Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நீங்கள் எப்படி சாப்பிட வேண்டும் என ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?
ஆரோக்கியமான உணவினை உண்ணுவதனாலே...சிறந்த உடல் நலத்தை நாம் பெறுகிறோம். உணவு வளர்சிதை மாற்றத்தில் நம்மால் முறையான கவனம் செலுத்துவதனாலே ஆரோக்கியமான செறிமான செயல்முறை நமக்கு உதவி, நம் உடம்பை சரியான முறையில் வைக்க துணை புரிகிறது.
எவற்றை சாப்பிட்டால்... நம் உடல் நலத்தை பேணி பாதுகாக்க முடியும்? என்பதனை மனதில் பதிய வைத்து கொண்டு சரியான உணவு பழக்கவழக்கங்களை நாம் கடைப்பிடிப்பது நமக்கு நன்மை பயக்கும்.
'உணவே மருந்து...' என்னும் கோரிக்கையை நம் முன் வைக்கும் ஆயுர்வேதத்தின் கால சுவடிகளின் வார்த்தை, அதனை சரியான முறையில் உட்கொள்வதால் மட்டுமே மருந்தாக பயன்படும் என்பதனையும் நமக்கு புரியவைக்கிறது.
நாம் அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் செரிமான கோளாறு பிரச்சனைகளான... வாயு சம்பந்தப்பட்டவையும், வீக்கம், வயிற்று வலி, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் ஆகியவை ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்களினாலே நமக்கு ஏற்படுகிறது.
அத்துடன் நீங்கள், நின்றுகொண்டு சாப்பிடும் பழக்கவழக்கம் உடையவராயின்...அது இன்னும் மோசமான பழக்கமாகுமாம். ஒருவேளை நீங்கள் டஜன் கணக்கில் உணவினை வயிற்றில் நிரப்பிகொள்ள ஆசைப்படுபவரா?

உணவு முறையை சரியாக செயல்படுத்துவது என்பது...நம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தை நாம் உறுதிபடுத்திகொள்ளும் ஒரு செயலாகும். உங்கள் உடல் நிலையையும் சீராக வைத்துகொள்ள உதவும் இந்த பழக்கவழக்கங்களை பற்றியும், எளிதில் செறிமானமடைய என்ன தான் வழி? என்பதனையும் ஆயுர்வேதத்தின் சில வழிமுறைகளின் மூலம் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ளலாம்.

விதி 1:
நீங்கள் டிவி பார்த்துகொண்டோ, மொபைலில் சாட் செய்து கொண்டோ, புத்தகத்தை படித்துகொண்டோ சாப்பிடுவதன் மூலம் உங்கள் கவனம் திசைதிரும்பி...உண்ணும் உணவை நீங்கள் விழுங்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால், அந்த பழக்கத்தை நீங்கள் முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.

விதி 2:
உண்ண செல்லும் முன், குளிர்ந்த நீரினை குடிப்பதனை நீங்கள் தவிர்ப்பது நல்லதாகும்.

விதி 3:
நீங்கள் சாப்பிட்டுகொண்டிருக்கும்போது கூல் ட்ரிங்க்ஸை குடிக்காதீர்கள். அது உங்கள் செறிமான பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும். ½ கப் நார்மல் வாட்டர் குடிப்பதே நல்லதாகும். ட்ரை மீல்ஸை நீங்கள் சாப்பிட்டு கொண்டிருந்தால், அப்பொழுது அதிகம் தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. மீல்ஸ் சாப்பிடும்பொழுது வைனை (WINE) சிப் செய்வது நல்லதாம்.

விதி 4:
நீங்கள் உண்ணும் உணவை தயாரிக்கும்பொழுது...அதில் கவனமும் முழுஈடுபாடும் இருக்குமாயின், அதனால் சிறந்த ஆற்றலை நீங்கள் உண்ணுவதன் மூலம் உங்களுக்கு அது தருகிறதாம்.
அதனால், எப்பொழுதும் உணவை தயாரிக்கும் பொழுது மட்டும் அதிருப்தியுடன் வேலைகளை கையாளாதிர்கள் என அறிவுறுத்தப்படுகிறது. உணவுக்கும் அதனை தயாரிப்பவர்களுக்கும் என்ன சம்பந்தம்? என நீங்கள் கேட்டால்...சம்பந்தம் இருக்கிறது எனவும் ஆயுர்வேதம் நம்மிடம் அடித்து கூறுகிறது.

விதி 5:
சாப்பிடுவது என்பது புனிதமான ஒரு உணர்வாகும். அதனால் எப்பொழுதும் சாப்பிடும் முன்பு, நிதானத்தை கையாள்வதோடு... மன நிம்மதியும் அமைதியும் கொண்டு, அதன் பின் உங்கள் முன் இருக்கும் உணவினை உண்ணும் பழக்கம் மிகவும் சிறந்த பழக்கமாகும்.

விதி 6:
அதேபோல், சாப்பிட்டவுடன் உங்கள் அடுத்து வேலைகளை அவசர அவசரமாக செய்யாமல்... சிறிது இடைவெளி தந்து மனதினை இதமாக்கிகொண்டு, அதன் பின் நிதானமாக தொடர்வது நன்மை பயக்கும்.

விதி 7:
உங்கள் வயிற்றில் முக்கால் அளவு உணவு முழுமை அடையும் வரை, மிதமான வேகத்தில் சாப்பிடுவது மிக நல்லதாம்.

விதி 9:
அதேபோல் சாப்பிட்டு முடித்தவுடன் 3 மணி நேர இடைவேளை தந்து அதன் பின் தான் மீண்டும் உண்ண வேண்டுமாம். இதனால் உங்கள் செறிமான திறன் சிறப்புடன் செயல்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

விதி 9:
சூரியன் உச்சியில் கொளுத்திகொண்டிருக்க, அந்த நேரத்தில் நாம் உண்ணும் உணவு செறிமானம் கொள்ளும் தன்மை வலுவடைந்து காணப்படுகிறதாம்.
இந்த உலகத்தில் காணப்படும் உடல்களின் பிரதிபலிப்பு என்பது, ஒரு விதிமுறையின் படி செயல்பட...அதனால், மதியம் வேலையில் நன்றாக சாப்பிடவும், இரவு நேரத்தில் கொஞ்சமாக சாப்பிடவும், காலை வேளையிலும் கம்மியாக சாப்பிடவும் அறிவுறுத்துகிறது ஆயுர்வேதா.

விதி 10:
ஆயுர்வேதம் பரிந்துரைப்பது என்னவென்றால், உங்கள் டின்னரை இரவு 8 மணிக்கு முன்பு முடித்துகொள்வது நன்மை பயக்குமாம். அத்துடன், இரவில் குறைந்த அளவிலான உணவினை நாம் எடுத்துகொள்வதனையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.



Click it and Unblock the Notifications