உங்களது ரத்த வகைக்கு ஏற்ற உணவுகளை எப்படி தேர்ந்தெடுப்பது?

Posted By:
Subscribe to Boldsky

உடல் ஆரோக்கியத்திற்காக பல வகையான முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். சமீபத்தில் உங்களது ரத்த வகைக்கு ஏற்றமாதிரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உங்களது ரத்த வகைக்கு ஏற்றமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது பல நோய்கள் உங்களுக்கு வராமல் தடுக்க முடியும். அதோடு ரத்த வகைக்கு ஏற்ற மாதிரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் அவை எளிதில் செரிமானம் ஆவதற்கும் உடலை வலுப்படுத்துவும் செய்திடும்.

சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் எளிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் அவர்கள் இப்படி தங்களது ரத்தவகைக்கு ஏற்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் நோய் தொற்றை தவிர்க்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓ க்ரூப் :

ஓ க்ரூப் :

ஓ க்ரூப் இருப்பவர்கள் ப்ரோட்டீன் டயட் இருக்க வேண்டும். கறி,மீன், ப்ரோக்கோலி, பூசணிக்காய், நூக்கல்,வெண்டைக்காய், இஞ்சி,பூண்டு,அத்திப்பழம், நெல்லிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதே போல கோதுமை,உருளைக்கிழங்கு,காலிஃப்ளவர்,முட்டைகோஸ், காபி, காளாண், ஆரஞ்சுப்பழம்,கிவி,ஸ்ட்ராபெர்ரி,ப்ளாக் பெர்ரீ, பச்சை பட்டாணி, போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.

ஏ க்ரூப் :

ஏ க்ரூப் :

இவர்கள் கார்போஹைட்ரேட் டயட் பின்பற்றலாம். அரிசி உணவுகள், ஓட்ஸ்,பாஸ்தா,அத்தி,எலுமிசை,கிஸ்மிஸ் பழம்,காளாண்,அன்னாசிப்பழம்,க்ரீன் டீ போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், மீன்,வாழைப்பழம்,தேங்காய்,பப்பாளிப்பழம், முந்திரி போன்றவற்றை தவிர்த்திடுங்கள். யோகா உட்பட சின்ன சின்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

பி க்ரூப் :

பி க்ரூப் :

இவர்கள் குறிப்பிட்ட டயட் இருக்க வேண்டிய அவசியமில்லை . பச்சை காய்கறிகள், முட்டை, பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். கோதுமை, தக்காளி,வேர் கடலை,கார்ன் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நீச்சல்,நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

ஏபி க்ரூப் :

ஏபி க்ரூப் :

கடல் உணவுகள், தயிர், மட்டன், பால், முட்டை, சிறுதானியங்கள்,ஓட்ஸ்,ப்ரோக்கோலி,காலிஃப்ளவர்,வெள்ளரி,ப்ளம்ஸ்,பீன்ஸ்,பீட்ரூட் போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.

ஹை கொலஸ்ட்ரால் டயட் இருப்பதை தவிர்த்திடுங்கள். உங்கள் மனதை அமைதிப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

ஸ்ட்ரஸ் :

ஸ்ட்ரஸ் :

ரத்த வகைக்கு ஏற்ற மாதிரி அவரவர்க்கு ஸ்ட்ரஸ் லெவல் இருக்கும். ஓ க்ரூப் இருப்பவர்கள் போராட்ட குணம் உடையவர்களாக இருப்பார்கள் ஏனென்றால் இவர்களுக்கு அட்ரலீன் அதிகமாக சுரக்கும்.அதே நேரத்தில் அதிலிருந்து மீண்டு வெளியே வருவதும் இவர்களுக்கு சிரமம்.

ஏ க்ரூப் இருப்பவர்களுக்கு அதிகப்படியான ஸ்ட்ரஸ் இருக்கும். இவர்களுக்கு கார்டிசோல் என்கிற ஹார்மோன் அதிகம் சுரக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Blood group diet

Blood group diet
Story first published: Friday, September 1, 2017, 11:40 [IST]
Subscribe Newsletter