Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
Mudavattukal Kilangu Soup: தினமும் 1 கப் முடவாட்டுக்கால் சூப் குடிப்பதால் பெறும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!
Mudavattukal Kilangu Soup Benefits In Tamil: தற்போது காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. பொதுவாக குளிர்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ், ஆர்த்ரிடிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனையைக் கொண்டவர்கள் கடுமையான வலியை, அசௌகரியத்தை சந்திப்பார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்புகளை வலுப்படுத்தவும் மக்கள் நிறைய மருந்து மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் எலும்பு தொடர்பான பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகளை மட்டும் எடுக்காமல், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொண்டு வருவது இன்னமும் நல்லது.

சமீப காலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு சூப் தான் முடவாட்டுக்கால் கிழங்கு சூப். முன்பெல்லாம் இந்த சூப் மலைப்பகுதிகளில் தான் கிடைக்கும். ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் இந்த சூப் கிடைக்கிறது. ஏன் வீட்டில் கூட இந்த கிழங்கை வாங்கி வந்து சூப் வைத்துக் குடிக்கலாம்.
இந்த முடவாட்டுக்கால் கிழங்கு சூப் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் மற்றும் இந்த சூப்பை எப்படி தயாரிப்பது என்பது குறித்து டாக்டர் கார்த்திகேயன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார்.
முடவாட்டுக்கால் கிழங்கு
"முடவாட்டுக்கால் கிழங்கு பார்க்க அப்படியே ஆட்டுக்கால் போன்றே சிறு ரோமங்களுடன் மென்மையாக இருக்கும். இந்த முடவாட்டுக்கால் கிழங்கு ஏற்காடு, கொல்லி மலை போன்ற பகுதிகளில் தான் அதிகம் விளைகிறது. ஆனால் தற்போது இந்த கிழங்கு அனைத்து பகுதிகளிலும் பரவலாக கிடைக்கிறது" என்று கூறினார்.
"முடவாட்டுக்கால் கிழங்கின் ஆங்கில பெயர் ட்ரைனேரிய க்ரூசிஃபோரியா. இது தனியாக வளரக்கூடியது அல்லது. மரங்களில் வளரக்கூடிய ஒட்டுண்ணிப் போன்ற ஒரு வகையான பாசி. இது மரத்தின் சத்துக்களை உறிஞ்சி வளர்கிறது. ஆனால் மரங்களை பாதிக்காது. சீனாவில் இது ஒரு பாரம்பரிய மருந்து. இதை சீன மக்கள் கூ சூயி பூ (Gu Sui Bu) என்று அழைப்பர். இதற்கான அர்த்தம் எலும்பு முறிவை குணமாக்குபவர் என்பதாகும்" என்று கூறினார்.
இந்த கிழங்கு உடலுக்குள் எப்படி வேலை செய்கிறது?
1. எலும்புகள் வலுவாகும்
பொதுவாக நமக்கு வயதாகிவிட்டால், நமது எலும்புகளும் பஞ்சு போன்று பலவீனமாகிறது. இதை தான் ஆஸ்டியோபோரோசிஸ் அல்லது எலும்புருக்கி நோய் என்று கூறுவர். ஆனால் கிழங்கில் இருக்கக்கூடிய சில வகையான ப்ளேவோனாய்டுகளான ட்ரைரெர்பைன்ஸ் உள்ளது. இது ஆஸ்டியோபிளாஸ்ட் செயல்பாட்டை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆஸ்டியோபிளாஸ்ட், ஆஸ்டியோக்ளாக்ஸ்ட் என இரண்டு உள்ளது. அதில் ஆஸ்டியோபிளாஸ்ட் என்பது எலும்புகளுக்குள் கால்சியம் அதிகம் சேர்ந்து அடர்த்தியை அதிகமாக்கும். அதுவே ஆஸ்டியோக்ளாஸ்ட் என்பது எலும்புகளில் இருந்து அடர்த்தியைக் குறைக்கக்கூடிய வகையில் கால்சியம் வெளியேறும். எனவே இந்த முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை குடிக்கும் போது, எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும். என்று டாக்டர் கூறினார்.
2. மூட்டு வலி
மூட்டு வலிகளின் போது மூட்டு இணைப்புகள் வீக்கமடைந்து வலியை உண்டாக்குகிறது. முடவாட்டுக்கால் கிழங்கில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. அதுவும் COX2 என்சைம்ஸ் தான் மூட்டு வலிகளின் போது மாத்திரையாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இது இயற்கையாகவே இந்த முடவாட்டுக்காலில் உள்ளது.
எனவே மூட்டு தேய்மானம் அல்லது முடக்கு வாதம் போன்றவற்றால் ஏற்படும் மூட்டு வலிகளைக் கொண்டிருக்கும் போது, இந்த முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை குடித்து வரும் போது இயற்கையாகவே சரியாகும். ஆனால் முடவாட்டுக்கால் கிழங்கு பொடியை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கிழங்காக கிடைத்தால் மட்டுமே வாங்கி சூப் வைத்து குடியுங்கள் என்று டாக்டர் கூறினார்.
3. சிறுநீரகங்களுக்கு நல்லது
நமது சிறுநீரகங்களுக்கும், கால்சியத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளது. சிறுநீரகங்களானது கால்சியம் மெட்டபாலிசம், பாஸ்பரஸ் மெட்டபாலிசம், அதாவது எலும்புகளில் உள்ள இரண்டு முக்கியமான தாதுக்கான கால்சியம், பாஸ்பரஸ் சரியாக வேலை செய்வதற்கு, முதலில் சிறுநீரகங்கள் நன்கு வேலை செய்ய வேண்டும். இந்த முடவாட்டுக்கால் கிழங்கு இந்த செயல்முறையை சிறப்பாக செய்கிறது என்று டாக்டர் கூறினார்.
4. முடி வளர்ச்சி தூண்டப்படும்
முக்கியமாக முடவாட்டுக்கால் கிழங்கு முடி வளர்ச்சியை தூண்டும் ஆற்றல் பெற்றது. இது முடியின் வேர்கால்களுக்கு நல்லது. ஏனெனில் இதில் உள்ள உட்பொருட்கள் முடியின் வேர்க்கால்களுக்கு இரத்த ஒட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது என்று டாக்டர் கூறினார்.
முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
* முடவாட்டுக்கால் கிழங்கு -
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 8 பல்
* சின்ன வெங்காயம் - 15
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் முடவாட்டுக்கால் கிழங்கின் மேல் தோலை பகுதியை சீவி எடுத்துவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் துண்டுகளாக்கி வைத்துள்ள கிழங்கையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அதில் அரைத்ததை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து, எவ்வளவு சூப் தேவையோ அவ்வளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி, 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதை வடிகட்டினால், சுவையான முடவாட்டுக்கால் கிழங்கு சூப் தயார்.
யரெல்லாம் சாப்பிடக்கூடாது?
* கர்ப்பிணி பெண்கள்
* சீரற்ற இரத்தப்போக்கு
* ஆஸ்பிரின் போன்ற இரத்தம் உறைதல் மாத்திரை சாப்பிடுபவர்கள்
* அறுவை சிகிச்சைக்கு முன்
எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் முடவாட்டுக்கால் சூப் குடிக்காமல் தவிர்த்து வந்தால், இனிமேல் அந்த தவறை செய்யாமல், குடித்து நன்மை பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
















