வயிற்றுப் போக்கை வீட்டிலிருந்து குணமாக்குவது எப்படி ?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

வேண்டாத கிருமிகளோ, ஆகாத உணவுகளோ நமது உடலில் செல்லும்போது நோய் எதிர்ப்பு செல்கள் எதிர்ப்பு காட்டும். அந்த சமயங்களில் குடல்களில் ஏற்படும் பாதிப்புதான் வயிற்றுப் போக்காகவோ, வாந்தியாகவோ வெளிப்படும்.

Home remedies for loose motion

திடீரென வயிற்றுபோக்கு வந்தால் அருகில் மருத்துவர் இல்லையென்றாலும் பயப்படத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு குணப்படுத்திவிடலாம். அவை எப்படி என பார்ப்போம்

யோகார்ட் :

யோகார்ட் நல்ல பாக்டீரியாக்களை குடலில் உற்பத்தி செய்யும். இவை குடலில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடும். வயிற்றில் எற்படும் பிரச்சனைகளையும் தீர்க்கும். தினமும் ஒரு கப் யோகார்டை மூன்று வேளையும் பிரித்து சாப்பிடலாம்.

Home remedies for loose motion

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் வயிற்றுப் போக்கை நிறுத்தும். சிறுகுடலிற்கு நிவாரணம் அளித்து, அதில் உண்டாகும் பிரச்சனைகளை குணப்படுத்தும். 2ஸ்பூன் அளவு ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சில துளி தேன் சேர்த்து பருகவும். தினமும் 2, 3 முறை குடிக்கலாம். விரைவில் குணம் கிடைக்கும்.

Home remedies for loose motion

வாழைப்பழம் :

வயிற்றுப் போக்கின்போது உடலில் நீரிழப்பு ஏற்படும். தேவையான எலக்ட்ரோலைட் இல்லாததால் உடல் சம நிலையற்று ஆபத்தில் போய் முடியும். அந்த சமயங்களில் வாழைப்பழத்தில் சாப்பிடும்போது முக்கிய தனிமமான பொட்டாசியம் உடலுக்கு கிடைக்கிறது. அது வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தவும் செய்கிறது.

Home remedies for loose motion

பட்டை :

பட்டை வயிறு சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. இதிலுள்ள மருத்துவ குணங்கள் தீங்கு விளைவிக்கக் கூடிய வைரஸ்களை அழிக்கிறது. மேலும் ஜீரண மண்டலத்தில் சுரக்கும் என்சைம்களை நன்றாக சுரக்கத் தூண்டுகிறது.

ஒரு கப் நீரில் ஒரு டீ ஸ்பூன் பட்டைப் பொடியையும், அரை டீஸ்பூன் துருவியையும் சேர்த்து நீரினை கொதிக்க வையுங்கள். பாத்திரத்தை மூடி வைத்து அரை மணி நேரம் நன்றாக கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டி வெதுவெதுப்பாக குடித்தால், வயிற்றுப் போக்கு குணமடையும்.

Home remedies for loose motion

மாதுளை சாறு :

மாதுளை தீங்கு விளைவிக்கும் வைரஸை அழிக்கும். குடலின் இயக்கத்தை நன்றாக தூண்டும். வாந்தி, குமட்டல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும். வயிற்றுபோக்கினால் வரும் வலியை குறைக்கும். தினமும் காலை மாலை என ஒரு கிளாஸ் மாதுளம்பழச் சாறு குடிக்கவும்.

திரவ ஆகாரம் :

வயிற்றுப் போக்கினால் நிறைய நீரிழப்பு ஏற்படும். அந்த சமயங்களில் நிறைய நீர்சத்து உடலுக்குள் செல்ல வேண்டும். இல்லையெனில் நினைவுகூட இழக்க வேண்டியது வரும். பழச்சாறுகள், முக்கியமாக சிட்ரஸ் வகைபழச் சாறுகள் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். குடலுக்கு இதம் தரும். முக்கியமாய் நிறைய நீர் அருந்த வேண்டும்.

Home remedies for loose motion

ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் :

ஸ்டார்ச் உள்ள உணவுகள் வயிற்றுப் போக்கை விரைவில் குணப்படுத்த உதவுகின்றன. உடலுக்கு தேவையான சத்துக்களை ஸ்டார்ச்சிலிருந்து உறிஞ்சுக் கொள்ளும். அவித்த உருளைக் கிழங்கு, வேகவைத்த கேரட் அரிசி சாதம் ஆகியவை வயிற்றுப் போக்கை குணப்படுத்த உதவும்.

English summary

Home remedies for loose motion

Home remedies for loose motion
Story first published: Thursday, June 16, 2016, 16:30 [IST]