சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உடலில் இரத்தத்தைத் சுத்தப்படுத்தும் ஒரு முக்கிய உறுப்பு தான் சிறுநீரகம். இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அளவுக்கு அதிகமான தண்ணீரை பிரித்துத்தெடுத்து, சிறுநீர்பைக்கு அனுப்பிவிடுகிறது.

இதற்கு சிறுநீரகம் நன்கு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் டாக்ஸின்கள் சேர்வதுடன், சிறுநீரக கற்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி?

எனவே சிறுநீரகங்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், சிறுநீர் வெளியேற்றம் அதிகரிக்கவும் ஒருசில உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும்.

நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!!

இங்கு சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது அதிக அளவில் சிறுநீரை உற்பத்தி செய்து, உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸை தினமும் குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பு குறையும். மேலும் எலுமிச்சை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக செயல்பட பெரிதும் உதவும்.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதோடு, நோய்களை எதிர்த்துப் போரராடும் பொருட்கள் பல நிறைந்துள்ளன. மேலும் இது சிறுநீரகங்களில் இருந்து யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவு அவ்வப்போது பெர்ரிப் பழங்களை சாப்பிடுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

பூசணி விதைகள்

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. எனவே இவற்றை உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு குறையும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு நல்லது. மேலும் இது இரத்தம் மற்றம் சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டது.

மஞ்சள்

மஞ்சள்

அன்றாட உணவில் மஞ்சள் சேர்த்து வந்தால், சிறுநீரகங்களில் பிரச்சனைகள் அல்லது நோய்த்தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, சிறுநீரகங்கள் நன்கு செயல்படும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லியை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி, அந்த நீரை குளிர வைத்து, தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods To Eat For Healthy Kidneys

Here are some of the foods to eat for healthy kidneys. Take a look...
Subscribe Newsletter