நீங்க சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் ஆரோக்கியமானது தானா? வியக்கத்தக்க உண்மைகள்!

Written By:
Subscribe to Boldsky

இன்று அதிகமாக எண்ணெய்களை உணவில் சேர்த்துக் கொள்வது என்றாலே பலர் பயந்து நடுங்குகின்றனர். அதிலும் சிலர் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு சில எண்ணெய் வகைகளை வாங்குகின்றனர்.. ஆனால் உண்மையில் எந்த எண்ணெய்யை தான் வாங்கிப்பயன்படுத்துவது என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.

கொழுப்புச் சத்துக்கள், உணவுகளின் மூலமாக பலவகைகளில் உடலில் சேர்கின்றன. தானியங்கள், பால் முதலானவை கண்ணுக்குப் புலப்படாத கொழுப்பு சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. எண்ணெய், நெய் முதலானவை கண்ணுக்குப் புலப்படும் கொழுப்பு சத்துக்களைக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் செறிவுறா கொழுப்பு அமிலங்களைக் கொண்ட கொழுப்புகள் நன்மையைக் கொடுக்கும். செறிவுறும் கொழுப்பு அமிலங்களைக் கொண்ட கொழுப்புகள், தீமையைக் கொடுக்கும். உடலில் தேவையற்ற இடத்தில் படிந்து நோய்களை உருவாக்கும். தீமை தரும் கொழுப்புகள், பெரும்பாலும் மாமிச உணவுகளிலிருந்துதான் பெறப்படுகின்றன. இந்த பகுதியில் கடலை எண்ணெய்யின் முக்கியத்தும் பற்றி விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடலை எண்ணெய்

கடலை எண்ணெய்

கடலை எண்ணெய் என்பது வேர்கடலையை நசுக்கி வடிகட்டி எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இந்த கடலை எண்ணெய் தான் சமையலில் அதிகம் பயன் படுத்தப்படும் எண்ணெய் ஆகும். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட பின்னர் இளம் மஞ்சள் நிறமாக இருக்கும். கடலை எண்ணெய் தான் பொறித்து எடுக்க உகந்த எண்ணெய் ஆகும். இதன் கொதிநிலையானது 230 டிகிரியாகும் எனவே இது தான் பாதுகாப்பான சிறந்த எண்ணெய்.

ரீபைண்ட் ஆயில் :

ரீபைண்ட் ஆயில் :

ரீபைண்ட் ஆயில் உங்களுக்கு அந்த அளவுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. ரீபைண்ட் ஆயிலில் கடலையில் இருக்கும் அலர்ஜியை அளிக்கும் பகுதிகள் நீக்கம் செய்யப்படுகின்றன. இந்த வகையான எண்ணெய்களை தான் ரெஸ்டாரண்டுகளில் சிக்கன், பிரஞ்ச் பிரைஸ் போன்ற உணவுகளை வறுக்க பயன்படுத்துகிறார்கள்.

கோல்டு பிரஸ்ட் ஆயில் :

கோல்டு பிரஸ்ட் ஆயில் :

இந்த முறையில் கடலைகளுக்கு அழுத்தம் தரப்படுகிறது. இது மிகவும் குறைவான வெப்பநிலையில் கடலையில் இருந்து எண்ணெய்யை எடுக்க பயன்படும் ஒரு முறையாகும். இதில் ரிபைண்டு ஆயிலை விடவும் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

செக்கு எண்ணெய்

செக்கு எண்ணெய்

செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவது என்பது மிகவும் ஆரோக்கியமானதாகும். ஆனால் இது சற்று விலை அதிகமானது. இதனை பொரிப்பதற்கு பயன்படுத்துவது என்பது மிகவும் நல்லதாகும்.

கலோரிகள்

கலோரிகள்

கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரி சக்தி கிடைக்கிறது.

கொழுப்புகள் சேராது

கொழுப்புகள் சேராது

அதிக அளவில் லிப்பிடுகள் நிறைந்தது. பூரிதமான கொழுப்புகள் உடலில் சேரவும், கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உடலில் சேராமல் காக்கவும் உதவுகிறது.

ஒமேகா 6

ஒமேகா 6

'ஒமேகா 6' எனப்படும் கொழுப்பு அமிலம் நிறைந்தது கடலை எண்ணெய்.

