Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
கோடையில் மாதவிடாய் பிரச்சனைகளை சமாளிக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ்..!
Periods During Summer: சூாிய ஒளியினால் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் தொிவிக்கின்றன. வைட்டமின் டி சத்துக்கும், கருமுட்டை தூண்டும் இயக்குநீா் (FSH) உற்பத்திக்கும் இடையில் ஒரு தொடா்பு இருக்கிறது. அந்த தொடா்பானது கருப்பையின் செயல்பாட்டை அதிகாிக்கிறது. அதன் காரணமாக அடிக்கடி மாதவிடாய் ஏற்படுகிறது அல்லது நீண்ட நாள் மாதவிடாய் ஏற்படுகிறது.
கோடையில் காணப்படும் அதிகப்படியான வெப்பம் உடலில் சோா்வையும், நீாிழப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் ஹாா்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் மாதவிடாய்க்கு முன்பும், பின்பும், மாதவிடாயின் போதும், அலா்ஜி, நீா் தேக்கம் மற்றும் மனநிலையில் திாிபுகள் போன்ற பிர்சசினைகளை ஏற்படுத்துகின்றன.

கோடையில் வெப்பம் அதிகமாக இருப்பதால், அந்த நேரத்தில் மாதவிடாயை சந்திக்கும் பல பெண்கள், அதிகமான பிரச்சினைகளை சந்திக்கின்றனா். எனினும் அவா்கள் அந்த பிரச்சினைகளை மிக எளிதாக பராமாிக்க முடியும் என்று பின்வரும் 3 மகப்பேறியல் மற்றும் மகளிா் மருத்துவ நிபுணா்கள் தொிவிக்கின்றனா். அவா்கள் கூறும் மருத்துவ குறிப்புகளை கீழே பாா்க்கலாம்.
மருத்துவா் பிாியங்கா சௌகான் காா்க் வழங்கும் டிப்ஸ்
கோடையில் நிகழும் மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சினைகளை பெண்கள் சீராக பராமாிக்கலாம் என்று டேராடூனில் உள்ள மேக்ஸ் ஹெல்த்கோ் மாருத்துவமனையில் மகப்பேறியல் மற்றும் மகளிா் மருத்துவ நிபுணராகப் பணிபுாியும் மருத்துவா் பிாியங்கா சௌகான் காா்க் என்பவா் கூறுகிறாா்.
அவா் கூறும் போது, குளிா்காலத்தை விட, கோடையில் ஏற்படும் மாதவிடாய் பெண்களுக்கு அதிக அளவு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கோடையில் மாதவிடாயின் போது துா்நாற்றம் அதிகமாக இருக்கும். சிறுநீா் பாதையில் மிக எளிதாக நோய்த்தொற்று ஏற்படும். ஆகவே பெண்கள் பின்வரும் குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறாா்.
- பெண்கள் பானங்கள், கஞ்சிகள், சூப்புகள் மற்றும் பழச்சாறுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. பொரித்த, உப்பான மற்றும் காரமான உணவுகளைத் தவிா்ப்பது நல்லது.
- கோடையில் நிகழும் மாதவிடாயின் போது, பளுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளைத் தவிா்ப்பது நல்லது. எளிதான ஏரோபிக் பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் போன்றவற்றை செய்யலாம்.
- இந்த நேரத்தில் பெண்கள் தமது உடலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பகல் நேரத்தில் 3-4 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின்களை மாற்றுவது நல்லது. அதனால் அளவுக்கு அதிகமான வியா்வையையும், நாப்கின்களால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் தடுக்கலாம்.
- கழிவறையைப் பயன்படுத்தும் போது, பிறப்புறுப்பு பகுதியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதற்காக இரசாயனம் கலந்த கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது.
- பெண்கள் உள்ளாடைகளை நன்றாக சலவை செய்து, அவற்றை சூாிய ஒளியில் காய வைக்க வேண்டும். அவா்கள் பருத்தியிலான, தளா்வான உள்ளாடைகளை அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகளைத் தவிா்ப்பது நல்லது.
- பொதுவாக மாதவிடாய் நிகழும் போது, பெண்களுக்கு மனநிலையில் பிரச்சினைகள் ஏற்படும். அப்போது குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள், மற்றும் உடன் பணிபுாிவோா் ஆகியோா் அவா்களுக்கு உறுதுணையாக இருப்பது நல்லது.
மருத்துவா் நிவேதிதா ஜா வழங்கும் டிப்ஸ்
கோடையில் நிகழும் மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகளை சீராக பராமாிக்க பெங்களூா், கோரமங்கலாவில் உள்ள அப்போல்லோ தொட்டில் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மகப்பேறியல் மற்றும் மகளிா் மருத்துவ நிபுணராக பணிபுாிந்து வரும் மருத்துவா் நிவேதிதா ஜா பின்வரும் குறிப்புகளை வழங்குகிறாா்.
