உடலுக்கு அரோக்கியம் தர சேண்ட்விச்சை இப்படித்தான் நீங்கள் சாப்பிட வேண்டும் !!

Written By:
Subscribe to Boldsky

சாண்ட்விச் உடலுக்கு நல்லதுதான். ஆரோக்கியமான காலை சிற்றுண்டிகளில் முதன்மையானவைகளில் பிரட் சேண்ட்விச்சும் அடங்கியுள்ளது.

ஆனால் வெள்ளையான மைதா பிரட் உடலுக்கு கேடு விளைவிக்கும். கோதுமை மற்றும் பலவகை தானியங்களால் செய்யப்பட்ட பிரட் உடலுக்கு மிகவும் நல்லது.

healthy sandwich to eat

சேண்ட்விச்சை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே சத்துள்ளதாக நீங்கள் செய்யலாம். எப்படி அதனை சாப்பிட்டால் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீ நட் சேண்ட்விச் :

பீ நட் சேண்ட்விச் :

கோதுமை பிரட்

பீ நட் பட்டர்

வாழைப்பழ துண்டுகள்

பெர்ரி பழங்கள்

பெர்ரி மற்றும் வாழைப் பழங்களை துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். பிரட்டில் பீ நட் பட்டரை த்டவி அதன்மேல் பழத் துண்டுகளை தூவி அப்படியே சாப்பிடுங்கள். இவை அதிக புரதம் மற்றும் நார்சத்தை கொண்டவை. வயிறும் நிறையும்.

டனா சேண்ட்விச் :

டனா சேண்ட்விச் :

டனா சாலட்டை கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி ஸ்டோர் செய்து கொள்ளுங்கள்.

எப்போது தேவையோ அப்போது இரு பிரட்டை டோஸ்ட் செய்து இரு பிரட்டிற்கு நடுவில் டனா சாலட், மயோனைஸ் சேர்த்து அவற்றுடன் லெட்யூஸ் இலையை நறுக்கி மேலே தூவி சாப்பிடுங்கள். சுவையும் அதிகம் . சத்து மிகுந்தது.

மஷ்ரூம் சேண்ட் விச் :

மஷ்ரூம் சேண்ட் விச் :

கோதுமை பிரட்

சீஸ்

மஷ்ரூம்

மஷ்ரூமை வேக வைத்து பொடி செய்து கொள்ளுங்கள். பிரட்டில் சீஸ் வைத்து அதன் மேல் நறுக்கிய மஷ்ரூம் மற்றும் மிளகு, உப்பு தூளை தூவி சாப்பிடுங்கள்.

முட்டை மற்றும் சீஸ் சேண்ட்விச் :

முட்டை மற்றும் சீஸ் சேண்ட்விச் :

முட்டையில் வெங்காயம் மிளகுத்தூள் கலந்து ஆம்லெட் போட்டுக் கொள்ளவும். பின்னர் முழுதானிய பிரட்டில் ஆம்லெட்ர் மற்றும் சீஸ் வைத்து மற்றொரு பிரட்டினால் மூடி சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

healthy sandwich to eat

Eat bread in the form of sandwich in different ways
Story first published: Monday, December 5, 2016, 14:19 [IST]
Subscribe Newsletter