3 நாட்களில் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக் கிருமிகளை அழிக்க இந்த ஜூஸை குடிங்க!

Posted By:
Subscribe to Boldsky

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் பூச்சிக்கொல்லி அடித்த உணவுகள் உண்டு உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து உடல்நலம் பாதிப்படைகின்றனர். குறிப்பாக கலிபோர்னியாவில் மட்டும் கடந்த ஆண்டு 7,600 பேருக்கு மேல் இதனால் பாதிப்படைந்தனர்.

உடலில் தேங்கும் நச்சு மற்றும் கொழுப்பை வேகமாக அகற்ற பயன்தரும் ஜூஸ்!

இது நமது நாட்டிலும் மெல்ல, மெல்ல நமக்கே தெரியாமல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வழியே இல்லையா என்றால், இருக்கிறது. ஒன்று பூச்சிக்கொல்லி பயன்பாட்டை தடுக்க வேண்டும். மற்றொன்று உணவு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

நீரில் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்து உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்!

இதுவரை உட்கொண்டதால் உடலில் தேங்கியிருக்கும் விஷத்தன்மை கொண்ட நச்சுக்களை போக்க இஞ்சி, மஞ்சள் கலந்த கேரட் ஜூஸ் குடித்தால் நல்ல பலனை பெற முடியும், நச்சுக்களை விரைவாக உடலில் இருந்து போக்கவும் முடியும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

  1. கேரட் - மூன்று அல்லது நான்கு
  2. அப்பில் - ஒன்று
  3. இஞ்சி - அரை இன்ச் அளவு
  4. மஞ்சள் - கால் இன்ச் அளவு
  5. எலுமிச்சை - கால்வாசி
 செய்முறை:

செய்முறை:

இந்த ஜூஸை செய்ய ஜூஸர் பயன்படுத்துவது சிறந்தது. அப்படி இல்லையேல் நன்கு அரைத்து உங்களுக்கு பிடித்த தண்ணீர் பாணத்தில் கலந்து பருகலாம். குறிப்பாக தேங்காய் பாலில் கலந்து குடிப்பது சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

 செய்முறை:

செய்முறை:

முதலில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஜூஸரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். பிறகு வடிக்கட்டி பருகுங்கள். ஒருநாளுக்கு ஒருமுறை வீதம் பருகினாலே போதுமானது.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் வயிற்றை சுத்தம் செய்யவும், நோய் எதிர்ப்பை அதிகரிக்கவும், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடவும், அழற்சியை போக்கவும் உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் ஒரு இயற்கை மூலிகை மருத்துவ பொருள் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.இதில் ஆண்டி-ஆக்ஸிடன்ட் அதிகம். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், நச்சுக்களை போக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் உயர்ரக ஆண்டி-ஆக்ஸிடன்ட் உடற்சக்தியை மேம்பட உதவுகிறது. மேலும், இதிலிருக்கும் இயற்க்கை ஆண்டி-பயாடிக் நோய் தொற்றை உண்டாக்கும் நச்சுக் கிருமிகளை அழிக்க பயன்படுகிறது.

கேரட்

கேரட்

கேரட்டில் ஆண்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் எ சத்துக்கள் மிகுதியாக உள்ளன. இவை, கண் பார்வை அதிகரிக்க, நச்சுக்களை அழிக்க எதிர்த்து போராட வெகுவாக உதவுகின்றன.

 நன்மைகள்!

நன்மைகள்!

இந்த ஜூஸ் தினமும் ஒரு முறை குடித்து வந்தால் ஒரு வாரத்திற்குள் உடலில் தேங்கியிருக்கும் விஷத்தன்மை கொண்டுள்ள நச்சுக்களை போக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சுவையான திருநெல்வலி இருட்டு கடை அல்வா..!!

English summary

Health Benefits Of Ginger Turmeric Carrot Juice

Health Benefits Of Ginger Turmeric Carrot Juice, read here for in depth info, in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter