உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமா? அப்ப இந்த உணவுகளுக்கு 'குட்-பை' சொல்லுங்க...

Posted By:
Subscribe to Boldsky

தலைவலி அனைவருக்குமே வரும் ஓர் பொதுவான பிரச்சனை தான். சாதாரண தலைவலி அளவுக்கு அதிகமாக டென்சன், கடுமையான பசி, உடலில் நீர் வறட்சி போன்றவற்றால் ஏற்படும். சில சமயங்களில் தலைவலி உணவுகளின் காரணமாகவும் ஏற்படும். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், தலைவலி வருவதற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதில் உணவுகளும் ஒன்று.

உங்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மோசமாக இருந்தால், அதனால் தலைவலியை சந்திக்க நேரிடும். எந்த உணவுகள் தலைவலியை உண்டாக்கும் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. எனவே தான் தமிழ் போல்ட் ஸ்கை அடிக்கடி தலைவலியை சந்திப்பவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உட்கொள்வதைத் தவிர்த்தால், தலைவலியில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

ஆய்வு ஒன்றில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் சிலருக்குத் தலைவலியைத் தூண்டுவதாக தெரிய வந்துள்ளது. எனவே நீங்கள் தலைவலியால் அடிக்கடி கஷ்டப்படுபவராயின் ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்ளாதீர்கள்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. எனவே உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பின், சிவப்பு மிளகாய் சேர்த்த உணவுப் பொருட்களை உட்கொள்ளாதீர்கள்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி போன்றவற்றில் தைரமின் மற்றும் ஹிஸ்டமைன் போன்றவை உள்ளது. இவை தலைவலியைத் தூண்டிவிடக்கூடியவை. எனவே தலைவலி இருப்பவர்கள், இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

காபி

காபி

காபி உங்கள் சோர்வை நீக்கி, உங்களை எச்சரிக்கையுடன் செயல்பட வைக்கும். இருப்பினும் எதற்கெடுத்தாலும் காபியை அதிகமாக குடித்து வந்தால், அதில் உள்ள காப்ஃபைன் தூக்கமின்மையை ஏற்படுத்தி, தலைவலியைத் தூண்டிவிடும்.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம்

அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் ஐஸ் க்ரீம். ஆனால் இந்த ஐஸ் க்ரீம் தலைவலியைத் தூண்டிவிடும் பொருள் என்பது பலருக்கும் தெரியாது. இது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், இது தலைவலியைத் தூண்டிவிடும். மேலும் ஆய்வுகளில் பங்கு பெற்ற பலரும் ஐஸ் க்ரீம் உட்கொண்ட பின் தலைவலியை சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Say No To These Foods If You Have A Headache

In this this article, we at Boldsky have shared some of the foods that you should avoid eating if you suffer from headaches regularly.
Subscribe Newsletter