அலுவலக நேரங்களில் சாப்பிடக்கூடாத உணவு பட்டியல்

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

பெரும்பாலான இடங்களில் வேலை நேரம் என்பது காலை 9மணிமுதல் மாலை 5 மணி அல்லது 6 மணி வரை இருக்கும். அந்த வேலை நேரத்தில் நாம் தொடர்ந்து

பணிகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தில் இருந்து கொன்டே இருப்போம். தொடர்ந்து செய்யும் வேலைகளுக்கு இடையில் ஒரு இடைவெளி நல்லது என தோன்றும்.

சில அலுவலகங்களில் டீ , காஃபீ போன்ற பானங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நமக்கு கொடுக்கப்படும். இதன் மூலம் மூளை புத்துணர்ச்சி அடைந்து மறுபடியும் வேலைகளில் மூழ்கி விடுவோம்.

சிலர் டீ, காஃபீயுடன் கொறிக்கும் பழக்கத்தையும் கொண்டிருப்பர். சிப்ஸ், பிஸ்கேட் போன்றவற்றை நாள் முழுதும் மேஜையின் டிராயரில் வைத்து கொண்டு கொரித்துகொன்டே இருப்பர். இது உடலுக்கு மிகவும் கெடுதல். நாம் செலவு செய்யும் ஆற்றலைவிட நாம் உட்கொள்ளும் கலோரிகள் அதிகமாகிறது.

Foods that you should avoid during office hours

இதன் மூலம் உடல் பருமன் அடைகிறது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்கள் கலோரிகள் அதிகமாக இருக்கும் உணவு பொருட்களை சிற்றுண்டியாக எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

அப்படிப்பட்ட உணவுகள் உடலில் எந்த கடினமான உழைப்பும் இல்லாததால் எரிக்கப்படாமல் உடல் எடையை கூட்டுகின்றன. ஆகையால் கலோரிகள் குறைவாக அதே சமயத்தில் நம்மை சத்துகளோடு வைத்திருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுவோம்.

இங்கு சில உணவு பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை உங்கள் அலுவல் நேரங்களில் உண்ணாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஜங்க் உணவுகளை தவிர்த்திடுங்கள்:

ஜங்க் உணவுகளை தவிர்த்திடுங்கள்:

ஜங்க் உணவுகள் என வரும்போது அனைவரும் உணவு இடைவேளை அல்லது சிற்றுண்டி இடைவேளையில் விரும்பி உண்ணவுவது, சிப்ஸ், மிக்ச்சர் போன்ற வஸ்துக்களை. இல்லை பிரெஞ்சு பிரை ,நுகெட்ஸ் போன்றவற்றை உண்பதில் ஆர்வம் காட்டுவர்.

இவற்றை விடுத்து, ஒரு சில பிரட் துண்டுகள் அல்லது, சிறு தானியங்கள் , அல்லது காய்கறிகள் அல்லது பழங்களால் செய்த சாலட்களை எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டு உணவுகள்:

வீட்டு உணவுகள்:

வெளி உணவுகளில் ஜங்க் உணவுகளை தவிர்க்க இயலாது. ஆகையால் அதிலிருந்து விலக்கு பெற வீட்டில் சமைத்த உணவுகள் தான் சிறந்த தீர்வு.

இதில் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பல மடங்கு அதிகம் இருக்கிறது. சுவையும் மிகுந்து காணப்படும். நமது விருப்பத்திற்கு ஏற்ற உணவுகளை தினம் எடுத்து செல்லலாம். இதனால் புட் பாய்சனிங் போன்ற தொல்லைகள் ஏற்படாது. நம் கையிலேயே ஸ்னாக்ஸ் இருக்கும்போது வெளி உணவுகளை நமது வயிறு தேடாது.

 நீர்ச்சத்தோடு இருங்கள்:

நீர்ச்சத்தோடு இருங்கள்:

நீங்கள் வேலை செய்யும் இடத்தில நிச்சயம் ஒரு தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். உணவு உண்ணுவதற்கு முன்னும் பின்னும் ஒரு சிறு இடைவெளியில் நிறைய தண்ணீர்

பருகுங்கள். மற்ற நேரங்களில் அடிக்கடி சிறிய அளவில் தண்ணீர் பருக முயற்சியுங்கள்.

இதனால் உடலில் நீர் சத்தின் குறைவு ஏற்படாமல் இருக்கும். தண்ணீரில் கலோரிகள் கிடையாது. வேண்டும் அளவிற்கு நாம் தண்ணீர் குடிக்கலாம். இதன்மூலம் நமது ஆற்றல் அதிகரிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பலரும் குளீரூட்டப்பட்ட அறைகளில் தான் வேலை செய்கிறோம். அதனால் நமது தோல் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடுகிறது. தண்ணீர் அருந்துவது வறட்சிக்கு ஒரு தீர்வாக இருக்கிறது.

குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது:

குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது:

சோடா, எனர்ஜி பானங்கள் , பாக்கெட் ஜூஸ் , கஃபீன் அதிகமுள்ள பானங்கள் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. இவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இது

நம் உடலை பாதிக்கும். சாதாரணமாக பருகும் டீ அல்லது காபீயில் சர்க்கரையின் அளவை குறைத்து பயன்படுத்துவது நன்மை பயக்கும். கருப்பு காஃபீ அல்லது க்ரீன் டீ

பயன்பாடு மிகவும் சிறந்தது. இவற்றில் கலோரியின் அளவும் குறைந்து காணப்படும். உடலுக்கும் ஆரோக்கியமானதாகும். இதன் மூலம் நமது ஆற்றலும் அதிகரிக்கிறது.

மற்ற ஸ்னாக்ஸ்கள் :

மற்ற ஸ்னாக்ஸ்கள் :

நமது மேஜை ட்ராயரில் வைக்க சிப்ஸ் , பிஸ்கெட் தாண்டி பல உணவுகள் உள்ளன. இவற்றை உண்டு பாருங்கள். இதனை அதிகமாக எடுத்து கொள்வதால் எந்த ஒரு எதிர்மறை வினையும் வராது. அவை, பைன் கொட்டைகள் , ஆளி விதைகள் ,பாதாம், அக்ரூட் , காய்ந்த திராட்சை, கொண்டை கடலை வறுத்தது போன்றவை தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும், வயிற்றையும் நிரப்பும்.

 இன்னும் சில ஆரோக்கிய உணவுகள்:

இன்னும் சில ஆரோக்கிய உணவுகள்:

வேறு என்ன உணவுகள் எடுத்து கொள்ளலாம் என்று இன்னும் யோசனையா? மேலும் சில ஆரோக்கிய சிற்றுண்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவைகளையும் அறிந்து கொள்ளலாம்.

தேங்காயை சின்ன சின்னதாக வெட்டி ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளலாம். இவற்றில் நார்ச்சத்தும் , நல்ல கொழுப்புகளும் உண்டு. (குறிப்பு: சமைத்த தேங்காயில் தான்

கொலஸ்ட்ரால் பற்றிய பயம் உண்டு)

எந்த ஒரு சுவையூட்டிகளும் சேர்க்கப்படாத வீட்டில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ். பொட்டுக்கடலை அல்லது உப்புக்கடலை ,குறைந்த கலோரிகள் கொண்டது. சுவையும் அதிகமாக இருக்கும்.

கெட்டியான தயிர் எடுத்து கொள்வதனால் நல்ல பாக்டீரியாக்கள் நமது வயிற்றை நிரப்புகின்றன . இவற்றில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது.

கருப்பு சாக்லேட் , இது நம்மை ஆற்றலுடன் புத்துணர்ச்சியாக உணர வைக்கிறது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி . ஆனால் இதனை அதிகமாக சாப்பிடக்கூடாது.

ப்ரோடீன் பார், இது பெயருகேற்றது போல் அதிக அளவில் புரத சத்துக்களை கொண்டிருக்கும். இதனால் நாள் முழுவதும் ஆற்றல் இருப்பதாய் நம்மால் உணர முடியும்.

நட்ஸ்களின் கலவை , பாதம், பிஸ்தா, ஆளி விதை, போன்றவற்றை ஒன்றாக கலந்து அந்த கலவையை சுவைக்கலாம்.

பழங்கள் , வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, போன்ற பழங்கள் அதிக ஆரோக்கியத்தை கொடுக்கும். இவற்றில் நார்ச்சத்தும் ஊட்டச்சத்தும் மிகவும் அதிகம். இதன்

உட்கொள்ளலாம் வயிறும் நிரம்பும்.

உணவின் அளவை சரிபார்க்கவும்:

எந்த விதமான உணவுகளை சாப்பிட்டாலும், அதன் அளவை சரி பார்ப்பது நல்லது. வயிற்றுக்கு தேவையான அளவை மட்டுமே உண்ணுவது நல்ல செரிமானத்தை

கொடுக்கும். ஆரோக்கியமான உணவு என்பதால், வயிறு கேட்பதை விட அதிகமாக உண்ணும் போது, தேவையில்லாத சங்கடங்களை உடல் சந்திக்கும். அதிகம் சாப்பிட்டு ,

பிறகு கஷ்டப்படுவதை விட, தேவையான அளவு சாப்பிட்டு ஆனந்தமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods that you should avoid during office hours

Foods that you should avoid during office hours
Story first published: Monday, August 28, 2017, 15:22 [IST]
Subscribe Newsletter