இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா, இனிமேல் நீங்க வெள்ளை சர்க்கரை யூஸ் பண்ணவே மாட்டீங்க!

Posted By: Aashika Natesan
Subscribe to Boldsky

பளபளப்பாக இருக்கும் எதையும் நம்பக்கூடாது என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் வெள்ளைச் சர்க்கரை.

பெரும்பாலான வீடுகளில் தினமும் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரையால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று தெரியுமா?

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சர்க்கரை பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!

எப்படி தயாரிக்கிறார்கள்? 

கரும்பிலிருந்து பிழிந்த சாற்றில் லிட்டருக்கு 200 மில்லி பாஸ்போரிக் ஆசிட் வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது.பின்னர் அதில் லிட்டருக்கு 0.2 சதவீதம் சுண்ணாம்பை

கலந்து அதில் சல்பர்-டை-ஆக்சைடு செலுத்துவார்கள். சுமார் 102 செண்டிகிரேடில் நன்றாக கொதிக்கச் செய்து அதிலிருக்கும் மற்ற சத்துக்களை எல்லாம் இழக்கச் செய்துவிடுவார்கள்.

Facts and process of white sugar

நன்றாக கொதித்தவுடன் அதில் பாலி எலக்ட்ரோலைட் கலந்து சக்கையை தனியாக பிரித்தெடுத்துவிடுவார்கள். அதன்பிறகு அதே சுடுகலனில் காஸ்டிக் சோடா சேர்த்து

அடர்தியான ஜூஸ் எடுக்கப்படும். மீண்டும் அதில் சல்பர் டை ஆக்ஸைடு,சோடியம் ஹைட்ரோ சல்பேட் ஆகிய ரசாயனங்களை சேர்த்து தயாரிக்கப்படும் பளபளக்கும் வெள்ளை சீனியைத் தான் நாம் தினமும் பயன்படுத்துகிறோம்.

அவசரயுகத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நம் வீட்டிற்குள் நுழைந்த வெள்ளைச் சர்க்கரை என்னென பாதிப்புகளை ஏபடுத்துகிறது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் பருமன் :

உடல் பருமன் :

எந்த சத்துக்களும் இன்றி ரசாயனங்கள் மட்டுமேயான வெள்ளைச் சர்க்கரை நம் உடலுக்குள்சென்றதும் குளோக்கோசாகவும் ப்ருக்டோசாகவும் பிரியும்.

குளுக்கோஸ் எளிதில் ஜீரணமாகும்..ஆனால் ப்ரக்டோஸ் ஈரலால் மட்டுமே ஜீரணிக்க முடியும். ஈரலுக்கு அதிகப்படியான வேலை ஏற்ப்பட்டால் ஈரலில் கடுமையான அழுத்தம் உண்டாகி நம் உடலின் இன்ஸுலின் சுரப்பை பாதிக்கும்.

அதோடு, ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு அதிகப்படியான உணவை உட்கொள்ளச் செய்யும். ஏற்கனவே ஜீரண மண்டலத்தை சிதைத்த சர்க்கரை ரசாயனம் அதிகமான உணவுகளை ஜீரணிக்காமல் கொழுப்பாக சேர்க்கும்.

பற்கள் மற்றும் எலும்புகள் :

பற்கள் மற்றும் எலும்புகள் :

வெள்ளச் சர்க்கரையில் உள்ள அளவுக்கு அதிகமான அமிலத்தன்மையால் உடல் சோர்வடையும் அதை சமன் செய்ய எலும்புகள் மற்றும் பற்களில் உள்ள

கால்சியம் சத்து உறிஞ்சப்படும். இதனால் பல் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வந்து சேரும்.

சிதறும் செல் அமைப்பு :

சிதறும் செல் அமைப்பு :

நம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உடலிலுள்ள பி.எச் எனப்படும் அமில மற்றும் கார நிலைகளின் சமன்பாட்டை வெகுவாக பாதிக்கும். பி.எச். சமன்பாட்டின் அதிகரிப்பால் நம் உடலின் அடிப்படை செல் அமைப்பே சீர்குலையும். இப்பிரச்சனை நம்மை மட்டுமின்றி நம் சந்ததியினருக்கும் உடல் உபாதைகள் தொடரும்.

 ஞாபக மறதி :

ஞாபக மறதி :

மூளை சுறுசுறுப்புடன் செயல்பட மிகவும் அவசியமானது விட்டமின் A.அதிக வெள்ளைச் சர்க்கரை நம் உடலில் சேரும் போது அவை விட்டமின் A சத்தை உறிந்து விடுவதால் மூளையின் திறன் குறைகிறது. இதனால் ஞாபக மறதி, விரைவாக புரிந்து செயலாற்றுவதில் தாமதம் என பல பிரச்சனைகள் ஏற்படும்.

புற்றுநோய் :

புற்றுநோய் :

உடலிலுள்ள செல் உற்பத்தியை அதன் இயக்கத்தை சர்க்கரை சிதைப்பதால் அதன் சமநிலை சீர்குலைந்து புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

 இதயநோய் :

இதயநோய் :

சேர்ந்து கொண்டேயிருக்கும் கொழுப்பு ரத்த ஓட்டத்தை பாதிப்பதோடு, ரத்த குழாய்களையும் பாதிக்கிறது. இதனால் மாரடைப்பு உட்பட இதய நோய்கள் ஏற்படும்.

சர்க்கரையை எப்படி தவிர்க்கலாம் ?

சர்க்கரையை எப்படி தவிர்க்கலாம் ?

பழ ஜூஸ் :

பழங்களை அப்படியே சாப்பிடுங்கள். முடியாத பட்சத்தில் அதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.

 லேபிளில் கவனம் :

லேபிளில் கவனம் :

கடைகளில் உணவுப் பொருள் வாங்கியதும் அதில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை பாருங்கள் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அதை தவிர்த்திடுங்கள். லேபிள்களில் சர்க்கரை என்று நேரடியாக இல்லாமல் வெவ்வேறு பெயர்களில் கூட அதனை குறிப்பிடப்படும், என்பதால் இனிப்பூட்டிகளின் பெயர்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

மறைமுக சர்க்கரை :

மறைமுக சர்க்கரை :

நேரடியாக சர்க்கரையை எடுப்பதை விட நம்மையும் அறியாமல் மறைமுகமாக எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரட், பாஸ்தா போன்ற துரித உணவுகளில் எல்லாம் சர்க்கரையின் அளவே அதிகமாக இருக்கும். இப்படி நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை கணக்கிடுங்கள்.

வாழ்க்கை முறை :

வாழ்க்கை முறை :

இவை எல்லாவற்றையும் விட காலை கண் விழித்ததும் பெட் காபி, 11 மணிக்கு ஒரு டீ என்று குடிப்பதை விடுத்து. சத்தான ஆகாரங்களை உணவுகளாக உட்கொள்ளுங்கள். நொறுக்குத்தீனிகளை தவிர்திடுங்கள்.

தாதுப்பொருட்கள் மற்றும் விட்டமின் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளையே அன்றாட உணவாக தேர்ந்தெடுங்கள்.

நிறையத் தண்ணீர் குடியுங்கள். அதே போல உடற்பயிற்சிகள் செய்வது, உங்களை சுறு சுறுப்பாக ஏதேனும் வேலையில் ஈடுப்படுத்திக் கொள்வது என எப்போதும் உற்சாகமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts and process of white sugar

Facts and process of white sugar