For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருப்பதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

கொரிய மக்களின் உணவுகள் ஆரோக்கியமானவை. ஏனெனில் இவர்களின் உணவுகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உள்ளடக்கியிருக்கும். கொரிய மக்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைத் தவிர, மிகவும் சுறுசுறுப்பானவர்கள்.

|

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கை முறையிலும், உணவு பழக்கவழக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். மேலும் அனைத்து நாடுகளிலும் வாழும் மக்கள் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் உடல் பருமன். ஆனால் கொரியாவில் வாழும் மக்கள் உடல் பருமன் பிரச்சனையை சந்திப்பதில்லை மற்றும் கொரிய மக்களிடம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காணப்படுவதில்லை. உலகிலேயே கொரியா ஒரு ஆரோக்கியமான சமூகம். இங்கு வாழும் மக்களின் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உடலில் கொழுப்புக்கள் சேர்வதை அனுமதிப்பதில்லை. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் கொரிய மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்றினால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Top Korean Weight Loss Tips In Tamil

கொரிய மக்களின் உணவுகள் ஆரோக்கியமானவை. ஏனெனில் இவர்களின் உணவுகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உள்ளடக்கியிருக்கும். கொரிய மக்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைத் தவிர, மிகவும் சுறுசுறுப்பானவர்கள். கொரியாவில் பல்வேறு போக்குவரத்து முறைகள் இருந்தாலும், மக்கள் பெரும்பாலான இடத்திற்கு நடந்து தான் செல்வார். இதுவே இவர்களின் ஸ்லிம்மான தோற்றத்திற்கு முதன்மையான காரணம். இப்போது கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருப்பதற்கு பின்னிருக்கும் ரகசியம் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறைச்சிகளுக்கு பதிலாக மீனை அதிகம் உண்பார்கள்

இறைச்சிகளுக்கு பதிலாக மீனை அதிகம் உண்பார்கள்

கொரிய உணவுகள் மற்றும் மத்திய தரைக்கடல் உணவுகள் இரண்டிலும் பொதுவாக மீன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இறைச்சிகளில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, சிக்கன் போன்றவை அதிக கொழுப்புக்களைக் கொண்டிருப்பதால் இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. ஆனால் மீன் இறைச்சிக்கான ஒரு சிறந்த மாற்று உணவுப் பொருள். மீனில் வைட்டமின் பி, வைட்டமின் டி, ஜிங்க், அயோடின் மற்றும் பொட்டாசியம் போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நடக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நமது உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்கும். நடப்பதன் மூலம் உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் இருப்பதோடு, அது தசைகளை உருவாக்க உதவுகிறது. நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடன் தினமும் நடப்பதன் மூலம், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் நடைப்பயிற்சி ஒரு சிறந்த உடற்பயிற்சி. இதற்கு கடின உழைப்பு தேவையில்லை. கொரிய மக்கள் எந்த ஒரு இடத்திற்கும் பெரும்பாலும் நடந்தே செல்வார்கள். இதுவும் அவர்களின் ஸ்லிம்மான தோற்றத்திற்கு ஒரு ரகசியம்.

உணவில் அதிக காய்கறிகள்

உணவில் அதிக காய்கறிகள்

கொரிய உணவுகளில் காய்கறிகள் அதிகம் நிறைந்திருக்கும். இங்கு மிகவும் பிரபலமான ஓர் ரெசிபி தான் கிமிச்சி. இது புளித்த காய்கறிகளால் தயாரிக்கப்படுவதாகும். அதிகமான காய்கறிகள் மற்றும் புளித்த காய்கறிகள் ஆகிய இரண்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பங்களிப்பதோடு, எடை இழப்புக்கும் உதவுகின்றன. காய்கறிகளில் வைட்டமின்களான ஏ, பி, சி மற்றும் டி-யுடன், நாரச்சத்து, பொட்டாசியம், புரோட்டீன், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளன. இவை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், எடை இழப்பிற்கும் அவசியமான சத்துக்களாகும். கொரிய மக்களால் அதிகம் உண்ணப்படும் காய்கறிகளாவன வெள்ளரிக்காய், சீமை சுரைக்காய், காளான்கள் ஆகியவையாகும். இவை உடல் கொழுப்புக்களை எரிக்க உதவுகின்றன. மேலும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

உணவுக் கட்டுப்பாடு

உணவுக் கட்டுப்பாடு

கொரிய மக்கள் உணவுகளை கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும் என்பதற்காக பௌல்/கப்புகளில் உணவுகளை உண்பார்கள். இதனால் அவர்கள் தங்களின் உணவுகளை கட்டுப்பாட்டுடன் சாப்பிடுவதை உறுதிபடுத்திக் கொள்கிறார்கள். ஒருவரது உடல் எடை அதிகரிப்பதற்கு கட்டுப்பாடு இல்லாமல் உணவு உண்பது ஒரு முதன்மையான காரணம் என்பதால், இந்த எளிய தந்திரம் கொரிய மக்களை அதிகம் சாப்பிட விடாமல் சிக்கென்று வைத்துக் கொள்ள உதவுகிறது.

நச்சுக்களை நீக்கும் பானங்கள்

நச்சுக்களை நீக்கும் பானங்கள்

கொரியாவில் நச்சுக்களை நீக்கும் பானங்கள் மிகவும் பிரபலமானவை. உலகிலேயே நீர் ஒரு ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. மேலும் நல்ல உடல் வடிவமைப்பு, சுத்தமான மற்றும் அழகான சருமம் மற்றும் எடை இழப்பு போன்றவற்றிற்கு நீர் ஒரு சிறந்த பானமாகும். நீரானது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் இது உடலின் உட்புறத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இத்தகைய நீரை வெறுமனே குடிப்பதற்கு பதிலாக, புதினா, வெள்ளரிக்காய், எலுமிச்சை ஆகியவற்றைப் போட்டு நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலம் செரிமான மண்டலம் சீராக செயல்படுவதுடன், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. இதுவும் கொரிய மக்களின் சிக்கென்ற தோற்றத்திற்கு ஓர் காரணம்.

முடிவு

முடிவு

மேலே கொடுக்கப்பட்டுள்ள கொரியன் எடை இழப்பு குறிப்புகள், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை அகற்றி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழலாம். உலகிலேயே கொரிய உணவு முறை ஆரோக்கியம் சார்ந்ததாக இருப்பதால், இந்த உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் சிக்கென்ற உடலமைப்புடன் நீண்ட காலம் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். முயற்சித்துப் பாருங்கள், நீங்களே ஒரு நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Korean Weight Loss Tips In Tamil

Here are top korean weight loss tips that you can follow to help get you in shape. Read on to know more....
Story first published: Thursday, August 4, 2022, 12:33 [IST]
Desktop Bottom Promotion