ரத்தக் கட்டிகளை சரிப்படுத்தும் மசாலா பொருட்கள் எவையென தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

உடலில் ரத்தம் சீராக தடங்கலின்றி செல்லும்போது, திசுக்கள் உடலின் எந்த வித பாதிப்பையும் ரிப்பேர் செய்து உடலை சீராக வைத்துக் கொள்ளும்.

ஆனால் அடிபடுவதாலோ அல்லது ஏதாவது பிரச்சனையால் ரத்தக் கட்டிகள் உருவாகினால் அவை மூளைக்கு செல்லும் ரத்தத்தை பாதிக்கச் செய்து, பக்க வாதம் முதல் புற்று நோய்கள் வரை ஏற்படுத்திவிடும். ரத்தக் கட்டிகள் தானாக கரைந்தாலும், கொழுப்பு அதிகமாக ரத்தத்தில் இருக்கும்போது கரைய தாமதமாகி சில சமயம் உயிருக்கு ஆபத்தாய் விளைவிக்கும்.

ஆனால் ரத்தக் கட்டிகளை நாம் உண்ணும் உணவிலேயே சரிப்படுத்தலாம் என தெரியுமா? காரமான மசாலா பொருட்களை உடலிற்கு நல்லதில்லை என தவிர்ப்போம். ஆனால் காரமே சேர்த்துக் கொள்ளாமல் இருந்தாலும் நல்லதில்லை. கொழுப்புகள் குடல்களிலும், ரத்தக் குழாய்களிலும் படிந்துவிடும். நல்லது. அவை ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகின்றன. எப்படி என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இஞ்சி :

இஞ்சி :

இஞ்சியை தினமும் சமையலில் பயன்படுத்துபவர்களுக்கு ரத்தக் கட்டிகள் உருவாவதில்லை. இவைகளில் உள்ள சத்துக்கள் ரத்தம் ஆங்காங்கே தங்குவதை தடுக்கின்றன. ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகின்றன. காயங்களை ஆற்றும் பண்புகளை கொண்டவை.

ரத்தக் கட்டிகளால் பின்னாளில் வரும் பக்க வாதத்தை தடுக்கும்.

பட்டை :

பட்டை :

ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் திறனை பட்டை பெற்றுள்ளது. கட்டிகளை கரைக்கும் பண்புகளையும் பெற்றுள்ளது. அதனால் இவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

சிவப்பு மிளகாய் பொடி :

சிவப்பு மிளகாய் பொடி :

சிவப்பு மிளகாய் அல்லது அதன் பொடி காரமாக இருந்தாலும் பல நன்மைகளை கொண்டவை. கொழுப்புகளை கரைத்துவிடும். ரத்தக் கட்டிகளுக்கு எதிராக செயல்புரிந்து அவற்றை கரைக்கும் ஆற்றலுடையது. அது உடலுக்கு நல்லதல்ல என பலரும் நினைக்கிறார்கள். அவற்றை தாரளமாக உறைக்கும் அளவிற்கு சேர்த்துக் கொண்டால் உடலிற்கு தகுந்த எதிர்ப்பு சக்திகள் பெருகும்.

மஞ்சள் :

மஞ்சள் :

மஞ்சளின் மருத்துவ குணங்கள் கணக்கிலடங்காதது. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கிருமிகளை அழிக்கும். ரத்தத்தில் அடர்த்தியை குறைக்கும். மஞ்சளை காயக் கட்டிகளின் மீதும் பற்றாக போடலாம். விரைவில் ஊடுருவும் தன்மை உடையது. அதேபோல் உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

 புதினா :

புதினா :

புதினா ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்துகிறது. இதயத்தை பலப்படுத்தும். தினமும் சேர்த்துக் கொள்வதால் ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.

ஓமம் :

ஓமம் :

ஓமம் ரத்த அடர்த்தியை குறைக்கிறது. கொழுப்பையும் கரைக்கிறது. ரத்தத்தை தடைபடாமல் ஓடச் செய்யும் வலிமை வாய்ந்தது. ரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மை பெற்றவை. ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods that prevent Blood clots

How can prevent Blood clot by eating Spicy foods
Story first published: Friday, September 2, 2016, 14:21 [IST]