தினமும் காலையில் ஆப்பிள்சிடர் வினிகர் குடிப்பதால் என்ன நடக்கும்னு தெரியுமா?

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

காலையில் எழுந்தவுடன் உடல் வறட்சியை போக்குவதற்கு தண்ணீர் அல்லது எலுமிச்சைச் சாறு கலந்த தண்ணீர் ஆகிய பழக்கங்கள் உதவும். ஆனால், ஆப்பிள் சிடர் வினிகர் காலையில் குடிப்பது பற்றி கேள்வி பட்டதுண்டா?

இன்றைய காலகட்டத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் முறைகளில் ஆப்பிள் சிடர் வினிகர் இடம் பிடித்துள்ளது. இது உண்மையிலேயே உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை பற்றி இப்போது பார்ப்போம்...

குறிப்பு : மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஆப்பிள் சிடர் வினிகரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஆப்பிள் சிடர் வினிகர் சுவையாக ஒன்றும் இருக்காது. ஆனால், இது உடலில் செரிமானத்தை துரிதப்படுத்தும். ஆப்பிள் சிடர் வினிகரை குடித்ததும் நீங்கள் உணருவது புத்துணர்ச்சி. தூக்கக் கலக்கம் நீங்கி சுறுசுறுப்பாகி விடுவீர்கள்.

#2

#2

ஆப்பிள் சிடர் வினிகரை குடித்ததும் நீங்கள் அடுத்ததாக உணருவது எரிச்சல். இது உடக்குள் போகும் போது உள்ளே இருக்கும் கெட்ட கொழுப்புக்களை நீக்குவதால் ஏற்படும் எரிச்சல் இது. நீங்கள் இஞ்சிச் சாறு குடித்தால் எப்படி இருக்கும் அப்படி தான் இருக்கும் ஆப்பிள் சிடர் வினிகர் குடித்தாலும்.

#3

#3

காலையில் ஆப்பிள் சிடர் வினிகரை குடித்தால் இரத்தத்தின் குளுகோஸ் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். கார்போஹைட்ரேட் செரிமானம் ஆவதை தாமதப்படுத்தும்.

#4

#4

தினமும் காலையில் ஆப்பிள் சிடர் வினிகர் குடிப்பதனால் உயர் இரத்த அழுத்தம் குறையும். உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை அதிகரிக்கும். இது இரத்த நாளங்களுக்கு ஓய்வு அளித்து சிறந்து செயல்பட உதவும்.

#5

#5

ஆப்பிள் சிடர் வினிகர் வயிற்று பசியை கட்டுப்படுத்தும். மேலும், உடலுக்கு புத்துண்ர்ச்சி அளிக்கும். சிறிது நாட்களில் உடல் பொலிவு பெறும்.

#6

#6

உடலில் ஆன்டிபாக்டீரியல் பண்பை அதிகரித்து நோய் எதிர்ப்புப சக்தியை மேம்படுத்தும். உடலின் அமைப்பை கட்டுப்படுத்தி செரிமான வேலையை அதிகரிக்கும்.

#7

#7

நீங்கள் கால் பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், ஆப்பிள் சிடர் வினிகருடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து காலையில் குடித்து வாருங்கள். வினிகரில் உள்ள பொட்டாசியம் கால் பிடிப்புகளை சரிசெய்யும்.

#8

#8

வினிகரில் உள்ள நோய் எதிர்ப்பு அழற்சி பண்பு, உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரி செய்யக் கூடியது. அதாவது, சாதாரண தலைவலியில் இருந்து சருமப் பிரச்சனைகள் வரை அனைத்தும் சரி செய்யும்.

#9

#9

ஆப்பிள் சிடர் வினிகரை எப்படி குடிக்க வேண்டும் ? 2 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். வெறும் ஆப்பிள் சிடர் வினிகரை அப்படி குடிக்கவே கூடாது.

அதன் இயற்கை அமிலத்தன்மை அதிக சக்தி கொண்டுள்ளதால் உடல் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. உங்கள் பற்களையும் கூட சேதப்படுத்தும். எனவே, தண்ணீர் சேர்க்காமல் ஆப்பிள் சிடர் வினிகரை குடிக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens If You Drink A Shot Of Apple Cider Vinegar In The Morning?

What Happens If You Drink A Shot Of Apple Cider Vinegar In The Morning?
Story first published: Friday, June 9, 2017, 8:00 [IST]