விட்டமின் சியை நீங்கள் எடுத்துக் கொண்டால் என்னாகும் எனத் தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

விட்டமின் சி நம் உடலின் செல் வளர்ச்சிக்கு, தழும்புகளை ரிப்பேர் செய்ய மற்றும் குருத்தெலும்புகளின் சவ்வுப்பகுதிகள் உருவாகவும் மிகவும் இன்றியமையாதது. இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கூட.

இது பழங்களிலும், காய்கறிகளிலும் அதிகமாக உள்ளது. கிவி, கொய்யா, ஆரஞ்சு புருக்கோலி, கீரை வகைகள், தக்காளி, வெள்ளரி, ஸ்ட்ரா பெர்ரி, பப்பாளி, நெல்லிக்காய் ஆகியவற்றில் அதிகம் உண்டு.

Did you know about benefits of Vitamin C

இது நீரில் கரையும் விட்டமின். வேக வைக்கும்போது எளிதில் அழிந்துவிடும். விட்டமின் சி உடலில் உற்பத்தி செய்ய முடியாது. இந்த சத்தை அப்போதைய தேவைக்கு அப்போதே உடல் பயன்படுத்திக் கொள்ளும். அதிக விட்டமின் சியை உடலில் சேமித்து வைக்க முடியாது என்று நிதி சாஹ்னி என்ற நியூட்ரிஷனிஸ்ட் விளக்குகிறார்.

விட்டமின் சி குறைந்தால் என்னவாகும்?

விட்டமின் சி குறைவினால், தசை, மூட்டு இணைப்புகளில் வலி, எடைக் குறைவு, பற்கள் பலவீனம், ஈறுகளில் ரத்தக் கசிவு, வறண்ட சருமம், கூந்தல் ஆகியவை பொதுவாக தோன்றும் பிரச்சனைகள். மிகத் தீவிர குறைப்பாட்டினால் உண்டாகும் வியாதிக்கு பெய ஸ்கர்வி.

Did you know about benefits of Vitamin C

விட்டமின் சி யின் பலன்களை தெரிந்து கொள்வோமா?

விட்டமின் சி உங்களை என்றும் பதினாறாக வைத்திருக்கும் காய கல்பம் எனக் கூறலாம். செல்களை புதுப்பித்து இளமையை நீடிக்கச் செய்யும் ஆற்றல் விட்டமின் சி க்கு உள்ளது.

ஜலதோஷம் :

விட்டமின் சி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்புத் திறனை பலப்படுத்தும். அலர்ஜியை கட்டுப்படுத்தும்.

குளிர்காலங்களில் விட்டமின் சி யை அதிகமாக எடுத்துக் கொண்டால், காய்ச்சல் ஜலதோஷம் ஆகியவை வராமல் கட்டுப்படுத்தலாம். ஆனால் வந்த பின் விட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை உண்ணக் கூடாது. இவை அதிகப்படுத்திவிடும்.

Did you know about benefits of Vitamin C

உயர் ரத்த அழுத்தம் :

உயர் ரத்த அழுத்தம் உண்டாகும் போது, விட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால், அவை ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

மன அழுத்தம் :

உடல் மற்றும் மன அழுத்ததால் உண்டாகக் கூடிய பிரச்சனைகளை குணப்படுத்தும் காரணிகளை விட்டமின் சி கொண்டுள்ளது. அழுத்தம் தரக் கூடிய ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துகிறது.

Did you know about benefits of Vitamin C

உடல் எடையை குறைக்கும் :

தொடர்ந்து விட்டமின் சி யை எடுத்துக் கொண்டால், கொழுப்பு வளர்சிதை மாற்றம் ஒழுங்காக நடைபெறும். இதனால் வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளிலுள்ள கொழுப்பு கணிசமாக குறைந்து, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

Did you know about benefits of Vitamin C

கொலாஜன் :

கொலாஜன் என்ற புரோட்டின் நிறைய நார் போன்ற மெல்லிழைகளால் ஆனது. அவை தோலினை இறுக்கி, நேர்த்தியான தோற்றத்தை தருகிறது.

இவை குறையும்போது, தோல் தளர்ந்து, வயதான தோற்றத்தை தரும். விட்டமின் சியை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது. கொலாஜன் உற்பத்தி அதிகமாகும்,. தழும்புகளிலும் வேகமாக செயல்படும்.

ஆரோக்கியமான சருமம் :

சருமத்தில் பாதிப்பு ஏற்படும்போது, சருமம் ஆரோக்கியமற்று, பொலிவின்றி இருக்கும். விட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணும்போது, சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளை குணப்படுத்துகிறது. சருமத்தை பாதுகாத்து, ஊட்டமளித்து, ஆரோக்கியமான சருமத்தை அளிக்கிறது.

Did you know about benefits of Vitamin C

இரும்புசத்து உட்கிரகிக்க :

உடலில் ஹீமோகுளோபினில் உள்ள இரும்பு சத்துதான் ஆக்ஸிஜனை உடலின் எல்லா பாகங்களுக்கும் கடத்தி செல்கிறது. இதனால் மொத்த உடலும் ஆக்ஸிஜனை பெற்று வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகின்றன. அந்த வகையில் இரும்புச்சத்தை உடலில் அதிகரிக்க, விட்டமின் சி மிகவும் முக்கியமாகும்.

English summary

Did you know about benefits of Vitamin C

Did you know about benefits of Vitamin C
Story first published: Thursday, July 7, 2016, 17:45 [IST]
Subscribe Newsletter