Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஹார்மோன் பிரச்சனைகளை உண்டாக்கும் 6 ஆரோக்கிய உணவுகள்!
இங்கு உடலில் ஹார்மோன் பிரச்சனைகளை உண்டாக்கும் உணவுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
எல்லா விஷயங்களும் எப்படி எல்லாருக்கும் நல்லதாக அமைவதில்லையோ, அப்படி தான் எல்லா ஆரோக்கிய உணவுகளும் அனைவருக்கும் ஆரோக்கியம் அளிப்பதில்லை. இதற்கு காரணம் ஒவ்வொருவரின் உடல் நிலையும், ஹார்மோன் நிலையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
ஒருசில ஆரோக்கிய உணவுகள் கூட அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் போது உடலில் ஹார்மோன் பிரச்சனைகள் உண்டாக காரணமாக இருக்கிறது...

பால் உணவுகள்!
அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு தான் எனினும். அளவுக்கு அதிகமாக பால் உணவு பொருட்கள் எடுத்துக் கொள்வது உங்களுக்கு கட் சின்றோம் (Gut Syndrome) ஏற்பட முதன்மை காரணியாக இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் கட்டி, வீக்கம் போன்றவை உண்டாகலாம்.

சோயா!
உங்களுக்கு ஏற்கனவே ஹார்மோன் சென்சிடிவான வகை என்றால், சோயாவில் இருக்கும் பைத்தோஸ்ட்ரெஜன்ஸ் காம்பவுண்ட் அதிகமாக பருக்கள் உண்டாக செய்யும். சோயா எதிர்பாராத இடங்களில் எல்லாம் பருக்கள் உண்டாக காரணியாக அமைகிறது.

பசை தன்மையான உணவுகள்!
Gluten Foods எனப்படும் பசை தன்மை கொண்டுள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால்.குடலில் தீய தாக்கம் ஏற்படுகிறது.

வேர்கடலை / நிலக்கடலை!
ஆரோக்கியமான உணவு தான் என்ற போதிலும், ஒரு சிலருக்கு வேர்கடலை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். இதனால் சரும எரிச்சல் போன்றவை கூட ஏற்படும். மேற்கத்திய நாட்டில் வாழும் மக்கள் மத்தியல் இது அதிகளவில் காணப்படுகிறது.

கனோலா, சூரியகாந்தி, மற்றும் தாவர எண்ணெய்!
சமையலுக்கு பயன்படுத்தப்படும் இந்த எண்ணெய்களில் அதிகமான ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இது சரும எரிச்சல், வீக்கம் உண்டாக காரணியாக அமைகிறது.

காஃபைன்!
காஃபைன்-ல் இருக்கும் அத்தியாவசிய மூலப் பொருட்கள் சருமத்தின் நோய் எதிர்ப்பில் தாக்கத்தை உண்டாக்குகிறது.



Click it and Unblock the Notifications