நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த மருத்துவ மூலிகைகளும், அதன் நன்மைகளும்!

Written By:
Subscribe to Boldsky

பழங்காலமாகவே மருத்துவ தாவரங்களை தான் நம் முன்னோர்கள் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தாவரங்களை அவர்கள் தங்களது உடல் சீரான முறையில் செயல்படுவதற்காகவும் பயன்படுத்தி வந்தனர். இந்த தாவரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டன.

இந்த மூலிகைகள் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுவதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. உங்களது ஆரோக்கியத்தை பாதுக்காக்க வேண்டும் என்றால் இதோ இந்த மூலிகைகளை பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கொத்தமல்லி

1. கொத்தமல்லி

கொத்தமல்லி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இந்த கொத்தமல்லியை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்களுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படாமல் இருக்கும். மனஅழுத்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.

2. இலவங்கப்பட்டை எண்ணெய்

2. இலவங்கப்பட்டை எண்ணெய்

இந்த இலவங்கப்பட்டை எண்ணெய்யை நீங்கள் பயன்படுத்தினால், இது உங்களது உடல் உறுப்புகளை பாதுகாக்க வல்லது. இது பூஞ்சைகளை எதிர்த்து போராடும் திறன் கொண்டது. இது வாயுக்கோளாறுகளை சரி செய்யவும், செரிமானத்தை ஒழுங்கு படுத்தவும் உதவுகிறது

3. கற்றாழை

3. கற்றாழை

கற்றாழை உங்களது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. வெள்ளைப்படுதல் பிரச்சனையை போக்குகிறது. இது நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது. மேலும் இந்த கற்றாழை பொடுகை எதிர்த்து போராடவும், பேன் தொல்லையில் இருந்து விடுவிக்கவும் பயன்படுகிறது.

4. ரோஸ்மேரி

4. ரோஸ்மேரி

ரோஸ்மேரி இலைகள் ஒற்றை தலைவலியை போக்குவதற்கும், நியாபக மறதி குறைபாட்டை நிவர்த்தி செய்யவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது சரும பிரச்சனைகளுக்கும், மூட்டு வலிகளை சரி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

5. கற்பூரவல்லி

5. கற்பூரவல்லி

கற்பூர வல்லி கல்லீரலில் உள்ள கொழுப்புகளை கரைக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது செரிமானத்தை ஒழுங்குபடுத்தவும், கல்லீரல் செயல்பாடுகளை முறையாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

6. மிளகாய்

6. மிளகாய்

மிளகாய் உங்களது செரிமானத்தை ஒழுங்குபடுத்தவும், வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும், உங்களது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை ஒழுங்குபடுத்தி உடல் எடையை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

7. கிராம்பு

7. கிராம்பு

கிராம்பு உங்களது பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான, மஞ்சள் பற்கள், ஈறுகளில் இரத்தம் வடிதல், பல் வலி போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. நீரில் கிராம்பை போட்டு வாய் கொப்பளித்தால் உங்களது வாய்துர்நாற்றம் காணமலேயே போய்விடும்.

8. அதிமதுரம்

8. அதிமதுரம்

அதிமதுரம் ஒரு மிகச்சிறந்த மருத்துவ பொருளாகும். இது ஒரு மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட பொருளாகும். நுரையிரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை போக்குவதற்கு பயன்படுகிறது. அலர்ஜிகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கிறது.

மேலும் வெயிலினால் ஏதேனும் சரும பிரச்சனைகள் உண்டாகியிருந்தாலோ அல்லது சருமம் கருமையாகி இருந்தாலோ அதிலிருந்து விடுபட இந்த அதிமதுர பவுடரை தண்ணீர் அல்லது பாலில் கலந்து முகத்திற்கு பேஸ்ட் ஆக போடலாம்.

9. பூண்டு

9. பூண்டு

இந்த பூண்டில் அதிகளவு விட்டமின் ஏ, பி1, பி2, மற்றும் சி ஆகிவை உள்ளது. அதுமட்டுமின்றி இதில் மினரல்கள், சல்பர் மற்றும் ஐயோடின் ஆகியவை அடங்கியுள்ளது. இது கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க இது உதவுகிறது.

10. பிரியாணி இலைகள்

10. பிரியாணி இலைகள்

இந்த பிரியாணி இலைகளுக்கு உடலின் செரிமானத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது தசைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்குவதற்கு உதவுகின்றன. மேலும் உடலில் உண்டாகும் வலிகளை போக்கவும் இந்த பிரியாணி இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

11. புளி

11. புளி

புளி உணவுக்கு சுவையூட்டும் ஒரு பொருள் மட்டும் அல்ல. இது பூஞ்சைகளால் உண்டான தொற்றுகளை போக்கவும், அவை உண்டாகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

12. புதினா

12. புதினா

புதினா இலைகள் ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. இந்த புதினா, அசைவ மற்றும் அதிக கொழுப்பு உணவுகள் ஜீரணமாகும் வேகத்தை அதிகரிக்கிறது. புதினா மலச்சிக்கலை போக்க உதவும் அருமையான மருந்தாகும். மேலும் இது பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது.

இது வயிற்றில் உள்ள புழுக்களை போக்க உதவுகிறது. மேலும் இரத்தசோகை நீக்குகிறது. வயிற்றுப்போக்கு நீங்குகிறது.

13. இஞ்சி

13. இஞ்சி

இஞ்சி சாறு சாப்பிட்டால் வயிற்று நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி சாறு குடித்து வர நீரிழிவு நோய் தீரும். இஞ்சி சாறு குடித்து வந்தால் உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ancient Home Remedies For Day today Health Issues

Ancient Home Remedies For Day today Health Issues