முறையற்ற மாதவிலக்கை ஒழுங்குபடுத்த வேண்டாமா? உங்களுக்கான மூலிகை உணவுகள்!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

பெண்களின் உடல் ஆரோக்கியமாக செயல்படுகிறது என்பதன் அறிகுறிகளில் ஒன்று சீரான மாதவிலக்கு. ஹார்மோன் சரியான முறையில் இயங்கினால் மாதத்திற்கு ஒருமுறை கருமுட்டை தயார் ஆகும். பின் கருமுட்டை , ஃபெலோபியன் டியூபில் விந்தணுவை நோக்கி காத்திருக்கும். விந்தணு வந்தால் அதோடு கருமுட்டை இணைந்து நேராக கர்பப்பைக்குள் சென்று கருவை உருவாக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் விந்தணு வராமல் போனால், ஏமாற்றமடைந்து உடைந்து போவதால், சுற்றி இறுகப்பற்றியிருக்கும் தசைகள் தளர்ந்து உதிரப் போக்கு ஆரம்பிக்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அந்த சமயத்தில் சுரப்பதை நிறுத்தும்.

இப்படி நடக்காமல் மாதவிலக்கு முறையில்லாமல் நடந்தால் ஹார்மோன் சரியான முறையில் இயங்கவில்லை என என்பதன் அறிகுறி. இது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். இதற்கு மருத்துவரை கலந்தாலோசித்து தகுந்த முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.

அதோடு உடல் எடை குறைக்க, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டும் வகையில் உங்கள் டயட்டை மேற்கொண்டால் மருத்துவரின் அவசியமின்றி உங்கள் மாதவிலக்கை சீர்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளிக் காய் :

பப்பாளிக் காய் :

பப்பாளிக் காய் கருப்பையை வலுப்படுத்தும். கர்ப்பப்பை பலவீனமகா இருந்தாலும் ஹார்மோன் பிரச்சனை உண்டாகும். பப்பாளிக்காயில் உள்ள சத்துக்கள் கர்ப்பப்பையை சுற்றிலும் உள்ள தசைகளை பலப்படுத்தி, மாதவிலக்கை நெறிப்படுத்துகிறது. தொடர்ந்து 2 மாதங்களுக்கு அடிக்கடி பப்பாளிக் காயை சமைத்து சாப்பிடுங்கள். நீங்கள் மாற்றத்தை காண்பீர்கள்.

ஆலமர வேர் :

ஆலமர வேர் :

புதிய ஆலமர வேரை எடுத்து அதனை ஒரு கப் நீரில் 10 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். அதனை வடிகட்டி அதனுடன் சிறிது பால் கலந்து இரவு தூங்குவதற்கு முன் குடித்தால் முறையற்ற மாதவிலக்கு சீராகும்.

சோம்பு :

சோம்பு :

ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் சோம்பை போட்டு இரவு முழுவதும் அப்படியே மூடி வைத்திருங்கள். மறு நாள் இந்த நீரை வடிகட்டி குடித்தால் மாதவிலக்கு முறையாகும்.

பாவக்காய் ஜூஸ் :

பாவக்காய் ஜூஸ் :

பாவக்காய் ஜூஸ் கசப்பாக இருந்தால் முறையற்ற மாதவிலக்கை சீர்படுத்தும் சிறந்த மருந்தாகும். பாவக்காயை பொடியாக நறுக்கி அதனுடன் 1 கிளாஸ் நீரை சேர்த்து அரைத்து வடிகட்டி குடியுங்கள். தினமும் இருதடவை குடித்தால் கர்ப்பப்பையில் உண்டான பிரச்சனைகள் குணப்படுத்தும். கசப்பாக இருந்தாலும் மருந்து என நினைத்து குடியுங்கள்.

கற்றாழை :

கற்றாழை :

சோற்றுக் கற்றாழை இரைப்பைக்கு மட்டுமல்ல, கர்ப்பப்பைக்கும் மிகவும் நல்லது. இது ஹார்மோன் குறைபாட்டை சரிபடுத்தும். கற்றாழையிலுள்ள சதைப்பகுதியை எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வாருங்கள். தினமும் சாப்பிட வேண்டும். உங்கள் கருப்பை பிரச்சனைகள் விலகும்.

முள்ளங்கி மோர் :

முள்ளங்கி மோர் :

முள்ளங்கியை நருக்கி மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் 1 டம்ளர் மோர் கலந்து அதனை நாள் முழுவதும் அவ்வப்போது குடிக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம். இது நல்ல பலனைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Foods to Regulate irregular Periods

Foods to Consume For Irregular menstruation Cycle
Story first published: Monday, August 29, 2016, 12:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter