உடலில் தேங்கி இருக்கும் சளியை அகற்ற பூண்டை எப்படி உட்கொள்ள வேண்டும்?

Posted By:
Subscribe to Boldsky

சுவாச மண்டல / பாதை கோளாறு மற்றும் உடலில் அதிக பாக்டீரியா தொற்று இருந்தால் தான் இருமல் வரும். உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தி குறைவாக இருந்தால் இருமல் குணமாக ஒருசில நாட்கள் அதிகமாகும்.

நுரையீரல் போன்ற உறுப்புகளில் பாக்டீரியா தொற்று, சளி அதிகம் தேங்கி இருத்தல், தொண்டை அழற்சிகள் இருந்தாலும் இருமல் உண்டாகும். இருமல், சளி உண்டாகும் போது உடலில் கண் எரிச்சல், தலைவலி போன்றவையும் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது.

இதற்கு சிரப் குடிப்பதற்கு பதிலாக, இதற்கு மாற்றாக ஒரு சிறந்த இயற்க்கை வைத்தியம் இருக்கிறது. அது தான் வெங்காயம், பூண்டு ஜூஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நுகர்வு!

நுகர்வு!

நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் நுகர்வு திறன் உள்ள சிறந்த உணவு பொருள் வெங்காயம் மற்றும் பூண்டு. இது உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமின்றி ஆரோக்கியத்தை அதிகரிக்க சிறந்த சத்துக்களும் கொண்டுள்ளது.

இதில் இருக்கும் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடெண்ட் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

மேலும், வெங்காயத்தில் இருக்கும் சல்பர் காம்பவுண்டுகள் சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக். இவை வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து வலுவாக சண்டையிடும். இதனால் தான் உணவில் வெங்காயத்தை ஒதுக்க வேண்டாம் என கூறுகிறார்கள்.

இருமலுக்கு எப்படி உதவும்?

இருமலுக்கு எப்படி உதவும்?

வெங்காயத்தில் இருக்கும் மூலப் பொருட்கள் சளியை கரைக்கவும், சுவாச பாதையை ஆரோக்கியப்படுத்தி சுவாச கோளாறுகளை குணப்படுத்தி, இருமலும் குறைய உதவுகிறது.

பூண்டு நூறு வருடங்களுக்கும் மேலாக ஒரு மருத்துவ உணவாக காணப்பட்டு வருகிறது. உலகின் பல கலாச்சாரங்களில் பூண்டை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதை நாம் அறிய முடிகிறது.

இதில் இருக்கும் அன்டி பயாடிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் போன்றவை இருமலை ஏற்படுத்தும் கிருமிகளை கொல்கிறது. மேலும், சுவாச பாதையில் இருக்கும் தொற்றுகளை நீக்கி சளி மற்றும் இருமல் பிரச்சனை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.

பூண்டு, வெங்காயம்!

பூண்டு, வெங்காயம்!

இதமான நீரில் பூண்டு, வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸை பருகுவதால் இருமல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண முடியும். இது பக்கவிளைவுகள் அற்றது. இயற்கையான முறையில் நல்ல தீர்வளிக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், மீண்டும், மீண்டும் இந்த தொந்தரவு வராது.

 ஜூஸ்!

ஜூஸ்!

தேவையான பொருட்கள்!

 • இரண்டு கப் நீர் (500 மில்லி அளவு)
 • மீடியம் அளவிலான வெங்காயத்தில் பாதி.
 • இரண்டு பூண்டு பல்

செய்முறை:

 1. இரண்டு கப் நீரை கொதிக்க வைக்கவும் (மீடியமான சூட்டில்).
 2. வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
 3. நீர் கொதித்தவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டை அதில் சேர்க்கவும்.
 4. சூட்டின் அளவை குறைத்துக் கொண்டு (5 நிமிடம் வேக வையுங்கள்)
 5. பிறகு அறையின் தட்பவெப்ப நிலையில் ஆற வையுங்கள்.
 6. ஆரிய பிறகு குடிக்கவும்.

உட்கொள்ளும் முறை!

 1. பாதி கப் அளவு குடித்தால் போதுமானது. குடிக்கும் அளவு சூடு இருக்கும் படியான நிலையில் பருகவும்.
 2. இருமல் ஏற்படும் முதல் நிலையிலேயே நீங்கள் இதை குடிக்கலாம்.
 3. ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு முறை குடித்து வரலாம். இருமலின் அளவை சார்ந்து நீங்கள் உட்கொண்டால் போதுமானது.
 4. இருமல் சரியாகும் வரை இதை நீங்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வரலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Garlic and Onion Recipe To Cure Against Cough!

Garlic and Onion Recipe To Cure Against Cough!
Subscribe Newsletter