For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனப்பதட்டத்தை குணமாக்கும் உணவுகளைத் தெரியுமா?

|

மனப்பதட்டம் என்பது இன்றைய உலகில் அதிகரித்து வருகின்றது. இயற்கையான சூழ் நிலைகளில் யாரும் வளர்வது கிடையாது.

முற்றிலும் ஒரு செயற்கைத்தனமான உறவுகளிலும், சுற்றுபுறத்திலும் வாழ்வது வேலை அழுத்தம், பொருளாதார நிலைமை ஆகியவற்றுடன் போட்டி போட்டு மன அழுத்தத்தை உண்டு பண்ணுகிறது. இதனால் அதிக மனப்பதட்டம், நிம்மதியின்மை என எப்போது ஏதாவது இழந்தது போன்ற சூழ் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

Food that controls anxiety

அடுக்குமாடி குடியிருப்புகளில் வெயிலையும் மழையையும் ரசிக்காமல் நான்கு சுவற்றுக்குள் முடங்காமல் வெளியே வரவேண்டும். மனிதர்களோடும், இயற்கையான பசுமையான காட்சிகளையும் பார்த்தால்,மன இறுக்கம் குறையும்.

அதோடு உணவிற்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. மசாலா நிறைந்த காரமான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு கோபம் இயற்கையாகவே அதிகமாக வருவதுண்டு. அதேபோல் காரமற்ற உணவுகள் மனதை சாந்தமாகவே வைத்திருக்கும்.

வெள்ளி , செவ்வாய்களில் அசைவ உணவையும், சிலர் வெங்காயம், போன்ற காரமான உணவும் பொருளையும் தவிர்ப்பதற்கு காரணம் அமைதியான மனதை பெறுவதற்காக மட்டுமே. இதுபோல் நல்ல உணர்வுகளைத் தரும் உணவுகளை கொஞ்சம் கவனிப்போம்

முழு தானியங்கள் :

முழு தானியங்களில் மெக்னீசியம் அதிக அளவு உள்ளது. இவை நரம்புகளை சாந்தப்படுத்துகிறது. அதேபோல் அவைகளிலிருக்கும். ட்ரிப்டோஃபேன் மனதை அமைதிப்படுத்தும் காரணியாகும்.

கடற்பாசி :

கடற்பாசியிலும் மெக்னீசியம் மற்றும் ட்ரிப்டோஃபேன் அதிகமாக உள்ளது. மேலும் முழுதானியங்களான கோதுமை போன்றவை சிலருக்கு அலர்ஜியை தரும். அதில் குளுடன் அதிகமாக இருப்பதால் அலர்ஜி உண்டாகும்.

அவ்வாறு பிரச்சனை இருப்பவர்கள் கடற்பாசியை உண்டால், மிகவும் நல்லது. கொதுமையிலிருக்கும் சத்துக்களும் கிடைக்கும். மனத்தளர்ச்சியும் தடுக்கும்.

ப்ளூ பெர்ரி :

ப்ளூ பெர்ரி பழங்களில் ஃபைடோ சத்துக்கள் அதிகம். அவை மனப்பதட்டத்தை குறைப்பவை. மனம்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். தேக ஆரோக்கியத்தையும் , மன ஆரோக்கியத்தையும் ஒருசேர பெறலாம்.

பாதாம் மற்றும் சாக்லேட் :

பாதாமில் ஜிங்க் மற்றும் இரும்பு சத்து உள்ளது. இவை மூளையை அமைதியாக வைத்திருக்க உதவும்.

சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்த்தை உண்டாக்கும் ஹார்மோனான கார்டிசாலை சம நிலை படுத்தி, ஒழுங்காக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.

English summary

Food that controls anxiety

How can be controlled anxiety by food
Story first published: Wednesday, July 27, 2016, 14:47 [IST]
Desktop Bottom Promotion