Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்ப இரவில் இந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்...
அனைவருக்குமே தூங்கப் போகும் முன்பு வயிறு நிறைய சாப்பிடக்கூடாது என்று தெரியும். நாள் முழுவதும் நன்கு கடினமாக உழைத்து அல்லது பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வருகிறோம். இதனால் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் தொடர்ச்சியாக ஓய்வின்றி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு நிச்சயம் ஓய்வு கொடுக்க வேண்டும். எப்படி இயந்திரம் ஒன்று தொடர்ச்சியாக ஓய்வின்றி செயல்பட்டால், பழுதடைந்துவிடுமோ, அதேப்போல் தான் உடலும். ஓய்வு சரியாக கிடைக்காவிட்டால், உடலும் சோர்வடைந்து வலுவிழந்துவிடும். இது உடலுக்கு மட்டுமின்றி, செரிமான மண்டலத்திற்கும் தான். ஆம், எப்படி நாள் முழுவதும் சாப்பிடுவதை செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு செரித்துவிடுகிறதோ, அதேப் போல் அதற்கு சரியான ஓய்வையும் கொடுக்க வேண்டும்.
இத்தகைய உடல் மற்றும் செரிமான மண்டலத்திற்கு ஓய்வு என்பது நிம்மதியான தூக்கத்தின் மூலம் தான் கிடைக்கும். ஆனால் அவ்வாறு தூங்க செல்லும் முன்பு, அதிகப்படியான கலோரிகள் நிறைந்த உணவுகளை உண்டால், அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி, தூக்கத்தை கெடுத்துவிடும். எனவே எப்போதும் தூங்க செல்லும் 2-3 மணிநேரத்திற்கு முன்பே எந்த ஒரு உணவையும் சாப்பிட வேண்டும். குறிப்பாக அளவாகவும், கலோரிகள் குறைவாக இருக்கும் உணவுகளையு சாப்பிட வேண்டும்.
இப்போது அப்படி தூங்க செல்லும் முன்பு, சாப்பிடக்கூடாத சில உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

பாஸ்தா
பாஸ்தாவில் கலோரிகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது சமைப்பதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கலாம். ஆனால் இந்த உணவுப் பொருளை இரவில் உண்டால், அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட், உடல் எடையை அதிகரித்துவிடும். மேலும் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு கூட அதிக அளவில் உள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை அறவே தவிர்க்க வேண்டும்.

பிட்சா
இன்றைய காலத்தில் சமைக்க முடியாவிட்டால், ஒரு போன் செய்தால் போதும் பிட்சாவை டோர் டெலிவரி செய்துவிடுவார்கள். பொதுவாக பிட்சா உடலுக்கு தீங்கை விளைவிக்கும் உணவுப் பொருட்களில் முதன்மையானது. மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான மண்டலத்தின் செயல்பாடானது குறைந்துவிடுவதோடு, பாதிக்கப்படும். அத்தகைய உணவுப் பொருளை இரவில் சாப்பிட்டால், தூக்கம் கெடுவதோடு, நெஞ்செரிச்சலும் அதிகரிக்கும்.

இனிப்புப் பொருட்கள்
சிலருக்கு இரவில் இனிப்புப் பொருட்களை சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஆனால் அதிக கலோரி உணவுகள் மற்றும் இனிப்புப் பொருட்களை சாப்பிட்டால், அவை மூளை அலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி, தூக்கமின்மையை ஏற்படுத்திவிடும். எனவே நல்ல அமைதியான மற்றும் ரிலாக்ஸான தூக்கத்தைப் பெற வேண்டுமெனில், இனிப்புப் பொருட்கள், ஜங்க் உணவுகள் போன்றவற்றை தவிர்த்து, ஓட்ஸ் போன்ற கலோரி குறைவான மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.

இறைச்சி
இறைச்சியில் எவ்வளவு தான் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருந்தாலும், அது செரிமானமாவதற்கு நிறைய நேரம் ஆகும். எனவே இறைச்சிகளை இரவு நேரத்தில் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

சாக்லெட்
டார்க் சாக்லெட் மூளை மற்றும் ஞாபக சக்திக்கு மிகவும் சிறந்தது. ஆனால் அதே சமயம் அது இடுப்புக்கு மிகவும் கெடுதலானது. அதுவும் இரவு நேரத்தில் சாப்பிட்டால், அதில் உள்ள கலோரிகள் கொழுப்புக்களாக சேர்ந்து, தொப்பையை ஏற்படுத்திவிடும். எனவே சாக்லெட்டை இரவு நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் சாப்பிடுங்கள். மேலும் இதில் காப்ஃபைன் இருப்பதால், அது இரவில் உடலை புத்துணர்ச்சியடையச் செய்து, தூக்கத்தை கெடுத்துவிடும்.

காய்கறிகள்
காய்கறிகளில் ஊட்டசசத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கலாம். ஆனால் இரவில் நன்கு தூங்க நினைத்தால், ஒருசில காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். உதாரணமாக, வெங்காயம், ப்ராக்கோலி அல்லது முட்டைகோஸ் போன்றவற்றில் கரையாத நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். பொதுவாக இத்தகைய உணவுகளை காலை வேளையில் சாப்பிடுவது சிறந்தது. ஆனால் இரவில் செரிமான மண்டலம் மெதுவாக செயல்படுவதால், அது வயிற்று உப்புசம் அல்லது கடுப்பை ஏற்படுத்திவிடும்.

ஆல்கஹால்
அனைவரும் ஆல்கஹால் நல்ல தூக்கத்தை தரும் என்று நினைக்கிறோம். சொன்னால் நம்பமாட்டீர்கள், உண்மையில் அது தூக்கத்தை கெடுக்கும் ஒரு பொருள். அதிலும் ஒயின் தான் தூக்கத்தைக் கெடுப்பதில் முதன்மையானது. மேலும் அதிக கலோரிகள் நிறைந்ததும் கூட.

சீஸ் பர்கர்
மற்ற உணவுகளை விட, சீஸ் பர்கரில் தான் கலோரி அதிகமாக உள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், இது வயிற்றில் ஒருவித அமிலத்தை உற்பத்தி செய்து, இரவில் நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.

சில்லி சாஸ்
பொதுவாக சில்லி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் சில்லி சாஸை இரவில் படுக்கும் போது சாப்பிட்டால், அது நிச்சயம் தூக்கத்தில் பெரும் இடையூறை ஏற்படுத்திவிடும். ஏனெனில் இது அதிக கலோரி நிறைந்த உணவுகளில் ஒன்று. அதுமட்டுமின்றி, இதில் புரோட்டீன் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவழுக்கும் கார்போஹைட்ரேட் உள்ளது.

ஸ்நாக்ஸ் மற்றும் சிப்ஸ்
இந்த உணவுப் பொருட்களை இரவில் மட்டுமின்றி, மற்ற நேரங்களிலும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் மோனோசோடியம் க்ளுடமேட் அதிக அளவில் உள்ளதால், அது தூக்கமின்மையை ஏற்படுத்திவிடுவதோடு, பல்வேறு நோய்களுக்கும் உள்ளாக்கிவிடும்.



Click it and Unblock the Notifications