Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
அனைவரும் இனிப்பு சுவைக்கு சர்க்கரையைத் தான் பயன்படுத்துவோம். உண்மையில் சர்க்கரையானது ஒரு சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள். சொல்லப்போனால், 19 ஆம் நூற்றாண்டில் யாரும் சர்க்கரையை பயன்படுத்தியதில்லை. ஆனால் நாளடைவில் சர்க்கரையானது மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் இனிப்புச் சுவையூட்டும் சர்க்கரையானது ஒரு சுத்திகரிக்கப்பட்ட ஒரு பொருள். இத்தகைய சர்க்கரையை அதிகம் உணவில் சேர்த்தால், பல நோய்கள் உடலில் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆமாம், 19 ஆம் நூற்றண்டில் சர்க்கரையை நம் மக்கள் பயன்படுத்தவில்லையெனில், எவற்றை பயன்படுத்தியிருப்பார்கள் என்று யோசித்ததுண்டா? அக்காலத்தில் சர்க்கரைக்கு பதிலாக கரும்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வெல்லத்தை தான் பயன்படுத்தினார்கள். இத்தகைய வெல்லத்தில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளன. இவை கடினமாக இருந்தாலும், இதன் சுவையே தனி தான். சரி, இப்போது அத்தகைய வெல்லத்தின் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

உடல் குளிர்ச்சி
கரும்பு சாற்றினால் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை, நீரில் கரைத்து குடித்து வந்தால், இவை வயிற்று எரிச்சலை தணித்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதிலும் இந்த முறையை கோடையில் செய்தால், உடல் குளிர்ச்சியடையும்.

நல்ல தூக்கம்
வெல்லத்தில் செலீனியம் அதிக அளவில் உள்ளது. மேலும் இதல் உள்ள காம்ப்ளக்ஸ் சர்க்கரையானது, நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. அதிலும் இதனை ரொட்டியுடன் சேர்த்து, இரவில் சாப்பிட்டால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

எடை குறைவு
சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் வெல்லத்தில் கலோரியானது குறைவான அளவிலேயே இருக்கிறது. சர்க்கரையில் எளிதான வகையில் குளுக்கோஸானது உள்ளது. ஆனால் வெல்லத்தில் அது மிகவும் கடினமாகவும், செரிமானமடைவதற்கு தாமதமாகவும் இருக்கும். மேலும் வெல்லத்தில் நல்ல ஆரோக்கியமான கர்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர், இதனை உணவில் சேர்த்தால், உடல் எடையை குறைக்கலாம்.

இரும்பு சத்து
வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.

புற்றுநோய்
வெல்லத்தில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்ப்பு போராடி புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கலாம்.

பிரசவத்திற்கு பிந்தைய உணவு
பிரசவத்தின் போது பெண்களின் உடலில் இருந்து நிறைய சத்துக்கள் வெளியேறியிருக்கும். எனவே அவ்வாறு இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கு வெல்லம் பெரிதும் துணையாக உள்ளது.

வலிகள்
வெல்லத்தில் உள்ள செலீனியத்தால், உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் பிடிப்புகள் போன்றவை சரியாகும். குறிப்பாக ஒற்றை தலைவலி மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்று வலி போன்றவையும் நீங்கும்.



Click it and Unblock the Notifications
