Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
திராட்சை, பீச் மற்றும் பேரிக்காய் பழச்சாறு நன்மைகள்!
திராட்சை, பீச் மற்றும் பேரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் மிகுந்த ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஜூஸ் செய்முறை பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
செரிமான பிரச்சனை சரியாக, மலமிளக்க கோளாறுகள் நீங்க, இரத்தம் சுத்திகரிப்பாக என பல நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டுள்ளது திராட்சை, பீச் மற்றும் பேரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸ்.

செயற்கையாகவோ, இயற்கையாகவோ உடலுக்கு ஒரு கோளாறு ஏற்படுகிறது எனில், அதை சரி செய்ய செயற்கை மருந்துகளை காட்டிலும், இயற்கை மருந்துகள் தான் சிறந்த தேர்வு.
செயற்கை மருந்துகள் உடனே மாற்றத்தை காண்பிக்கும், மெல்ல, மெல்ல பக்க விளைவுகளை வெளிப்படுத்தும். ஆனால், இயற்கை மருந்துகள் மெல்ல, மெல்ல ஆரோக்கியம் அளிக்கும், பக்கவிளைவுகள் அற்றது.

தேவையான பொருட்கள்!
திராட்சை - ஒரு சிறிய கொத்து.
பீச் - ஒன்று.
பேரிக்காய் - ஒன்று.

வைட்டமின் சத்துக்கள்!
திராட்சை, பீச் மற்றும் பேரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்..,
வைட்டமின் A, B, B1, B2, C, E, K மற்றும் PP

செய்முறை!
எல்லா பழங்களையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
பேரிக்காய் மற்றும் பீச் பழத்தில் இருந்து விதிகளை அகற்ற மறக்க வேண்டாம்.
எல்லா பழங்களையும் ஜூஸரில் போட்டு ஸ்மூத்தாக அரைத்துக் கொள்ளவும்.

நன்மைகள்!
திராட்சை, பேரிக்காய் மற்றும் பீச் பழச்சாறு குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்..,
ஆன்டி-ஆக்சிடென்ட் நன்மைகள் அளிக்கிறது.
உடலில் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.
இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஜூஸ்.
இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய உதவுகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
மலமிளக்க கோளாறுகளை சரிசெய்யும்.
கண்களின் ஆரோக்கியதிற்கு உகந்தது.
உடலுக்கு தேவையான மினரல் சத்துக்களை அளிக்கிறது.

குறிப்பு!
தேவை என்றால் இந்த ஜூஸுடன் சிறிய துண்டு இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications