மாதவிடாய் கோளாறை சரிப்படுத்தும் உணவுகள் எவை தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

28 நாட்கள் சுழற்சியில் கருப்பையில் ஒரே ஒரு முட்டை உருவாகி அது கருவுறுதலுக்காக தசைகளை இறுக்கி காத்திருக்கும்போது, அது நடைபெறாமல்போகும் சமயத்தில் உண்டாகும் தளர்வால் உதிரப்போக்கு உண்டாகிறது.

இதை மாதவிடாய் என்று சொல்கிறோம். இந்த சுழற்சி ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் மேற்பார்வையில்தான் நடைபெறும்.

Natural remedies for irregular periods

மாதவிடாய் சரியாக இந்த 28 நாட்கள் சுழற்சியில் உருவாகிறது. இவ்வாறாக மாதம் ஒரு முறை மாதவிடாய் வந்தால் எப்பெண்ணின் கருப்பை நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள்.

ஆனால் மாதவிடாய் வராது போனால் அல்லது முறையில்லாமல் மாறி மாறி வந்தால் கருப்பை, முட்டை, ஹார்மோன் அகிய்வற்றில் ஏதாவ்து பாதி உண்டாகியிருக்கக் கூடும்.

இங்கே சொல்லப்பட்டிருக்கும் உணவுகள் கர்ப்பப்பையை பலப்படுத்தி மாதவிடாயை நேர்ப்படுத்தும். தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளிக் காய் :

பப்பாளிக் காய் :

பப்பாளிக் காய் கர்ப்பப்பையை பலப்படுத்தும். தசைகளுக்கு வலிமை தந்து மாதவிடாயை ஏற்படுத்தும். பப்பாளிக்காயை ஜூஸாகவும் அல்லது பொறியல் போலவும் எடுத்துக் கொள்ளலாம்.

பாகற்காய் :

பாகற்காய் :

பாகற்காய் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டும். சில வாரங்களுக்கு தினம் ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடித்து பாருங்கள். மாதவிடாய் சீராகும்.

கற்றாழை :

கற்றாழை :

கற்றாழையின் சதைப் பகுதியை நன்றாக பலமுறை கழுவி அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது மாதவிடாய் கோளாறை சரிப்படுத்தி கர்ப்பப்பையை ஆரோக்கியப்படுத்தும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைட வினிகர் மதவிடாயை பிரச்சனையை சரிப்படுத்தும் சிறந்த மருந்தாகும். 1- 2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் குடித்து பிரச்சனை சரியாகும்.

பட்டை :

பட்டை :

பட்டை கர்ப்பப்பையை வலுவாக்கும். மாதவிடாயை சீர்படுத்தும். தினமும் பாலில் 1 ஸ்பூன் பட்டைப் பொடியை கலந்து குடியுங்கள். மாதவிடாய் கோளாறு குணமாகும்.

சோம்பு :

சோம்பு :

ஒரு ஸ்பூன் சோம்பை ஒரு டம்ளர் நீரில் போட்டு முந்தைய இரவில் ஊற விடுங்கள். மறு நாள் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது நல்ல பலனைத்தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural remedies for irregular periods

Try these Natural home remedies to regulate the menstrual cycle which helps to strengthen the uterus and stimulate the hormone synthesis.
Story first published: Saturday, October 22, 2016, 8:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter