குப்பையென தூக்கி எறியும் பூசணி விதைகளை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் பற்றித் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பண்டிகை காலங்களில் பரங்கிக்காய் என்றழைக்கப்படும் மஞ்சள் பூசணியை பொரியல் செய்து சாப்பிடுவோம். இந்த மஞ்சள் பூசணியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, அதன் விதைகளிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அது தெரியாமல் பலரும் மஞ்சள் பூசணியின் விதைகளை தூக்கி எறிகிறோம். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் நீங்கள் அதை செய்யமாட்டீர்கள்.

பரங்கிக்காயின் விதைகளில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் காப்பர் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் அதில் ஜிங்க், இரும்புச்சத்து மற்றுடம் புரோட்டீனும் வளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பூசணி விதைகளை உங்கள் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயத்திற்கு நல்லது

இதயத்திற்கு நல்லது

1/4 கப் பரங்கிக்காய் விதையில் இருந்து ஒரு நாளைக்கு வேண்டிய மக்னீசியத்தின் அளவில் இருந்து பாதி கிடைக்கும். இந்த மக்னீசியம் இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையானது. மேலும் இச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், திடீரென மாரடைப்பு மற்றம் பக்கவாதம் வருவதைத் தடுக்கும். எனவே முடிந்த அளவில் அன்றாடம் உங்கள் உணவில் இதனை சேர்த்து வாருங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

மஞ்சள் பூசணியில் ஜிங்க் அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் மற்றும் சளி, காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து நம்மைக் காக்கும்.

புரோஸ்டேட் ஆரோக்கியம்

புரோஸ்டேட் ஆரோக்கியம்

வயதாக ஆக ஆண்களின் வலிமை குறைய ஆரம்பிக்கும். குறிப்பாக ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியம் குறையும். எனவே ஆண்கள் மஞ்சள் பூசணியின் விதைகளை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஜிங்க் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால் விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கும்.

நீரிழிவு

நீரிழிவு

ஆய்வில், பூசணி விதைகள் இன்சுலின் சுரப்பை சீராக்கி, நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுவதாக தெரிய வந்துள்ளது.

தூக்கம்

தூக்கம்

தூங்கும் சில மணிநேரங்களுக்கு முன் பரங்கிக்காய் விதைகளை ஃபுரூட் சாலட்டில் தூவி உட்கொண்டால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.

குறிப்பு

குறிப்பு

வீட்டில் வாங்கிய பரங்கிக்காயில் இருக்கும் விதைகளை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்கலாம். அதற்கு அந்த விதைகளை உலர வைத்து, வாணலியில் போட்டு லேசாக வறுத்து, அதனுள் இருக்கும் சிறு பருப்பை உட்கொண்டு வாருங்கள். இது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இல்லாவிட்டால் பரங்கிக்காய் விதைகளானது அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும். அதை வாங்கி சாலட்டுகளில் தூவி உட்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Pumpkin Seeds

The tiny, green pumpkin seeds are among the few foods that increase in nutritive value as they decompose, according to studies. Here's why you should make them a part of your diet.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter