ஒரே பழத்தில் இத்தனை நன்மைகள் என்றால் நீங்க இத சாப்பிடாமா இருப்பீங்களா? என்ன?

Written By:
Subscribe to Boldsky

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியது மிகவும் அவசியம். என்ன தான் வாங்கி கொடுத்தாலும் இந்த குழந்தைகள் சாப்பாட்டு விஷயத்தில் அடம் பிடிக்கிறார்களே என்று நினைத்து வருந்தும் பெற்றோரா நீங்கள்? குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பது என்பது ஒரு சாதாரணமான விஷயம் தான்...

அதே சமயம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாத ஒரு பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகளின் ஆரோக்கியமும் ஊட்டச்சத்து தேவைகளும் புர்த்தியடைய வேண்டும் என்றால் நீங்கள் குழந்தைகளுக்கு தினமும் ஒரு பழத்தை சாப்பிட வேண்டிய பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்...

அப்படி உங்களது குழந்தைகளுக்கு என்ன பழம் கொடுக்கலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? நிறைய ஆரோக்கிய நலன்களை தன்னுள் அடக்கியது தான் மாதுளை..

give this one fruits to your kids for healthy life

இந்த மாதுளையை தினமும் உங்களது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அவர்கள் எண்ணிலடங்காத ஆரோக்கிய நன்மைகளை பெறுகின்றனர். மேலும் இதனை குழந்தைகள் மட்டுமில்லாமல் நீங்களும் சாப்பிடலாம். இந்த பகுதியில் மாதுளையின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. செரிமானம்

1. செரிமானம்

மாதுளை செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். எனவே உங்கள் குழந்தைக்கு ஏதேனும் செரிமான பிரச்சனை இருப்பின், இப்பழத்தை கொடுங்கள் விரைவில் குணமாகும்.

2. வயிற்று புழுக்கள்

2. வயிற்று புழுக்கள்

குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்கும். இப்படி வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் உணவுகளை புழுக்கள் உறிஞ்சிவிடும். ஆனால் மாதுளை ஜூஸை அடிக்கடி கொடுப்பதன் மூலம், குடல் புழுக்களை அழித்து வெளியேற்றலாம்.

3. காய்ச்சல்

3. காய்ச்சல்

மாதுளை ஜூஸ் காய்ச்சலைக் குணப்படுத்த உதவும். மேலும் இதில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. குறிப்பாக இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவை வருவதைத் தடுக்கும்.

4. பல் பிரச்சனை

4. பல் பிரச்சனை

மாதுளை குழந்தைகளின் பற்களில் உள்ள பிரச்சனைகளைப் போக்க உதவும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-வைரஸ் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் தான் காரணம்.

5. நோய்க்கிருமிகள்

5. நோய்க்கிருமிகள்

மாதுளையில் பாக்டீரியா, நுண்ணுயிரிகள் மற்றும் அழற்சிகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. ஆகவே இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், அவர்களது உடலானது நோய்க்கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும்.

6. மன அழுத்தம்

6. மன அழுத்தம்

உடலில் நைட்ரிக் ஆக்சைட் (Nitric Oxide) என்னும் தனிமம் குறையும்போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டது. இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும்.

7. உடற்பயிற்சி

7. உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.

8. புற்றுநோய்

8. புற்றுநோய்

மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்' (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.

9. காயங்கள் குணமாக..

9. காயங்கள் குணமாக..

மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதாலும், அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகும். அத்துடன் தழும்புகளும் மறையும்.

10. முடி வளர்ச்சி

10. முடி வளர்ச்சி

மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

11. அல்சைமர்

11. அல்சைமர்

தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

12. முதுமையை தள்ளிப்போடும்

12. முதுமையை தள்ளிப்போடும்

முதுமையை தள்ளிப்போடும் பெரும்பாலான `ஆன்டி ஏஜிங்' சீரம் மாதுளம்பழத்தின் கொட்டைகளில் இருந்துதான் தயாராகிறது. பழமாகச் சாப்பிடும்போது அதைவிட அதிகப் பலன்கள் கிடைக்கும்.

13. மூளை வளர்ச்சி

13. மூளை வளர்ச்சி

அயல்நாடுகளில், பிறந்த குழந்தையின் மூளையில் எந்தப் பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.

14. சர்க்கரை நோய்

14. சர்க்கரை நோய்

மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

15. கருவுறுதல் பிரச்சனை

15. கருவுறுதல் பிரச்சனை

திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

16. மெனோபாஸ்

16. மெனோபாஸ்

மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.

17. ரத்த அழுத்தம்

17. ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச் சாற்றை அருந்தினால், ரத்த அழுத்தம் குறையும்.

18. ஈறு பிரச்சனைகள்

18. ஈறு பிரச்சனைகள்

சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஆய்வாளார்கள்.

19. இதயம்

19. இதயம்

தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

give this one fruits to your kids for healthy life

give this one fruits to your kids for healthy life
Story first published: Friday, November 24, 2017, 10:30 [IST]