நாட்டுக்கோழி முட்டையை விட சிறந்ததா காடை முட்டை?

Posted By:
Subscribe to Boldsky

முட்டை யாருக்கு தான் பிடிக்காது. பிற அசைவ உணவு உண்ணாதவர்கள் கூட முட்டை மட்டும் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவு.

ஆனால், இதில் நாம் செய்யும் பெரிய தவறு பிராயிலர் கோழி முட்டை மட்டும் உணவில் சேர்த்துக் கொள்வது.

வேறு என்ன முட்டை இருக்கிறது? என்றால், பெரும்பாலும் நாட்டுக் கோழி முட்டை, வாத்து முட்டை பரிந்துரைப்பார்கள். ஆனால், உங்கள் உடல் நலம் மேலோங்க மொத்தம் நான்கு வகை முட்டை இருக்கின்றன...

Five Eggs That You Should Add in Your Diet!

காடை!

காடை முட்டை அளவில் கோழி முட்டை அளவில் பாதி தான் இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதிலிருக்கு ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கும்.

வாத்து!

கோழி முட்டையில் இருக்கும் புரதத்தை விட அதிகமான அளவு புரதம் வாத்து முட்டையில் இருக்கிறது. இதில் இருக்கும் மைக்ரோ பையல் தன்மை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மீன் முட்டை!

கோழி முட்டையை காட்டிலும், மீன் முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்து இருக்கிறது. பெரும்பாலும், மீன் முட்டையை நாம் யாரும் உண்பதில்லை. மீனில் உள்ள சத்துக்களை காட்டிலும் மீன் முட்டையில் சத்துக்கள் அதிகம். இது ஆரோக்கியமானதும் கூட.

நாட்டுக் கோழி!

நாட்டுக் கோழி முட்டை சாப்பிடுவதால் உடலின் வலிமை அதிகரிக்கும். ஆண்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை உண்பதால் இரத்த ஓட்டம் சீராகி ஆண்மை மேம்படும்.

பிராயிலர் கோழி!

உண்மையில் நாம் சேர்த்துக் கொள்ள கூடாத முட்டை இந்த வெள்ளை பிராயிலர் முட்டை. இதில் கொழுப்பு தான் அதிகம். அதே போல, பெரும்பாலும் ஊசி போட்டு உருவாகும் இந்த முட்டை உடல் நலத்திற்கு உகந்தது அல்ல.

எனவே, அதிகம் பிராயிலர் கோழி முட்டை சாப்பிட வேண்டாம்.

English summary

Five Eggs That You Should Add in Your Diet!

Five Eggs That You Should Add in Your Diet!
Story first published: Wednesday, September 20, 2017, 17:00 [IST]