்பெல்லாம் ஆட்டாங்கல்லில் தான் மாவு ஆட்டும் பழக்கம் இருந்து வந்தது. கிரைண்டர் வந்த பின் ஆட்டாங்கல் வீட்டில் காட்சி பொருளாகி போனது. பல வீடுகளில் அது வீட்டின் பின்புறத்தில் குப்பையாக தான் கிடைக்கிறது.

காணாமல் போன ஆட்டாங்கல்!

காணாமல் போன ஆட்டாங்கல்!

ஆட்டாங்கல்லில் மாவாட்டும் முன்னரும், மாவாட்டிய பிறகும் சுத்தமாக கழுவும் பழக்கம் நம் வீட்டு ஆட்களுக்கு இருந்தது. ஆனால், கடைகளில் விற்க அவர்கள் பயன்படுத்தும் பெரிய கிரைண்டர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது யாருக்கு தெரியும்?

ஈகோலி பாக்டீரியா!

ஈகோலி பாக்டீரியா!

மாவு ஆட்டும் போது, அதன் பிறகு கிரைண்டரை கழுவும் போதும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். இல்லையேல் ஈகோலி எனும் பாக்டீரியா தாக்கம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது மாவாட்டும் போது இட்லி, தோசை மாவில் அடைக்கலம் புகுந்துவிடுகிறது.

உடல்நலக் குறைபாடுகள்!

உடல்நலக் குறைபாடுகள்!

இந்த ஈகோலி பாக்டீரியா தாக்கத்தால் நாள்ப்பட வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலைசுற்றல் போன்ற உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

வேக வைத்தாலும் அழிவதில்லை!

வேக வைத்தாலும் அழிவதில்லை!

நீங்கள் எண்ணலாம், தினமும் இட்லி, தோசை தான் சாப்பிடுகிறோம்? பிறகு எப்படி உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று... இதற்கு எல்லாம் காரணம் நீங்கள் வெளி கடைகளில்வாங்கும் இட்லி மாவு தான்.

ஈகோலி எனும் பாக்டீரியா நீங்கள் மாவை வேக வைத்தாலும் கூட முழுமையாக அழிவதில்லை என்பது தான் சோகமே.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு!

இன்ஸ்டன்ட் இட்லி மாவு!

கடைகளில் வாங்கும் மாவினால் தான் இந்த பிரச்சனைகள் என்றால், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நாம் வாங்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு அதுக்கும் மேல ராகம்.

கால்சியம் சிலிகேட்!

கால்சியம் சிலிகேட்!

இன்ஸ்டன்ட் இட்லி மாவு சீக்கிரம் கேட்டுவிடக் கூடாது என கால்சியம் சிலிகேட் சேர்க்கின்றனர். இதனால் மாவு சீக்கிரம் கெடாது, புளித்து போகாது. ஆனால், இதன் காரணத்தால் உங்கள் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இதை தொடர்ந்து அஜீரண கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவை ஏற்படும்.

சிந்தியுங்கள்!

சிந்தியுங்கள்!

காசுக் கொடுத்து உடல்நலக் கோளாறுகள், ஆரோக்கியமின்மை போன்றவற்றை விலைக்கு வாங்க வேண்டுமா? அரை மணிநேரம் செலவிட்டால் இட்லி மாவு வீட்டிலேயே அரைக்கலாம். ஆனால், 20 - 30 ரூபாய்க்கு கிடைக்கிறது என கடைகளில் வாங்கி சாப்பிடுகிறோம்.

இது மட்டுமா? இரண்டு நிமிடம் தட்டி போட்டால் இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெடி. ஆனால் அதைக் கூட நாம் அஞ்சு, பத்து கொடுத்து பாக்கெட்டில் தான் வாங்குகிறோம். நீங்கள் பாக்கெட்டில் வாங்கும் அனைத்துமே உடல் நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Hazards of Eating Instant Idly Maavu

Health Hazards of Eating Instant Idly Maavu
Please Wait while comments are loading...
Subscribe Newsletter