Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
கோழி கால் சூப் குடிச்சா.. உண்மையில் மூட்டு வலி குறையுமா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
Chicken Leg Soup Benefits In Tamil: பொதுவாக வயது அதிகரிக்கும் போது மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் மூட்டு சவ்வு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றால் அதிகம் அவதிப்படக்கூடும். இப்படி மூட்டு வலியால் சிரமப்படுபவர்கள் ஆட்டுக்கால் சூப், முடவாட்டுக்கால் சூப் போன்ற குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைத்து, மூட்டுக்களின் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறுவார்கள்.

சிலர் சிக்கன் கால்களை சாப்பிடுவது நல்லது என்று கூறுவார்கள். ஆனால் சிக்கன் சாப்பிடுபவர்களே ஒதுக்கக்கூடிய ஒரு சிக்கன் பகுதி தான் அதன் கால்கள். ஏனெனில் கோழி கண்ட இடங்களில் நடப்பதால், அதன் கால்கள் மற்றும் விரல் இடுக்குகளில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் அதிகம் இருந்து, அதன் விளைவாக தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
இப்படிப்பட்ட சிக்கன் கால்களை சாப்பிடுவது உண்மையிலேயே மூட்டுகளுக்கு நல்லதா? சிக்கன் கால்களில் ஏதேனும் கூடுதல் சத்துக்கள் உள்ளதா? சிக்கனின் மற்ற பகுதிகளை விட இதில் ஏதாவது சிறப்பான சத்து உள்ளதா என்பன போன்ற பல கேள்விகள் பலரது மனதில் எழலாம். இவை அனைத்திற்குமான பதிலை குழந்தை நல மருத்துவரும், உணவு ஆலோசகருமான டாக்டர் அருண்குமார் தனது யூடியூப் பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார். அது என்னவென்பதைக் காண்போம்.
ஒப்பீடு
சிக்கன் காலுக்கும், சிக்கனின் மற்ற பகுதிகளுக்கும் ஊட்டச்சத்துக்களில் என்ன வித்தியாசம் என்பது குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது,
* "100 கிராம் சிக்கன் நெஞ்சுக்கறி - 160 கலோரிகளும், 25கி-26கி புரோட்டீனும், 3கி-4கி கொழுப்பும் உள்ளன.
* 100 கிராம் தோலுடனான சிக்கன் - 200-220 கலோரிகளும், 20கி-25கி புரோட்டீனும், 10கி-12கி கொழுப்பும் உள்ளன.
* 100 கிராம் சிக்கன் கால் - 220 கலோரிகளும், 18கி-19கி புரோட்டீனும், 15 கிராம் கொழுப்பும் உள்ளன." என்று கூறினார்.
சிக்கன் காலில் உள்ள சிறப்பான சத்துக்கள் என்ன?
"சிக்கன் காலில் உள்ள எலும்புகள், சவ்வுகள் போன்றவற்றை சாப்பிடுவதால், அதிக அளவு கொலாஜன் என்னும் புரோட்டீன், ஹைரலானிக் அமிலம், கிளைசீன் அமிலோ அமிலங்கள் போன்றவை அதிகம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது." என்று டாக்டர் கூறினார்.
சிக்கன் கால்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
"சிக்கன் கால்களை சரியான முறையில் கழுவி சுத்தம் செய்து சமைத்து சாப்பிடும் போது, கொலாஜன், ஜெலாட்டின், சில வகையான அமினோ அமிலங்கள், கிளைசீன், புரோலின், ஹைட்ராக்ஸி புரோலின் போன்றவை அதிகளவில் இருப்பதால், இவை மூட்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு, ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு, எலும்பு வலி உள்ளவர்களுக்கு பயன்படலாம்.
மூட்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் கொலாஜன் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். ஏனெனில் கொலாஜன் மூட்டு சவ்வுகளுக்கு இடையிலான மிகவும் முக்கியமான பொருள். இந்த கொலாஜன் இயற்கையாகவே சிக்கன் காலில் அதிகமாக உள்ளது. எனவே இதை சமைத்து சாப்பிடும் போதோ அல்லது சூப்பாக வைத்துக் குடிக்கும் போது, அதில் உள்ள கொலாஜன் உடலுக்கு கிடைக்கும். இதனால் மூட்டு வலி உள்ளவர்களுக்கு இது அதிக பயனுள்ளதாக உள்ளது.
