For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலை உணவில் நாம் செய்யும் தவறுகள் !!

காலை உணவு தொடர்பாக நம்பப்பட்டு வந்த சில தவறான நம்பிக்கைகளை தகர்க்கும்படி எழுதப்பட்டுள்ளது இக்கட்டுரை.

|

காலை உணவு மிகவும் அவசியம் என்பது தெரியும். அந்த காலை உணவைச் சுற்றி எக்கச்சக்க தவறான புரிதல்கள் நம்மிடையே இருக்கிறது. இன்னும் சிலர் காலை உணவு அவசியமில்லை பசித்தால் மட்டும் சாப்பிட வேண்டும், காலையில் சாப்பிடாவிட்டால் விரைவில் உடல் எடை குறையும் என்றெல்லாம் தவறான கருத்துக்களை கடைபிடித்து வருகிறார்கள்.

Common Mistakes That We Do In Breakfast

காலை உணவின் போது பொதுவாக செய்யப்படும் தவறுகள் எவையென உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதனை தெரிந்து கொள்வதற்காக இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்பதற்கு முன்னால் :

உண்பதற்கு முன்னால் :

காலையில் உண்ணும் உணவுக்கு முன்னால் யோசியுங்கள். இது சத்தான ஆகாரமா ஒரு நாளை துவக்குவதற்கான உற்சாகத்தை இந்த உணவு கொடுக்குமா என்று சிந்தியுங்கள். வெறும் ஜங்க் புட் காலையில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

 ஜூஸ் வேண்டாம் :

ஜூஸ் வேண்டாம் :

வெறும் வயிற்றில் ஜூஸ் மட்டும் குடித்தால் போதாது எப்படியும் அதில் சர்க்கரை அல்லது ஈடு பொருட்கள் சேர்ப்போம். இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்குமே தவிர மற்ற எந்த சத்துக்கள் வாராது.

வேண்டுமானால் ஒரு கிளாஸ் தண்ணீரோடு பழம் எடுத்துக்கொள்ளலாம். விரைவில் செரித்து விடும் என்பதால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஏதாவது ஆகாரம் எடுத்தாக வேண்டும்.

துரித உணவுகள் :

துரித உணவுகள் :

இரவு நீண்ட இடைவேளிக்குப் பின் உணவு உண்கையில் எடுத்துமே செரிக்க சிரமமாயிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். அதிக சர்க்கரை கலந்த உணவோ அல்லது பாக்கெட் உணவுகளை தவிர்த்திடுங்கள்.

காபி :

காபி :

காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது பசியை போக்கிடும். அதோடு வெறும் வயிற்றில் குடிக்கும் போது வயிற்றில் அது ஆசிட்டை உருவாக்கிடும். நாள் முழுமைக்கும் தேவையான ஆற்றலை அது கொடுக்காது.

நம் கவனத்தையும், கூர்ந்து வேலை செய்யும் திறனையும் இது பாதிக்கிறது. சரியாக உணவு எடுத்துக் கொள்ளாத காரணத்தால் நாள் முழுவதும் சோர்வாகவே உணர்வோம்.

முட்டை :

முட்டை :

காலை உணவாக வெறும் முட்டை மட்டுமே சாப்பிடாதீர்கள். காய்கறிகள், பழங்களுடன் முட்டை எடுத்துக் கொண்டால்தான் அனைத்துச் சத்துக்களும் சமமாய் நமக்கு கிடைக்கும்.

வெறும் முட்டை மட்டும் எடுத்துக்கொண்டால் விரைவில் பசியெடுக்கும் அதோடு உடலுக்கு தேவையான சத்துக்களும் வந்து சேராது.

ஓட்ஸ் :

ஓட்ஸ் :

ஓட்ஸ் கொலஸ்ட்ராலை குறைக்கும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது தவறு, அதில் அதிகப்படியான சர்க்கரை சத்தே நிறைந்திருக்கிறது.

இது நம் உடலில் சர்க்கரையை அதிகப்படுத்துமே தவிர எனர்ஜியை அதிகரிக்காது. அதோடு நீண்ட நேரம் பசியெடுக்காமல் மந்தமாகவே வைத்திருக்கும்.

நேரம் :

நேரம் :

காலை எழுந்ததும் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு உள்ளாக சாப்பிட்டு விட வேண்டும். பசிக்கும் போது சாப்பிடலாம் என்று தள்ளிப்போட்டால் ஒன்று அதிகமாக சாப்பிட நேரம் அல்லது அவசர அவசரமாக குறைவாக சாப்பிடுவோம்.

நேரம் ஆக ஆக உணவைத் தாண்டி ஸ்நாக்ஸ் அல்லது டீ, காபி எடுத்துக் கொள்வோம். இது உடலுக்கு தீங்கையே ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health food breakfast
English summary

Common Mistakes That We Do In Breakfast

Common Mistakes That We Do In Breakfast
Story first published: Tuesday, July 18, 2017, 12:58 [IST]
Desktop Bottom Promotion