Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
தற்போதுள்ள இளம்பருவத்தினர் உடலை அழகாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்வதற்கு ஜிம், ட்ரெட்மில் போன்றவற்றை குருட்டுத்தனமாக மேற்கொண்டு, உடற்பயிற்சி முடிந்த பின்னர் வாந்தி எடுத்துவிடுகின்றனர். இதற்கு உடற்பயிற்சிக்கு முன்பு எதையும் சாப்பிடக்கூடாது என்ற தவறான கூற்றை நம்பிக்கொண்டு பின்பற்றியதன் விளைவு தான். முதலில் அனைவரும் மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று நம்பி செயல்படுவதை கைவிட்டு, சற்று மூளையை உபயோகிக்க வேண்டும்.
ஆம், உடற்பயிற்சி என்பது ஒரு ஆரோக்கியமான செயலாக இருந்தாலும், அந்த உடற்பயிற்சி செய்வதற்கு போதிய ஆற்றலானது உடலில் இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால், எப்படி உடற்பயிற்சி செய்ய முடியும்? என்பதை முதலில் யோசித்து, பின்னர் எதையும் நம்ப வேண்டும். அதுமட்டுமின்றி, போதிய ஆற்றல் இல்லாமல் உடற்பயிற்சி செய்தால், அது உடலுக்கு நன்மைகளை விட தீமைகளைத் தான் அதிகம் விளைவிக்கும்.
அமெரிக்க ஆய்வு ஒன்றில், உடற்பயிற்சி செய்யும் முன் சாப்பிட்டால், உடலுக்கு உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் அதிகரிக்கும் என்று சொல்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நல்லது என்றும் சொல்கிறது. எனவே எப்போது உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன்பும், உடலுக்கு ஆற்றல் கிடைப்பதற்கு சிறிது உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக சரியான புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதோடு, உடற்பயிற்சியின் போது அது கரைந்துவிடும்.
ஆகவே தமிழ் போல்டு ஸ்கை, உங்களுக்காக உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடக்கூடிய சில ஆரோக்கியமான மற்றும் சிறந்த உணவுகளை பட்டியலிட்டுள்ளோம்.

காபி
உடற்பயிற்சிக்கு முன்பு காபியை அளவாக குடித்து ஆரம்பித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் தசை பிடிப்புக்கள் மற்றும் காயங்கள் ஏற்படுவதை குறைக்கும். அதிலும் ஸ்கிம் மில்க்கில் காபி போட்டு குடித்தால், எலும்புகள் வலுவுடன் இருக்கும்.

இஞ்சி
உடற்பயிற்சிக்கு பின்னர் அதிகப்படியான தசை வலிகள் ஏற்பட்டால், உடற்பயிற்சிக்கு முன் இஞ்சி டீ போட்டு குடித்து, பின் உடற்பயிற்சியை ஆரம்பித்தால், தசை வலியைத் தடுக்கலாம்.

ஆப்பிள்
ஆப்பிளில் உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய வைட்டமின்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, ஆப்பிளில் க்யூயர்சிடின் என்னும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சத்தானது நிறைந்துள்ளது. ஆகவே தினமும் உடற்பயிற்சிக்கு முன்பு ஒரு ஆப்பிளை சாப்பிட்டு மேற்கொண்டால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

செர்ரி ஜூஸ்
செர்ரி பழங்களில் பாலிஃபீனால்கள் என்னும் தசைகளில் ஏற்படும் காயங்களை குறைக்கும் பொருள் நிறைந்துள்ளது. எனவே உடற்பயிற்சிக்கு முன்பு ஒரு டம்ளர் செர்ரி ஜூஸ் குடித்து உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

பீட்ரூட்
பீட்ரூட் இரத்த சோகை உள்ள பெண்களுக்கு மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். இந்த பீட்ரூட்டை உடற்பயிற்சிக்கு முன்பு ஜூஸ் போட்டு குடித்து, பின் உடற்பயிற்சியை தொடர்ந்தால், உடலுக்கு வேண்டிய ஆக்ஸிஜனானது நல்ல அளவில் கிடைக்கும்.

செரில்
உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடக்கூடிய உணவுகளில் மிகவும் சிறந்தது தான் செரில். ஏனெனில் இதனை சாப்பிட்டு உடற்பயிற்சியை மேற்கொண்டால், குளுக்கோஸானது இரத்தத்தில் மெதுவாக கலக்கும். இதனால் அதிகப்படியான எனர்ஜி உடலுக்கு கிடைக்கும்.

தேன்
வெதுவெதுப்பான பாலில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, உடற்பயிற்சிக்கு முன் குடித்தால், உடற்பயிற்சியின் போது உடலின் ஆற்றலானது அதிகரிக்கும்.

பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில் அதிகமான அளவில் புரோட்டீன் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், இதனை சாப்பிட்டால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்கும். குறிப்பாக, இந்த பருப்பு வகைகளை அளவாக சாப்பிட்டு மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வாயுத் தொல்லையை ஏற்படுத்திவிடும்.



Click it and Unblock the Notifications