Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தலைவலியை உண்டாக்கும் உணவுகள்!!!
தலைவலி என்பது ஒரு அசௌகரியம் அல்லது அழுத்தம் தருவது போன்று தலையில் வரும் உணர்வாகும். ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் கடுமையான வலியை ஏற்படுத்துவதாக இருக்கும்.
தலைமுறை தலைமுறையாக வரும் தலைவலிகளும் உண்டு. இதைத் தவிர உணவின் காரணமாகவும், குளிர் பானங்கள் காரணமாகவும் 30% ஒற்றை தலைவலிகள் ஏற்படுகின்றன. தலைவலி வர பிற காரணங்களாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், தூங்கும் முறை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றை குறிப்பிடலாம்.
அவ்வப்போது தலைவலி அல்லது ஒற்றை தலைவலி வருகிறதா? நீங்கள் மட்டுமல்ல பல பேர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சைனஸ், அழுத்தம், மன உளைச்சல் ஆகிய பொதுவான காரணங்களைத் தவிர நமது உணவு முறையும் தலை வலியை உண்டாக்கும் என்பது பலருக்கு தெரியாது. ஆச்சரியமாக உள்ளதா? உங்கள் உணவு முறையில் ஏன் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை இப்போது நாங்கள் சொல்கிறோம். இதன் மூலம் இத்தகைய கடுமையான வலியை தவிர்கலாம்.

உணவு கட்டுப்பாடு
தலைவலி வர மிகப் பொதுவான காரணம் உணவு முறையில் திடீர் மாற்றம் தான். சிலர் திடீரென்று மிக குறைந்த கலோரி அளவுள்ள உணவை உண்ண முனைவார்கள். இதனை க்ராஷ் டயட்டிங் (Crash Dieting) என்று சொல்வார்கள். மேலும், உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, உணவு சாப்பிடுவதற்கு இடையே நீண்ட நேர இடைவேளி இருப்பது போன்ற செயல்களைத் தொடரும் போது தலைவலியை வரவேற்கவும் தொடங்குகிறோம் குறைந்த அளவு தண்ணீர் அருந்துவதும் கூட தலைவலியை வரவழைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தைரமைன் என்ற விஷமி
தைரமைன் ஒரு அமினோ அமிலம். இது மூளையில் உள்ள செரோடின் அளவை குறைத்தும் மற்றும் இரத்த குழாய்களை விரிவாக்குவதில் பிரச்னைகளை ஏற்படுத்தியும் தலைவலியை தூண்டும் விஷமியாகும். ஒற்றைத் தலைவலியை தூண்டக் கூடிய தைரமைன் மது பானங்கள், திராட்சை பழரசம், சாக்லேட், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சீஸ் ஆகிய உணவுப் பொருட்களில் உள்ளது.

மது பானங்கள்
ரெட் ஒயினில் உள்ள தைரமைன், பீனோல் என்ற பைட்டோ கெமிக்கல்ஸ், ஆகியவை தலைவலியைத் தூண்டும் விஷமிகளாக விளங்குகின்றன என்று டாக்டர் தூபே கூறுகிறார். சிலருக்கு எந்த வகையா மதுவை அருந்தினாலும் அது ஒற்றை தலைவலியை தூண்டி விடும். பீர், விஸ்கி மற்றும் ஒயின் ஆகிய பானங்களில் மூளையில் உள்ள செரோடினை குறைக்கும் தன்மை உள்ளது. இவை ஒற்றை தலைவலியை தூண்டும்.

இனிப்பு வகைகள்
தைரமைன் கலந்துள்ள காரணத்தால் சாக்லெட்களை சாப்பிடுவதாலும் தலைவலி வரும். பெண்கள் பொதுவாக மன அழுத்தத்தின் காரணமாகவும், ஹார்மோன் மாற்றங்களாலும் சாக்லெட்களை அதிகம் சாப்பிடத் தூண்டப்படுகிறார்கள். எவ்வளவு சாக்லேட் சாப்பிடுகிறீர்கள் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஒற்றை தலைவலி உடையவர்கள் கொழுப்பு அதிகமாக உள்ள உணவை உட்கொள்ளும் போது தலைவலி அடிக்கடி உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

காபி
இந்த வகை உணவு மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது. திடீரென்று காபி குடிப்பதை நிறுத்தி விட்டால் அதுவும் தலைவலியை உண்டாக்கும். காபி சிறிதளவு போதையை தரும் பானமாக உள்ளது. தற்காலிகமாக மனதை உற்சாக நிலையில் வைக்கவும் மற்றும் ஒருமுகப்படுத்தவும் காபி உதவுகிறது. திடீரென்று காபி குடிக்கும் பழக்கத்தை விட்டு விடுவதால் நிச்சயம் தலைவலியும், எரிச்சலும் வரும். அதன் தீவிரம் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதாக இருக்கும்.

சர்க்கரை
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உணவாக இயற்கையான சர்க்கரை உள்ளது. ஏனெனில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் தங்களுடைய அனைத்து சக்திகளையும் சாக்கரையாகவே இரசாயன வகையில் சேகரித்து வைக்கின்றன. அனைத்து வகையான இயற்கை சாக்கரையும் ஒரு கிராமுக்கு நான்கு கலோரி என்று ஒரே அளவு சக்தியைத் தருகின்றன. செயற்கை இனிப்புகளை விட இயற்கையாக கிடைக்கும் சர்க்கரையே ஆரோக்கியமானது. செயற்கையாக செய்யப்படும் இனிப்புகள் சிலருக்கு ஒவ்வாமல் இருப்பதால் தலைவலி ஏற்படுகின்றது. எனினும் சுக்ரலோஸ் பயன்படுத்தி செய்யும் இனிப்புகளை விட, ஆஸ்பார்டேம் என்ற மூலப்பொருளை பயன்படுத்தி செய்ப்படும் இனிப்புகளை சாப்பிடுவதால் தலைவலி வரும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
ஆதலால் உணவு காரணமாக தான் உங்களுக்கு அடிக்கடி தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி வருகிறது என நீங்கள் சந்தேகப்பட்டால், ஒரு நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.



Click it and Unblock the Notifications