Latest Updates
-
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
திரும்ப திரும்ப உங்கள் பசியை தூண்டும் உணவுகள் எவை தெரியுமா?
ஆரோக்கியத்திற்கு தேவை நல்ல உணவு, நல்ல உணவுகள் பசியை தூண்டும். ஆனால் சில உணவுகள் அதிகரிக்கச் செய்யும். இதனால் உடல் பருமன் முதல் இதய நோய் வரை தாக்கப்படலாம். அத்தகைய உணவுகளைப் பற்றி காணலாம்.
பசி ஏற்படுவது இயற்கை. ஆனால் தகுந்த நேரத்தில் அவை செரிமானமாகி உடல் வலுவுடன் இருக்கும் அளவே இருப்பது ஆரோக்கியம். ஆனால் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு உங்களுக்கு பசித்தால் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் குறையிருக்கலாம்.
ஆமாம் சில உணவுகள் உங்கள் பசியை அதிகப்படுத்தும். பசியை தூண்டிவிடுவதர்கும், பசியை அதிகப்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. பசியை தூண்டும் மோர், பழச் சாறுகள் , புதுனா, கருவேப்பிலை உடலுக்கு நல்லது.

ஆனால் சில உணவுகள் உடல் வளர்சிதை மாற்றத்தில் மாறுபட்டை உண்டாக்கி அதிக அப்சியை உண்டாக்கிவிடும். இதனல் உடல் பருமன், சருக்கரை வியாதி ஆகிய்வை உண்டாகும். அவ்வாறான உணவுகளைப் பற்றி காண்போம்.

ஃப்ரெஞ்ச் ஃப்ரை :
ஃப்ரெஞ்ச் ஃப்ரை என உருளைக் கிழங்கில் பேக்கிங்க் செய்யப்பட்டு தரப்படும் இந்த உணவுகள் பசியை அதிகப்படுத்திவிடும்.
உங்களுக்கு அதுபோலவே சாப்பிட ஆசையென்றால் சர்க்கரை வள்ளிக் கிழங்கில் செய்து உண்ணலாம்.

வெள்ளை பிரட் :
வெள்ளை மைதாவில் செய்யப்படும் பிரட் உங்கள் பசித்தன்மையை அதிகபப்டுத்திவிடும். உடல் பருமனுக்கும், ர்க்கரை வியாதிக்கும் இது முக்கிய காரணங்கள்.

பச்சரிசி :
அரிசி வகைகளும் குறிப்பாக பச்சரிசி கூர்தீட்டப்பட்டது. இது உடலுக்கு நல்லதல்ல. அது தவிர்த்து பசியை அதிகம் ஏற்படுத்தும்.

சோடா :
சோடா பானங்களும் உங்கள் வயிறு நிரம்பிய உணர்வை தராது. பசியை ஏற்படுத்தும். இவை உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியவை.

செயற்கை பழச் சாறுகள் :
செயற்கை பழச் சாறுகள் என்பது மாம்பழம், ஆரஞ்சு என பழங்களின் வாசனை கொண்ட ரசாயனப் பொருட்களை சேர்ப்பதால் அவை உடலில் வளர்சிதை மாற்றத்தில் மாற்றத்தை உண்டுபண்ணும். அதோடு ஒழுங்கற்ற பசியை உண்டாக்கி, உடல் நலத்திற்கு பாதிப்பை உண்டாக்கும்.



Click it and Unblock the Notifications