கொலாஜன் குறித்து இன்னும் ஆழமாக கூற வேண்டுமானால், கொலாஜன் என்பது சவ்வுகளுக்குள் இருக்கக்கூடிய ஒரு பொருள். இந்த கொலாஜன் தான் ஒரு வலுவான அமைப்பைத் தருகிறது. இப்படிப்பட்ட கொலாஜன் நிறைந்த உணவை உட்கொண்டால், அது அப்படியே நேரடியாக நம் மூட்டுகளுக்குள் சென்று விடுமா என்றால், அது தான் இல்லை.
பொதுவாக நாம் எந்த உணவை உட்கொண்டாலும், அது நம் வயிற்றில் தனித்தனி மூலக்கூறுகளாக, அமினோ அமிலங்களாக பிரிந்துவிடும். உதாரணமாக, நாம் சாப்பிடும் புரோட்டீன் உடலுக்குள் பல அமினோ அமிலங்களாக பிரிக்கப்பட்டு, அந்த அமினோ அமிலங்கள் இரத்தத்தில் கலந்து, கொலாஜன் உற்பத்திக்கு தேவையான கிளைசீன், புரோலின், ஹைட்ராக்ஸி புரோலினை எடுத்து நமது உடல் பயன்படுத்திக் கொள்ளும்.
சில ஆய்வுகளானது, சில சமயங்களில் கொலாஜன் முழுமையாக செரிமானமாகாமல், சிறு சிறு பெப்டைடுகளாக உடைந்து, வயிற்றால் உறிஞ்சப்பட்டால், ஒருவேளை நேராக நம் மூட்டுக்களை அடையவதற்கான வாய்ப்புள்ளதாக கூறுகிறது. இப்படியான நன்மை கொலாஜன் மூலம் கிடைப்பதால் தான், மருத்துவர்கள் கொலாஜன் மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். எனவே இதைப் பார்க்கும் போது மூட்டு பிரச்சனைக்கு சிக்கன் கால் சூப்பை குடிப்பது நல்லது. அதுவும் இதை வாரத்திற்கு 2-3 முறை குடிப்பது நல்லது." என்று கூறினார்.
நினைவில் கொள்ள வேண்டியவை
"கொலாஜன் மூட்டுகளுக்கு முக்கியமானது தான். ஆனால் இந்த கொலாஜன் வலிமையாக இருக்க வேண்டுமானால், அதற்கு ஜிங்க், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் மிகவும் அவசியம். இவை அனைத்தும் ஒன்றாக எடுத்தால் தான் எலும்புகளின் ஆரோக்கியமும் வலிமையும் அதிகரிக்கும். வெறும் சிக்கன் கால் சூப் குடித்தால் மட்டும் போதாது.
ஒட்டுமொத்த புரோட்டீன்களையும் எடுக்க வேண்டும். அந்த புரோட்டீனுக்கு சிக்கன், முட்டை மற்றும் சைவ புரோட்டீன்களையும் எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஜிங்க் சத்தை பெற நட்ஸ், அசைவ உணவுகள், ஈரல் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். வைட்டமின் சி சத்திற்கு நெல்லிக்காய், கொய்யாக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றையும் எடுக்க வேண்டும்.
இவை அனைத்தையும் விட முக்கியமானது, தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதுவும் வெறும் நடைப்பயிற்சி மட்டுமின்றி, மூட்டுக்களை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும். எனவே மூட்டுக்கள் வலிமையடைய சிக்கன் கால் சூப் உதவினாலும், அத்துடன் புரோட்டீன், ஜிங்க், வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். அத்துடன் தினசரி உடற்பயிற்சியிலும் தவறாமல் ஈடுபட வேண்டும்" என்றும் டாக்டர் அருண்குமார் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

