For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் இளமை, ஆரோக்கியத்துடன் வாழ உதவும் காப்பர் உணவுகள்!

காப்பர் உணவுகள்

By Lakshmi
|

காப்பர் ஒரு மினரல் ஆகும். இது உடலில் சிறிதளவு இருந்தாலே போதுமானது. இதன் அளவு சிறிது என்றாலும், இது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்தாகும். இது ஹீமோகுளோபின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

உடலில் காப்பர் சத்து குறைவாக இருந்தால் உங்களுக்கு அனீமியா எனப்படும் இரத்தசோகை குறைபாடு இருக்கும். உங்களது தினசரி காப்பர் தேவையானது 2 mg மட்டும் தான். இதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இந்த பகுதியில் உங்களுக்கு காப்பர் சத்தினை கொடுக்கும் உணவுகளை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் மிகவும் சுவையானது ஆகும். இந்த டார்க் சாக்லேட் 1 பீஸ் சாப்பிடுவதால் 0.9 mg அளவு காப்பர் சத்து உங்களத் உடலுக்கு கிடைக்கும்.

காளான்

காளான்

காளான் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. காளானை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் குறையும். ஒரு கப் காளானில் 0.43 mg அளவிற்கு காப்பர் உள்ளது.

பாதாம்

பாதாம்

பாதாமில் காணப்படும் நார்ச்சத்தும் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வர விடாமல் தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 1/4 கப் பாதாம் சாப்பிடுவதால் 0.4 mg காப்பர் சத்து உங்களுக்கு கிடைக்கிறது.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதை என்பது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நலன்களையும், அழகுக்கான நன்மைகளையும் கொடுக்கிறது.. 1/4 கப் சூரியகாந்தி விதையில் 0.63 mg அளவு காப்பர் சத்து உள்ளது.

முந்திரி

முந்திரி

வறுக்கப்பட்ட முந்திரியை நீங்கள் சாப்பிடுவது நல்லது. இதில் பல வகையான ஊட்டச்சத்துகள் உள்ளன. 1 டேபிள் ஸ்பூன் அளவு முந்திரியில் 0.191 அளவு காப்பர் சத்து உள்ளது.

வெள்ளை அணுக்கள்

வெள்ளை அணுக்கள்

நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் தான் தொற்றுநோய்க் கிருமிகளை முழுவேகத்துடன் எதிர்க்கக் கூடியவை. காப்பர் சத்தானது வெள்ளை அணுக்களுக்கு அந்த சக்தியை அளிக்கக்கூடியதாக உள்ளது. பனிவரகு, சாமை உள்ளிட்ட தினைவகைகள், பீன்ஸ், சன்னா, பட்டாணி, தாமரைத்தண்டு, செல்மீன்கள், சாக்லெட் ஆகியவற்றில் காப்பர் சத்து அதிகம் உள்ளது.

இது எதற்காக?

இது எதற்காக?

காப்பர் சத்து உடலில் எந்த அளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது, காப்பர் உணவுகளை சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். காப்பரால் உண்டாகும் நன்மைகள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்....

வயதாவதை தடுக்க

வயதாவதை தடுக்க

காப்பர் ஒரு ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகும், இது முகத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மற்றும் வயது முதிர்வை வெளிக்காட்டும் அறிகுறிகளை சரி செய்ய உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம்

எலும்பு ஆரோக்கியம்

காப்பர் கொலஜினை உண்டாக்க கூடியது. இது உங்களது எழும்புகளை மிகவும் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் பாதுக்காக உதவுகிறது.

முடிகளின் ஆரோக்கியம்

முடிகளின் ஆரோக்கியம்

நீளமான அடர்த்தியான கூந்தல் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். காப்பர் முடிகளின் ஆரோக்கியத்தை பாதுக்காக்கவும் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒன்றாகவும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

copper rich foods

copper rich foods
Story first published: Wednesday, November 15, 2017, 12:21 [IST]
Desktop Bottom Promotion