ரத்த அணுக்களை அதிகரிக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் நீட் விஷயத்திற்கு அடுத்தபடியாக பேசுவது டெங்கு காய்ச்சல். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Food to increase blood platelets

டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ரத்த அணுக்கள் வெகுவாக குறைந்திடும் சில நேரங்களில் இதனால் மரணம் கூட ஏற்படுவதுண்டு. இதனை தவிர்க்க, டெங்கு காய்ச்சல் ஏற்படாதவாறு உங்களை பாதுகாத்துக் கொள்வதுடன் ரத்த அணுக்களை மேம்படுத்தும் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளிப் பழம் :

பப்பாளிப் பழம் :

ரத்த அணுக்களை மேம்படுத்துவதில் பப்பாளிப் பழம் மிகச்சிறந்த இடம் வகிக்கிறது. பழத்தை விட பப்பாளி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளம் பழம் :

மாதுளம் பழம் :

சிகப்பு வைரம் என்று புகழப்படும் மாதுளம்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. அதனால் ஹீமோக்ளோபினை அதிகப்படுத்தும்.

மாதுளம்பழத்தில் விட்டமின்ஸ்களும் இருப்பதால் உங்களுக்கு உடல் வலிமையையும் கொடுத்திடும். இது டெங்கு வைரஸுக்கு எதிராக போராடவும் செய்திடும்.

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் நிறைந்த மீன்,நண்டு,சிக்கன் போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவை உங்களின் ரத்த அணுக்களை மேம்படுத்துவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

பூசணிக்காய் :

பூசணிக்காய் :

விட்டமின் ஏ நிறைந்த பூசணிக்காய் அல்லது பூசணிப்பழம் சாப்பிடலாம். இது நம் ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்திடும். அதே போல உடலில் உள்ள செல்களில் ப்ரோட்டீன் அதிகரிக்கச் செய்திடும்.

இதனால் ப்ளேட்லெட்ஸ் அதிகரிக்கும்.

விட்டமின் சி :

விட்டமின் சி :

ரத்த அணுக்களை மேம்படுத்த விட்டமின் சி நிறந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

இது சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகவும் செயல்படும். இதனால் ரத்த அணுக்கள் பாதுகாக்கப்படும். ஒரு நாளைக்கு 400 முதல் 2000 கிராம் அளவில் விட்டமின் சி எடுத்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சுப்பழம், எலுமிச்சைப் பழம்,ப்ரோக்கோலி,கீரை வகைகள் போன்றவற்றில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது.

நெல்லிக்காய் :

நெல்லிக்காய் :

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த அணுக்களை மேம்படுத்தவும் பயன்படுத்துவது நெல்லிக்காய். காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

நெல்லிக்காயை சாறு எடுத்து தேனுடன் கலந்து குடிக்கலாம்.

பீட்ரூட் :

பீட்ரூட் :

மிகவும் ரத்தசோகையில் இருப்பவர்கள் பீட்ரூட் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும். வாரத்திற்கு இரண்டு முறை ஒரு கப் நிறைய பீட் ரூட் சாப்பிட வேண்டும்.

பீட்ரூட் ஜூஸ் செய்தும் குடிக்கலாம். சாலட் அல்லது சூப் என எதாவது ஒரு வடிவில் பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Food to increase blood platelets

Food to increase blood platelets
Story first published: Thursday, September 7, 2017, 9:46 [IST]
Subscribe Newsletter