கொழுப்பை அகற்றும்

கொழுப்பை அகற்றும்

'பீட்டா சிட்டோஸ்டிரால்' எனும் துணை ரசாயன பொருள் கடலை எண்ணெயில் உள்ளது. இது கொலஸ்டிராலை அகற்றும் தன்மை கொண்டது.

கடலை எண்ணெயில்'வைட்டமின்-இ' அதிகம் உள்ளது. இந்த விட்டமின் இ ஆனது உங்களது உங்களது சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

போலிக் அமிலம்

போலிக் அமிலம்

இதில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. போலிக் அமிலம் குறைவாக இருந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைந்து விடும். இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச் சத்துக் குறைவதால் இரத்த சோகை நோய் ஏற்படும்.

உடல் உஷ்ணத்திற்கு..

உடல் உஷ்ணத்திற்கு..

2 ஸ்பூன் கடலை எண்ணெய்யுடன் அரை மூடி அளவு எழுமிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை வாரம் ஒருமுறை உடல் முழுவதும் தேய்த்து குளிப்பதால் தோல் சுருக்கம் வராமல் பாதுகாக்கும். கடலை எண்ணெய்யை உணவின் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்துகிறோம். பாதாம் எண்ணெய்யை விட மிகுந்த சத்துக்கள் உடையது. உணவுடன் சேர்த்துக் கொண்டால் நல்ல கொழுப்பு கிடைக்கும். உஷ்ணத்தை தருவதுடன் தோலுக்கு பளபளப்பை கொடுக்கும்.

ஊட்டச்சத்துகளின் அளவு

ஊட்டச்சத்துகளின் அளவு

ஒரு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்யில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

  1. கலோரிகள் : 119
  2. கொழுப்பு : 14 கிராம்
  3. நிறைவுற்ற கொழுப்பு (Saturated fat): 2.3 கிராம்கள்
  4. நிறைவுறாத (Monounsaturated fat) : 6.2 கிராம்
  5. பாலி அன்சட்டுரேட்டேட் கொழுப்பு (Polyunsaturated fat) : 4.3
  6. விட்டமின் இ : 11%
  7. Phytosterols: 27.9 mg
பொரிப்பதற்கு உகந்தது:

பொரிப்பதற்கு உகந்தது:

கடலை எண்ணெய்யில் அதிகளவு நிறைவுறாத (Monounsaturated fat) உள்ளது. எனவே இது அதிக வெப்பநிலையில் சமைக்க வேண்டிய உணவுகளுக்காக இதனை பயன்படுத்துவது சிறந்தது. இதில் அதிகளவு விட்டமின் இ உள்ளது. இந்த விட்டமின் இ-யில் அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

கேன்சரில் இருந்து பாதுகாக்க

கேன்சரில் இருந்து பாதுகாக்க

கடலை எண்ணெய்யில் உள்ள அதிகளவு ஆன்டி- ஆக்ஸிடண்டுகளானது, உங்களுக்கு இருதய நோய், சில வகையான கேன்சர்கள், வயது சமந்தமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க உதவுகிறது.

தினசரி தேவை :

தினசரி தேவை :

உங்களது தினசரி தேவையான விட்டமின் இ-யின் அளவில் 11% உங்களுக்கு வேறும் ஒரு டீஸ்பூன் கடலை எண்ணெய்யிலிருந்தே கிடைத்துவிடுகிறது.

இருதய பிரச்சனைகள்

இருதய பிரச்சனைகள்

இந்த கடலை எண்ணெய்யில் உள்ள அதிகளவு ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் மற்றும் விட்டமின் இ ஆகியவை உங்களது இருதய பிரச்சனைகளை குறைக்க உதவுகின்றன. மேலும் இது இன்சுலின் குறைபாடுகளையும் சரி செய்ய உதவுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு..

கர்ப்பிணி பெண்களுக்கு..

போலிக் அமிலம் கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் தவறாது கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால், மகப்பேறு எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நீரிழிவு நோய் ஏற்படுவதை தவிர்க்கிறது.

இதய வால்வுகளை பாதுகாக்க

இதய வால்வுகளை பாதுகாக்க

நிலக்கடலையில் உள்ள ரெஸ்வாரட்ரால் என்ற சத்து இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

இளமை தோற்றம்

இளமை தோற்றம்

இளமைத் தோற்றத்தை நீண்ட நாட்கள் பராமரிக்கிறது. கடலை எண்ணெயில் உள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி, ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகிறது. ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக தருகிறது. மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டி, நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

குறைகள்

குறைகள்

கடலை எண்ணெய்யில் அதிகளவு நிறைகள் இருந்தாலும் கூட, இதில் சில குறைகளும் உள்ளன. அதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதில் பிரோ- இன்பிளமெண்டரி ஒமேகா-6 பேட்டி ஆசிட்டுகள் (pro-inflammatory omega-6 fatty acids) உள்ளது. எனவே இது சில உடல் நல கோளாறுகளையும் தரலாம். ஆனால் இது சந்தைகளில் கிடைக்கும் எண்ணெய்களில் வைத்து ஆரோக்கியமானது தான்.

தேவைப்பட்டால், நீங்கள் இதற்கு மாற்றாக ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.

வறுவலுக்கு...!

வறுவலுக்கு...!

வறுவலுக்கு ரீஃபைண்டு செய்யப்படாத கடலை எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். பொரிப்பதற்கு மக்காச்சோள எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயைத் தாளிப்பதற்கும், தோசை சுடுவதற்கும், உணவில் நேரடியாகச் சேர்த்துக் கொள்வதற்கும் பயன்படுத்தலாம். வறுவல் போன்ற விஷயங்களுக்கு வேண்டாம். எந்த எண்ணெயாக இருந்தாலும், சரியாக காயாவிட்டாலும் ஆபத்து... அதிகம் காய்ந்தாலும் அதாவது புகையும் அளவுக்கு கொதிக்கவிட்டாலும் ஆபத்துதான்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ரீஃபைண்டு செய்யப்படாத எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயைப் பயன்படுத்தும்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு நபர் தன் உணவில் 10 முதல் 20 மில்லி வரை பயன்படுத்தலாம். நீரிழிவு, உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, இதய நோயாளிகள் கண்டிப்பாக 5 முதல் 10 மில்லிக்குள்தான் பயன்படுத்த வேண்டும். மொத்தத்தில் ரீஃபைண்டு செய்யப்பட்ட எண்ணெய்கள், பாமாயில், வனஸ்பதி, நெய் இவற்றைச் சமையலில் சேர்க்காமல் தவிர்ப்பது நல்லது.

தலைக்கு தேய்த்து குளிக்க

தலைக்கு தேய்த்து குளிக்க

தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சீரகம், மிளகுப்பொடி கால் ஸ்பூன் சேர்த்து தைலபதத்தில் காய்ச்ச வேண்டும். இதை தலைக்கு தேய்து குளித்தால் பொடுகு வராது.எள்ளில் இருந்து கிடைக்க கூடியது நல்லெண்ணெய். இதை தலைக்கு தேய்த்து குளிப்பதால் பொடுகு இல்லாமல் போகும். கொழுப்பு சத்து நிறைந்தது. உள் உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. வெறும் வயிற்றில் தினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

வாய் கொப்பளிப்பதால் பற்கள் ஆரோக்கியம் பெறும். கன்னம் பலம் அடையும். முக வசீகரம் ஏற்படும். நல்லெண்ணெய் உணவுக்கு பயன்படுவதோடு, சனிக்கிழமைதோறும் உடலுக்கு தேய்த்து குளிப்பதால் தோல் ஆரோக்கியம் பெறும். தோல்நோய்கள் இல்லாமல் போகும். தேங்காய் எண்ணெய்யின் மருத்துவ குணங்களை பார்ப்போம். தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை இருக்காது. முடி பளபளப்பாகவும், கருப்பாகவும் இருக்கும்.

இளநரைக்கு...

இளநரைக்கு...

தேங்காய் எண்ணெய்யுடன், கருவேப்பிலையை நீர்விடாமல் பொடித்து சேர்க்கவும். தைலப்பதத்தில் காய்ச்சி தலைக்கு தடவுவதால் முடி கருப்பாகிறது. பொடுகு இல்லாமல் போகிறது. இளநரை தடுக்கப்படுகிறது. தலைக்கு ஆரோக்கியம் கிடக்கிறது. தலைமுடி நன்றாக வளரும்.நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நாம் அன்றாடம் பயன்படுத்தும்போது பல்வேறு நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

health benefits of Peanut Oil

health benefits of Peanut Oil
Story first published: Tuesday, November 28, 2017, 13:14 [IST]