முளைக்கட்டிய தானியங்களில் புதைந்திருக்கும் சில உண்மைகள் !!

Posted By:
Subscribe to Boldsky

இயற்கை உணவான தானியங்கள் புரதச்சத்தும் ஊட்டச்சத்தும் நிரம்பியது. அவற்றை முளை கட்டப்படுவதால் செரிமானப்பிரச்சனையை ஏற்படுத்தும் பைரேட்ஸ் என்ற சத்து குறைக்கப்படும், சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்ட எளிதில் செரிமானம் ஆகிடும். இப்படி முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்கறி பழங்களை விட அதிக சத்து :

காய்கறி பழங்களை விட அதிக சத்து :

பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு ஆகியவை உள்ளன .இவை எடையைக் குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

விட்டமின் :

விட்டமின் :

முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன.

சரிவிகித உணவு :

சரிவிகித உணவு :

தொடர்ந்து சரிவிகிதமான உணவை சாப்பிட முடியாத காரணத்தால், கொழுப்பை எரிக்கக் கூடிய அமினோ அமிலங்கள் போதிய அளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது இன்று பலரும் எதிர் கொள்ளும் உடல் ரீதியான பிரச்னையாகும். முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்களை போதிய அளவில் சுரக்கச் செய்ய முடியும்.

எப்போதும் கிடைக்கக் கூடியது:

எப்போதும் கிடைக்கக் கூடியது:

காய்கறி பழங்கள் போன்றவற்றில் சில அந்தந்த சீசன்களில் தான் கிடைக்கும். ஆனால் தானியங்கள் அப்படியல்ல அத்துடன் இந்த முளைகட்டிய பயிரை வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம் அதிக செலவும் ஏற்படாது.

சாப்பிடும் நேரம் :

சாப்பிடும் நேரம் :

ஒரு நாளைக்கு எதாவது ஒரு வேளை முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். பாதி உணவும், பாதி முளைகட்டிய தானியங்களும் இருக்குமாறு சாப்பிட்டால் நல்லது.

காலை நேரம் :

காலை நேரம் :

முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் முளைகட்டிய தானியங்களை வேக வைத்து சாப்பிடலாம் .

தனியாக உண்ணுதல் சரியா:

தனியாக உண்ணுதல் சரியா:

எந்த வேளையும் இந்த முளைகட்டிய தானியங்களை மட்டும் உணவாக சாப்பிடக்கூடாது. இதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்திருந்தாலும் நம் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்ஸ் மினரல்ஸ் போன்ற சத்துக்களும் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் :

குழந்தைகள் :

சில சமயங்களில் முளைகட்டிய தானியங்கள் செரிமானக்கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு வேகவைக்காமல் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.

சுத்தம் :

சுத்தம் :

முளைகட்ட வைக்க சுத்தமான நீரை பயன்படுத்துங்கள். கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் முளைகட்டிய தானியங்கள் வாங்குவதை தவிர்த்திடுங்கள்.அதே போல தினமும் ஒரு வகையான தானியங்களை எடுப்பதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான தானியங்களை எடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits of sprouted grains

health benefits of sprouted grains
Please Wait while comments are loading...
Subscribe Newsletter