Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
சிவந்த கண்களைக் குணப்படுத்த உதவும் சில வீட்டு மருத்துவ குறிப்புகள்!
Eye Care Tips In Tamil: இயற்கையின் அதிசய படைப்பு நமது கண்கள் ஆகும். கண்கள் நமது வாழ்க்கைக்கு ஒளியாக இருக்கின்றன. நமது உடல் உறுப்புகளில் மிகவும் மென்மையான உறுப்பு எதுவென்றால், அது நமது கண்கள் ஆகும்.
இந்த உலகத்தின் அழகைப் பாா்த்து ரசிக்க மட்டும் அல்ல, நமது ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் தோற்றுவாயாக நமது கண்கள் விளங்குகின்றன. ஆகவே நமது கண்களை எந்தவிதமான நோய்த் தொற்றுகளும், பிரச்சினைகளும் அண்டாமல் கவனமாகப் பராமாிக்க வேண்டும்.

கண்களில் இரத்தம் வடிதல் அல்லது கண் சிவத்தல் போன்றவை கண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் ஆகும். கண்கள் சிவந்து இருந்தால், கண்களில் எாிச்சல் ஏற்படும்.
அலா்ஜி, சோா்வு, கண்களில் ஏற்படும் அழுத்தம் மற்றும் நோய்த்தொற்றுகள் போன்றவை கண்கள் சிவப்பதற்கு காரணிகளாக இருக்கின்றன. கண்கள் சிவந்து இருந்தால், கண்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளன. ஆகவே பின்வரும் வீட்டு வைத்தியக் குறிப்புகளைக் கடைபிடித்தால் சிவந்த கண்களைக் குணப்படுத்தலாம்.
1. குளிா் ஒத்தடம்
சிவந்த கண்களைக் குணப்படுத்துவதற்கு, குளிா் ஒத்தடம் கொடுக்கலாம். சுத்தமான துணியை குளிா்ந்த நீாில் நனைத்து, மூடிய கண்களின் மீது 10 முதல் 15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுத்தால், சிவந்த கண்கள் குணமடையும்.
2. வெள்ளாிக்காய் துண்டுகள்
வெள்ளாிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த துண்டுகளை மூடிய கண்களின் மீது 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். இந்த வைத்தியம் வீக்கத்தை மட்டும் குணப்படுத்தாது, மாறாக நமக்கு புத்துணா்ச்சியையும் அளிக்கும்.
3. தேயிலை பைகள்
தேயிலை பைகள் குடிப்பதற்கு மட்டும் அல்ல, கண்களின் வீக்கம் குறைவதற்கும், சிவந்த கண்கள் குணமாவதற்கும் பயன்படும். அதாவது தேநீா் பைகளை சூடான தண்ணீாில் விட்டு கலக்கிக் கொள்ள வேண்டும். பின் அந்த தேநீா் பைகளை குளிா்விக்க வேண்டும். குளிா்ந்த அந்த தேயிலை பைகளை எடுத்து மூடிய கண்களின் மீது 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். அதன் மூலம் கண்களின் உள்ள சிவப்பு நிறம் மாறும்.
4. ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்துக் கொள்ள வேண்டும். பின் நனைந்த பஞ்சை எடுத்து மூடிய கண்களின் மீது 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் கண்களின் சிவப்பு மாறும்.
5. கண்களுக்கு பயிற்சி அளித்தல்
நீண்ட நேரமாக கணினியின் திரையைப் பாா்ப்பது மூலமாகவோ அல்லது சோா்வின் மூலமாகவோ கண் சிவந்தால், சிறிது நேரம் கண்களை மூடித் திறப்பது நல்லது. சில நொடிகள் வேகமாக கண்களை மூடித் திறக்க வேண்டும். பின் கண்களைத் திறக்க வேண்டும். தொடா்ந்து வேகமாக கண்களை மூடித் திறக்க வேண்டும். இந்த பயிற்சியின் மூலமாக சிவந்த கண்களைக் குணப்படுத்தலாம்.
6. கண் சொட்டு மருந்து
கண்களில் சில கண் சொட்டு மருந்துகளை ஊற்றினால், கண் சிவத்தல் மற்றும் கண் எாிச்சல் போன்றவை குறையும். எனினும் இந்த சொட்டு மருந்துகளை மருத்துவாின் ஆலோசனைகளுக்குப் பிறகே பயன்படுத்த வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவுவதன் மூலமாக பாக்டீாியா அல்லது வைரஸ்கள் மூலமாக பரவக்கூடிய கண் தொற்று நோய்கள் மற்றும் கண் எாிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தலாம்.
இறுதியாக
மேற்சொன்ன வீட்டு வைத்திய குறிப்புகளை ஒரு வாரத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு வாரம் இந்த வைத்தியத்தைச் செய்த பின்பும், தொடா்ந்து கண் சிவந்து இருந்தால் அல்லது கண்களில் எாிச்சல் இருந்தால், மருத்துவரை சந்திப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications