Just In
- 2 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 4 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 5 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 9 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- News
உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Sports
இந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி!
- Movies
"பேப்பர் பாய்" பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்
- Finance
பலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காலையில் சாப்பிடக்கூடாத சில காலை உணவுகள்!
ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக காலையில் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கால்சியம் போன்றவை இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருந்தால் தான், காலை உணவு சாப்பிடுவதில் பலன் உள்ளது.
ஆகவே பழங்கள், பால், தானியங்கள் போன்றவை கலந்த சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் பலர் அடிக்கடி காலை வேளையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் மிகுந்த உணவுகளை காலையில் சாப்பிடுகிறோம். அவற்றில் சில சாதாரணமாக நாம் சாப்பிடுபவைகளாக இருந்தாலும், அவைகள் காலை உணவிற்கு உகந்தது அல்ல.
சரி, இப்போது காலையில் சாப்பிடக்கூடாத சில காலை உணவுகள் குறித்து காண்போம். அவற்றைப் படித்து தெரிந்து, இனிமேல் காலையில் அந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.

பட்டர் ஆலு பரோட்டா
இது வட இந்தியாவில் காலை உணவாக சாப்பிடப்படும் ஓர் உணவாகும். வெண்ணெய் கலந்த உணவை காலை வேளையிலேயே உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு வேகமாக அதிகரிக்கும். ஆகவே இதனை காலை வேளையில் உண்பதற்கு பதிலாக, பசலைக்கீரை பரோட்டா தயாரித்து சாப்பிடுவது சிறந்தது மற்றும் சுவையானதும் கூட.

பூரி
எண்ணெயில் பொரித்து தயாரிக்கப்படும் பூரி, காலையில் சாப்பிடுவதற்கு உகந்த ஆரோக்கியமான காலை உணவுகளில் ஒன்றல்ல. ஆகவே பூரியை காலையில் சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, சப்பாத்தி செய்து சாப்பிடுவது சிறந்த வழி.

பாவ் மற்றும் உசல் சேவ்
இது ஒரு மகாராஷ்ட்ரிய உணவு. மகாராஷ்ட்ராவில் உள்ள பெரும்பாலான மக்கள் இதனை காலை வேளையில் சாப்பிடுவார்கள். ஆனால் இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல. மாறாக, முளைக்கட்டிய பயிர்களைக் கொண்டு சாலட் தயாரித்து சாப்பிடலாம்.

நூடுல்ஸ்
நூடுல்ஸ் காலையில் நொடியில் தயாரித்து சாப்பிடக்கூடிய ஒரு உணவாக இருந்தாலும், இதில் சுத்திகரிக்கப்பட்ட மாவுகளும், பதப்படுத்தப்படும் பொருட்களும் உள்ளதால், இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இதற்கு சிறந்த மாற்றாக, சேமியாவை வேக வைத்து பால் அல்லது காய்கறி மசாலாவை சேர்த்தோ சாப்பிடலாம்.

சாண்ட்விச்
பலரும் சாண்ட்விச் ஒரு ஆரோக்கியமான காலை உணவாக கருதுகின்றனர். ஆனால் உண்மையில், சுத்திகரிக்கப்பட்ட மாவினால் தயாரிக்கப்படும் பிரட் கொண்டு தயாரிக்கப்படுவதால், இது வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு உகந்த காலை உணவு அல்ல. இதற்கு சிறந்த மாற்றாக உப்புமா அல்லது இட்லியை சாப்பிடலாம்.

எனர்ஜி சாக்லேட் பார்கள்
எனர்ஜி பார்களில் சர்க்கரையும், கலோரிகளும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இதனை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், விரைவில் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கக்கூடும்.