TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
பல நோய்களில் இருந்து விடுதலை தரும் இந்த இலையை நீங்க சமையலுக்கு யூஸ் பண்ணறீங்களா?
கொத்தமல்லியை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு கொத்தமல்லி மிகவும் பிரபலமானது...! ஆனால் பலருக்கு கொத்தமல்லியின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி முழுமையாக தெரியாது. கொத்தமல்லியை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டால், வாசனைக்கான என்று தான் சொல்வார்கள்...
ஆனால் நமது முன்னோர்கள் கொத்தமல்லியை வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தவில்லை.. கொத்தமல்லி இலை மற்றும் அதனுடைய விதையில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் உள்ளன. கொத்தமல்லி அந்த அளவிற்கு விலை உயர்ந்ததும் கிடையாது...!
கொத்தமல்லியை நீங்கள் சிறிதளவு மணல் கலந்த மண்ணில், கொத்தமல்லி விதைகளை தூவி, தினமும் நீர் ஊற்றி வீட்டிலேயே வளர்க்கலாம். உங்களது தினசரி தேவைக்கான அளவு கொத்தமல்லி இலையை நீங்கள் உங்களது வீட்டிலே பயிர்செய்யலாம்.. இதனால் உங்களுக்கு பிரஷ் ஆன, வாசனை மிக்க கொத்தமல்லி வீட்டிலேயே கிடைக்கும். இந்த பகுதியில் கொத்தமல்லியை அழகு மற்றும் ஆரோக்கியத்திற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி விரிவாக காணலாம்.
1. இரத்த சர்க்கரை அளவு
இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.
2. கர்ப்பிணிகளுக்கு..
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள்பற்கள் உறுதி அடையும்.
3. எலும்பு மற்றும் தசைகளுக்கு
கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு ,எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.
4. நிம்மதியான தூக்கம்
இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும். உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும்.
5. சத்துக்கள்
கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.
6. மாரடைப்பு ஆபத்து
உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது.
7. கண்பார்வை
கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் இந்த பிரச்சனை நீங்கும்.
8. இரத்தத்திற்கு..
ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.
9. குழந்தை ஆரோக்கியமான பிறக்க
கர்ப்பிணிகள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.
10. மூக்கு சம்பந்தமான பிரச்சனைகள்
பீனிசம், மூக்கடைப்பு, மூக்கில்புண், மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். தோல் நோய்களை குணமாக்குகிறது.
11. களைப்பு
4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடித்தால், உடல் சூடு தணியும். களைப்பும் காணாமல் போயிடும்
12. கொத்தமல்லி விதை
ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாக்கு வறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.
13. புண்களுக்கு..
புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி விதையை பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.
14. தலைசுற்றல்
கொத்துமல்லி இலை, சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்ததினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும்.
15. எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?
தினசரி உணவில் தவறாது கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். துவையல்,தொக்கு, கொத்தமல்லி சாதம்,ரசம், கொத்தமல்லி கீரை ஜூஸ் என ஏதோ ஒரு விதத்தில் உட்கொண்டு வாருங்கள். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
16. மென்மையான சருமம்
உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
17. கரும்புள்ளிகள்
மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், 1 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு மற்றம் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் அகலும்.
18. தடிப்புகள்
சிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
19. கருப்பான உதடுகள்
உதடு கருப்பாக, உள்ளவர்கள் இந்த வழி உங்களுக்கு உதவியாக இருக்கும். தினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலனைக் காண அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்துங்கள்.
20. சரும பொலிவு
சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்கு அடித்து, பின் அதில் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.