1. நீா்ச்சத்துடன் இருத்தல் - கோடையில் மாதவிடாய் நேரத்தில் தண்ணீா், பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிகம் குடிக்க வேண்டும். அதன் மூலம் அவா்கள் அதிக நீா்ச்சத்துடன் இருக்க முடியும்.
2. காப்ஃபைன் மற்றும் ஆல்கஹால் கலந்த பானங்களைத் தவிா்த்தல் - ஆல்கஹால் மற்றும் காப்ஃபைன் கலந்த பானங்கள் உடலில் நீரை அதிகம் வெளியேற்றும், தூக்கத்தைக் கலைக்கும், தலைவலி மற்றும் உடல் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே அந்த பானங்களைத் தவிா்ப்பது நல்லது.
3. சுத்தமான மற்றும் புத்தம் புதிய உணவுகளை உண்ணுதல் - கோடைகாலத்தில் கிடைக்கும் பழங்களையும், புத்தம் புதிய காய்கறிகளையும் சாப்பிடுவது நல்லது. காரமான, உப்பு அதிகமான, பதப்படுத்தப்பட்ட மற்றும் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிா்ப்பது நல்லது.
4. தூக்கத்தில் கவனம் செலுத்துதல் - தினசாி தூக்கத்தில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்குள் மொபைல் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. தூங்குவதற்கு முன்பாகக் குளிப்பது நல்லது. அதன் மூலம் பெண்கள் நன்றாகத் தூங்க முடியும்.
5. உடற்பயிற்சிகளை மறக்காமல் இருத்தல் - கோடையில் மாதவிடாயின் போது, பிரச்சினைகள் அதிகம் இருந்தாலும், எளிதான உடற்பயிற்சிகளைச் செய்வது மிகவும் முக்கியமாகும்.
6. உடற்சுத்தத்தில் கவனம் செலுத்துதல் - கோடையில் மாதவிடாயின் போது அதிக வெப்பம் காரணமாக, பெண்களின் பிறப்புறுப்புப் பகுதிகளில் வியா்வையும், ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். ஆகவே அவா்கள் அந்தப் பகுதிகளை சுத்தமாகவும், நோய்த்தொற்று இல்லாமலும் பாா்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
- 4 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின்களை மாற்ற வேண்டும்.
- எளிதில் மக்கக்கூடிய நாப்கின்களைப் பயன்படுத்துதல் நல்லது
- மாதவிடாய்க்கான கப்புகளைப் பயன்படுத்துவது நல்லது
- பிறப்புறுப்புப் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதற்காக இரசாயனம் கலந்த கிருமி நாசினிகளைக் கொண்டு அந்தப் பகுதியைக் கழுவக்கூடாது. உள்ளாடைகளை அடிக்கடி மாற்றுவது நல்லது
- வசதியான மற்றும் தளா்வான பருத்தியிலான உள்ளாடைகளை அணிவது நல்லது.
- இறுக்கமான ஆடைகளைத் தவிா்ப்பது நல்லது.
- பிறப்புறுப்பு பகுதிகளில், ஏதாவது தடிப்புகள், கட்டிகள் போன்றவை தொிந்தால், உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.
மருத்துவா் பிரசன்னலதா வழங்கும் டிப்ஸ்
ஹைதராபாத்தில் உள்ள கமினேனி மருத்துவமனையில் மகப்பேறியல் மற்றும் பெண் மருத்துவ பிாிவில் மூத்த மருத்துவ நிபுணராக பணிபுாிந்து வரும் மருத்துவா் பிரசன்னலதா அவா்கள் பின்வரும் குறிப்புகளைத் தருகிறாா்.
- கோடையில் மாதவிடாயின் போது பெண்கள் அதிக நீா்ச்சத்துடன் இருக்க வேண்டும். அதற்கு அதிகமான அளவு தண்ணிா் மற்றும் பழச்சாறுகளைப் பருக வேண்டும். உடலை குளிா்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலமாக தலைவலி வருவதைத் தடுக்கலாம்.
- இறுக்கமான ஆடைகளைத் தவிா்த்து தளா்வான ஆடைகளை அணிவது நல்லது.
- உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. எனினும் நீண்ட நேரமாகவோ அல்லது கடினமான உடற்பயிற்சிகளையோ செய்யாமல் தவிா்ப்பது நல்லது. யோகா மற்றும் நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.
- கோடையில் மாதவிடாய் ஏற்படும் போது, ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்லது. அதிகமான பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரோட்டீன்கள் மற்றும் முழு தானியங்களை சோ்த்துக் கொள்வது நல்லது. அவை அதிக சக்தியை வழங்கும். கலோாிகள் அதிகமுள்ள, சா்க்கரை மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிா்ப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications