For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அறிவுத்திறனை அதிகரிக்கும் முட்டை !

By Mayura Akilan
|

Egg
நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது. முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. நாம் சமைக்கும் முட்டையை பொருத்து கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும். முட்டையில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்குத் தேவையான அயோடின் உள்ளது. பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் உள்ளது. காயங்களை குணமாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம் அதிகம் காணப்படுகிறது

முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன

தினம் ஒரு முட்டை

தினமும் குழந்தைகளுக்கு ஒருமுட்டை கொடுப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கிறது. காலை உணவுடன் முட்டை வழங்குவதால் கவனிக்கும் தன்மை அதிகரிப்பதாகவும்,வாசிப்புத் திறன் கூடும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் எடையை சீராக வைத்திருக்கும். எடைக்குறைவான குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் சத்துக்கள் கூடுவதோடு உடல் எடை அதிகரிக்கும்.

மூளை வளர்ச்சி அதிகரிக்கும்

வளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிகவும் அவசியம். தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டல் கண்பார்வையை தெளிவாக்கும். குழந்தை பருவத்தில் இருந்தே தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் வயதான பின்பு ஏற்படக்கூடிய கார்ட்க்ராக்ட் பிரச்சினையில் இருந்து தப்பலாம். முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச் சத்து எலும்புவளர்ச்சிக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதயக்கோளாறு மற்றும் பக்கவாத நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்பிற்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது. வாரத்திற்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது 44 சதவிகிதம் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இதயநோய் பாதிப்பு குறையும்

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. எனவே, இதயநோய் அபாயமும் இல்லை.

முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறது ஹார்வார்டு பள்ளி. சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்கவேண்டாம்.

1976ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இது 2 வருட ஆய்வு. இது போக, 1986 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பல் மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் தினமும் முட்டை சாப்பிட்டனர். அவர்களிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது. அந்த மருத்துவர்களின் கொலஸ்ட்ரால் அளவு, கடந்த 12 ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.

80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவக் குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவக் குறிப்பேடுகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்று உறுதியாகத் தெரிவித்தது.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதுவே இதயத்துக்கு நலம் பயக்கும். நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். மருத்துவர்களின் ஆலோசனையின்படி வாரம் ஒரிரு முட்டை சாப்பிடலாம்.

English summary

Daily an egg for good health | அறிவுத்திறனை அதிகரிக்கும் முட்டை !

You do not need to eat expensive foods to get a balanced nutrition. Apart from being inexpensive, Eggs are a super food which contain large amounts of protein, amino acids, vitamins and minerals.Breakfast with a boiled or poached egg before children goes to school may help them boost energy and improve their brain power. The unborn baby also has a higher IQ when expectant mothers are routinely intake two eggs a day.
Story first published: Sunday, August 14, 2011, 12:54 [IST]
Desktop Bottom Promotion