வயிற்றுப் புழுக்களை நீக்கும் எளிய முறைகள் !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

சுயமாக உணவைத் தேடாமல், நமது உடலுக்குள் ஊடுருவி, சத்துக்கள் மற்றும் ரத்தத்தை உணவாக எடுத்துக் கொள்பவைதான் ஒட்டுணிகள். நம்மை சார்ந்து, நமது குடல்கலில் ஒட்டி தமை வளர்த்துக் கொள்ளும்.

சுற்றியிருக்கும் பொருட்கள், ஆடைகள், மற்றும் பலவகைகளைல் நம் கைகளின் மூலமாக நமது உடலுக்குள் சென்று விடும். அங்கே ஒடி நம் சத்துக்களை உண்டு தம்மை காத்துக் கொள்ளும். இதனால் பெரிய பாதிப்பு இல்லையென்றாலும், நமது உடலில் சத்துக்கள் தங்காமல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்பட நேரிடும். இதனை வீட்டிலேயே இயற்கையாக சரி பண்ணலாம் எப்படி என பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேரட் :

கேரட் :

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரு கேரட்டை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும். இனிமேல் வருவதையும் தடுக்கலாம். அதோடு கண்பார்வை உள்ளிட்ட பல பிரச்சனைகளை வராமல் காத்திடலாம்.

பப்பாளி விதைகள் :

பப்பாளி விதைகள் :

வயிற்றுப் புழுக்களை நீக்க மிகச் சிறந்த வழி பப்பாளி விதைகள் தான். எப்பேர்பட்ட புழு பூச்சிகளையும் அழித்துவிடும் என மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் நிருபித்துள்ளார்கள். பாப்பாளி விதைகளை காய வைத்து பொடி செய்து தினமும் பெரியவர்கள் 1 ஸ்பூன் , குழந்தைகள் கால் ஸ்பூன் சாப்பிட்டால் சில நாட்களில் புழுக்கள் வெளியேறிவிடும்.

புதினா + எலுமிச்சை :

புதினா + எலுமிச்சை :

தினம் காலையில் ஒரு கப் புதினா சாறில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து உப்பு சிறிது சேர்த்து குடித்தால் ஒட்டுண்ணுகள் அழியும்.

தேங்காய் :

தேங்காய் :

அரைத்த தேங்காய் மற்றும் தேங்காய் நீரை தொடர்ந்து ஒரு வாரம் எடுத்துக் கொண்டால் பூச்சிகள் அழிந்துவிடும்.

மாதுளை :

மாதுளை :

மாதுளைஇலைகளை இளங்கொழுந்தாக எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது மாதுளை பழச் சாறை அருந்தி வந்தால் புழுக்கள் வெளியேறிவிடும்.

 தயிர் :

தயிர் :

அதிகமாக தயிர் சேர்த்துக் கொள்ளும்போது உடலில் நல்ல பேக்டீரியாக்கள் வளரும். இவை ஒட்டுணிகளை அழித்து வெளியேற்றும். ஆகவே அதிகமாக தயிர் , மோர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கிராம்பு :

கிராம்பு :

கிராம்பு வயிற்றுப் புழுவை மட்டுமின்றி, அவைகளின் முட்டைகளையும் சேர்த்து அழித்துவிடும். ஆகவே தினமும் கிராம்பு ஒன்றை நன்றாக மென்று சாப்பிடுங்கள். வயிற்றுப் பூச்சி புழுத் தொல்லை இனி இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies to get rid of Intestinal parasites

Home Remedies to get rid of Intestinal parasites
Please Wait while comments are loading...
Subscribe Newsletter