For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடையை வேகமாக குறைக்க இந்த ஒரு எளிய உடற்பயிற்சியை சரியாக செய்தால் போதுமாம்... மறக்காம பண்ணுங்க!

நீங்கள் தினசரி நடக்கும் அடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது பன்மடங்கு ஆரோக்கிய நலன்களை கொண்டு வருவதோடு மற்ற காரணங்களால் ஏற்படும் இறப்பு அபாயத்தையும் குறைக்கிறது என்று சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சி காட்டுகிறது.

|

நீங்கள் தினசரி நடக்கும் அடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது பன்மடங்கு ஆரோக்கிய நலன்களை கொண்டு வருவதோடு மற்ற காரணங்களால் ஏற்படும் இறப்பு அபாயத்தையும் குறைக்கிறது என்று சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சி காட்டுகிறது.

Ways to Lose Weight Just by Walking in Tamil

உடல் எடையை குறைக்க இந்த எளிய செயல்பாட்டை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்? நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், உடற்பயிற்சி செய்யும் போது, நீங்கள் உங்கள் நேரத்தின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே செலவிடுகிறீர்கள் மற்றும் உங்கள் வொர்க்அவுட்டின் போது ஒரு சிறிய அளவு ஆற்றலை மட்டுமே எரிக்கிறீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடப்பதால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியுமா?

நடப்பதால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியுமா?

நீங்கள் நாள் முழுவதும் நடந்தால், நீங்கள் அதிக கலோரிகளை எரிக்கிறீர்கள். இப்போது ஒவ்வொரு நாளின் அடிகளையும் 7 நாட்களில் பெருக்கவும். உங்கள் உடற்பயிற்சியின் போது நீங்கள் எரிப்பதை விட நடைபயிற்சி போது நீங்கள் எரிக்கும் கலோரிகளின் அளவு அதிகம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உடல் எடையை குறைக்க உதவும் நடைப்பயிற்சியின் மூலம் நாள் முழுவதும் அதிக கலோரிகளை எரிக்க சில வழிகள் உள்ளன.

தீவிரத்தை அதிகரிக்கவும்

தீவிரத்தை அதிகரிக்கவும்

நீங்கள் நடக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், உங்களின் வழக்கமான வேகத்தை விட 60% வேகத்தில் நடக்க முயற்சி செய்யுங்கள். நடைப்பயிற்சி உங்கள் அன்றைய கலோரி தேவையை எரிக்க உதவும். நீங்கள் ஒரு நாளைக்கு கலோரி பற்றாக்குறையை அடைந்துவிட்டீர்கள் என்பதை உறுதிசெய்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க உதவும். நீங்கள் உங்கள் உணவைக் கண்காணிக்கத் தொடங்கினால் மட்டுமே இது நிகழும்.

மேல்நோக்கிய படிகளில் நடைப்பயிற்சி செய்யுங்கள்

மேல்நோக்கிய படிகளில் நடைப்பயிற்சி செய்யுங்கள்

உங்கள் உடல் ஈர்ப்பு விசைக்கு எதிராக எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறதோ, அவ்வளவு வேகமாக நீங்கள் கலோரிகளை எரிக்கலாம். உங்கள் ஒவ்வொரு வேளை உணவிலும் புரதச் சத்து அதிகமாக இருக்க வேண்டும், மேலும் கலோரி பற்றாக்குறையை அடைய உதவும் முழு உணவுகள், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள் போன்ற அதிக அளவு, குறைந்த கலோரி உணவுகளில் கவனம் செலுத்துங்கள்.

நாள் முழுவதும் தொடர்ந்து நடக்கவும்

நாள் முழுவதும் தொடர்ந்து நடக்கவும்

இதைச் செய்வதற்கான எளிய வழிகள் - நீங்கள் தொலைபேசியில் பேசும்போது (அல்லது வெளிப்புற சந்திப்புகளின் போது) நடப்பது, உங்கள் வாகனத்தை உங்கள் அலுவலகம்/மளிகைக் கடையிலிருந்து சிறிது தூரத்தில் நிறுத்துதல், அதனால் நீங்கள் கூடுதல் தூரம் நடக்கலாம், உணவுக்குப் பிறகு 10 நிமிட நடைப்பயிற்சி போன்றவற்றை செய்யுவம்.

நீங்கள் நடக்கும் அடிகளின் எண்ணிக்கையை கண்காணியுங்கள்

நீங்கள் நடக்கும் அடிகளின் எண்ணிக்கையை கண்காணியுங்கள்

ஒருவர் கண்காணிக்கும் விஷயங்களை மட்டுமே மேம்படுத்த முடியும். எனவே நீங்கள் உங்களைக் கண்காணித்து, ஒரு நாளில் 5 ஆயிரம் அடிகள் மட்டுமே நடப்பதைக் கண்டறிந்தால், அடுத்த நாள் அல்லது அடுத்த வாரத்திற்கான இலக்குகளை அமைக்க இது உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. காலப்போக்கில், முந்தைய வாரத்தை விட சற்று அதிகமாக நடப்பதன் மூலம் உங்கள் தினசரி படி எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways to Lose Weight Just by Walking in Tamil

Read to know how to lose weight quickly just by walking.
Story first published: Saturday, November 5, 2022, 18:00 [IST]
Desktop Bottom Promotion