Just In
- 5 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 17 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 19 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- Movies
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Sports
ராகுல் டிராவிட்டை பார்த்து கத்துக்கங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அப்ரிடி வேண்டுகோள்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 8 மணி நேர டயட் உங்களை உணவுக்கட்டுப்பாடே இல்லாமல் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்க உதவும்...!
உலகம் முழுவதும் உடல் எடையை குறைப்பதற்காக பல கடினமான டயட்டுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எடையை குறைப்பதற்கு சில எளிய டயட் முறைகளும் இருக்கிறது. ஆனால் அதனை பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அப்படி எடையை குறைக்கும் எளிமையான டயட்களில் ஒன்றுதான் 8 மணி நேர டயட் ஆகும்.கட்டுப்பாடுகள் இல்லாத டயட் முறையை விரும்புபவர்களுக்கு இந்த டயட் மிகவும் ஏற்றதாகும்.
இது ஒரு இடைப்பட்ட விரதமிருக்கும் முறையாகும். இந்த உணவு முறை மூலம் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்கலாம். இந்த டயட் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும், பாட் கொழுப்புக்களைக் குறைக்கவும் உதவும் என்று அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த டயட்டை எப்படி பின்பற்றலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

8 மணி நேர டயட்
8 மணி நேர டயட் என்பது இடைப்பட்ட விரதமாகும். இந்த 8 மணி நேரத்தில் நீங்கள் உங்கள் பிடித்த எதை வேண்டுமென்றாலும் சாப்பிடலாம், மீதி 16 மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது. எடை குறைப்பிற்கு 8 மணி நேர டயட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முறையில் உங்கள் பசியின் மீதோ, உங்கள் ஆரோக்கியத்தின் மீதோ நீங்கள் எந்த சமரசமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

எப்படி வேலை செய்கிறது?
இந்த டயட் மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாட்டைத் தூண்டும். மைட்டோகாண்ட்ரியா என்னும் செல் உறுப்புதான் நமது உடலில் இருக்கும் குளுக்கோஸை ஆற்றலாக மாற்றுகிறது. 16 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது மைட்டோகாண்ட்ரியாவைத் தூண்ட உதவுகிறது மற்றும் மோசமான டயட்டால் ஏற்படும் உள்விளைவு சேதத்தின் அளவைக் குறைக்கிறது.கிளைகோஜன் என்பது உங்கள் தசைகள் மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படும் குளுக்கோஸ் மூலக்கூறுகள் ஆகும். விரதம் இருக்கும்போது உங்கள் உடல் முதலில் ரிபொருளுக்காக கிளைக்கோஜனைப் பயன்படுத்துகிறது பின்னர் கொழுப்பை பயன்படுத்த தொடங்குகிறது

மூலக்கருத்து
இந்த 8 மணி நேர டயட் உங்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உங்கள் உடலில் இருக்கும் க்ளைகோஜன் மற்றும் கொழுப்பை கரைக்கிறது. மேலும் உங்கள் உடலுக்கு உணவு செரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் போதுமான நேரம் வழங்குகிறது. நீங்கள் விரும்பும் எதையும் சாப்பிட அனுமதிப்பதன் மூலம் உணவில் உங்கள் ஆர்வத்தை உயிரோடு வைத்திருக்கிறது.

8 மணி நேர அட்டவணை
ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு நாள் இடைவெளி விட்டு இந்த டயட்டை பின்பற்றுங்கள். இதன் பலனை பார்த்த பிறகு அதன் நாட்களை அதிகரிக்கவும். உங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றாற்போல இதனை திட்டமிட்டு கொள்ளுங்கள். எப்போது நீங்கள் அதிக பசியாக உணருகிறீர்கள்? உங்கள் அலுவலக நேரம் என்ன? னெனல் உடற்பயிற்சி செய்கிறீர்களா? என அனைத்தையும் கருத்தில் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு 10 மணி முதல் 6 மணி வரை உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்கள். அதற்கு பிறகு எதுவும் சாப்பிடக்கூடாது.

என்ன சாப்பிடலாம்?
அனைத்து வகை பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடலாம். புரோட்டினுக்கு பீன்ஸ், சோயா, பரப்பு வகைகள், முட்டை, மீன், சிக்கனின் மார்பு போன்றவற்றை சாப்பிடலாம். கோதுமை, பழுப்பு அரிசி, குயினோ போன்றவற்றை சாப்பிடலாம். அனைத்து வகை பால் பொருட்களையும் சாப்பிடலாம். உங்களுக்கு அலர்ஜிகளை ஏற்படுத்தாத எந்த மசாலாப் பொருளையும் பயன்படுத்தலாம்.

என்ன சாப்பிடக்கூடாது?
கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் மற்றும் எண்ணெய்கள் போன்றவற்றை தவிர்க்கவும். குறிப்பாக தேங்காய் எண்ணெய், பன்றிக்கொழுப்பு எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்கவும். மது அருந்துபவராக இருந்தால் அதனை குறிப்பிட்ட அளவில் மட்டும் அருந்தவும். அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

8 மணி நேர டயட்டின் பலன்கள்
இந்த டயட் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். உங்கள் உடலில் இருக்கும் LDL கொழுப்புக்களை வெளியேற்றும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும், உடலில் அதிகமாக இருக்கும் நீரை வெளியேற்றுகிறது, டைப் 2 டையாபிடிஸ் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது, ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவுகிறது, ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

பக்க விளைவுகள்
டயட்டின் ஆரம்ப காலத்தில் சோர்வு, அடிக்கடி மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதிக கலோரிகளை கொண்ட உணவுகளை சாப்பிடுவது, ஆபத்தான நொறுக்குதீனிகளை சாப்பிடுவது எடை குறைப்பிற்கு வழிவகுக்காது. சில உணவுக் கோளாறுகளை நீங்கள் உணரலாம். சரியான முறையில் இந்த டயட்டை பின்பற்றினால் உங்கள் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.