Latest Updates
-
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்க ஆண்கள் தினமும் கட்டாயம் செய்ய வேண்டிய 3 உடற்பயிற்சிகள்!
மோசமான டயட் மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்கள், அதிகப்படியான தலைமுடி உதிர்தல் மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு வழிவகுக்கிறது. இந்த அனைத்திற்குமே ஒரே தீர்வு என்றால் அது உடற்பயிற்சி தான்.
தற்போது பெரும்பாலான ஆண்களின் பெரிய கவலையாக இருப்பது முடி உதிர்வது மற்றும் தொப்பை ஆகிய இரண்டும் தான். நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே உடலுக்கு எவ்வித வேலையும் கொடுக்காமல் இருப்பதால், உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் வயிற்றுப் பகுதியில் தங்க ஆரம்பிக்கின்றன. இது தவிர, மோசமான டயட் மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்கள், அதிகப்படியான தலைமுடி உதிர்தல் மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு வழிவகுக்கிறது. இந்த அனைத்திற்குமே ஒரே தீர்வு என்றால் அது உடற்பயிற்சி தான்.

உடற்பயிற்சியானது உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மட்டுமின்றி, ஆரோக்கியமான மற்றும் வாழ்நாளை நீட்டிக்க விரும்புவோருக்கும் அவசியம். ஒருவர் தினமும் 30-40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம், சருமம் பொலிவாகும், தலைமுடி ஆரோக்கியமாகும் மற்றும் வயிற்றுக் கொழுப்புக்கள் குறைந்து வயிறு தட்டையாகும். ஆனால் அதற்கு எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்? அந்த உடற்பயிற்சிகள் எவ்வாறு உதவுகின்றன என்பதைக் காண்போம்.

உடற்பயிற்சிகள் எப்படி உதவுகிறது?
அனைத்து வகையான உடற்பயிற்சிகளுமே ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆனால் நீங்கள் தலைமுடி உதிர்வு, தொப்பை மற்றும் பொலிவிழந்த முகம் ஆகியவற்றால் கஷ்டப்படுகிறீர்கள் என்றால், ஸ்குவாட்ஸ், டெட் லிப்ட் மற்றும் செஸ்ட் பிரஸ் ஆகிய மூன்று உடற்பயிற்சிகளும் பெரிதும் உதவும். ஊட்டச்சத்து நிபுணரான ருஜூதா திவேகர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மூன்று உடற்பயிற்சிகளையும், அதன் நன்மைகளையும் பகிர்ந்து கொண்டார். இவரைப் பொறுத்தவரை, இந்த மூன்று உடற்பயிற்சிகளும் ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன், வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் டோபமைன் ஆகியவற்றின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக முடி உதிர்வு, தொப்பை போன்ற பிரச்சனைகள் குறையும்.

தசைகளைக் குறி வைக்கும் ஸ்குவாட்ஸ்
ஸ்குவாட்ஸ் என்பது கால்களில் உள்ள முக்கியத் தசைகளைக் குறி வைக்கும் ஒரு பிரபலமான உடற்பயிற்சியாகும். இந்த உடற்பயிற்சி குளுட்டியஸ் மாக்ஸிமஸ், மினிமஸ் மற்றும் மீடியஸ், குவாட்ரைசெப்ஸ், தொடை எலும்புகள், அடாக்கர், இடுப்பு நெகிழ்வுகள் மற்றும் கன்றுகள் ஆகியவற்றில் வேலை செய்கிறது.

ஸ்குவாட்ஸ் செய்வது எப்படி?
* முதலில் இடுப்பு அகலத்தை விட சற்று அகலமாக கால்களை விரித்து நேராக நின்று கொள்ள வேண்டும். பின் இடுப்பில் கைகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு முதுகு பகுதியை நேராக வைத்து, பிட்டத்தை வெளியே தள்ளி நாற்காலியில் அமர்வது போன்ற நிலையில் முழங்கால்களை வளைத்து நிற்க வேண்டும்.
* இப்படியே பத்து நொடிகள் இருந்து, பின் தொடக்க நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு 3 செட் செய்ய வேண்டும்.

தசைகளைக் குறி வைக்கும் டெட்லிப்ட்
பாரம்பரிய டெட்லிப்ட் பயிற்சி மேல் மற்றும் கீழ் உடல் தசைகளைக் குறி வைக்கிறது. இந்த உடற்பயிற்சியில் எடையைத் தூக்கும் போது, அது ட்ரெபீசியஸ், முதுகு, அடிவயிற்றுப் பகுதிகள், க்ளுட்ஸ், இடுப்பு, இணைப்பிகள், குவாட்ரைசெப்ஸ் மற்றும் தொடை எலும்புகளை செயல்படுத்துகிறது.

டெட்லிப்ட் செய்வது எப்படி?
* முதலில் பார்பெல்லின் முன் நின்று இடுப்பு அகலத்திற்கு கால்களை விரித்து நின்று கொள்ள வேண்டும்.
* பின் முழங்கால்களை வளைத்து, உடலை முன்னோக்கி வளைத்து, எடையைத் தூக்க வேண்டும்.
* எடையைத் தூக்கும் போது, உடலை வளைக்காமல் இறுக்கமாகவும், கைகளை நேராகவும் வைத்து, குதிகால் வழியாக எழுந்து நிற்க வேண்டும்.
* சில நொடிகள் எடையைத் தூக்கி வைத்திருந்த பின் மெதுவாக எடையை இறக்க வேண்டும்.

தசைகளை குறி வைக்கும் செஸ்ட் பிரஸ்
செஸ்ட் பிரஸ் செய்வதற்கு பார்பெல் அல்லது டம்பெல் எதை பயன்படுத்தினாலும், இரண்டும் ஒரே முடிவையே வழங்கும். செஸ்ட் பிரஸ் பயிற்சி பெக்டோரல்ஸ், டெல்டாய்டுகள் மற்றும் ட்ரைசெப்ஸை குறி வைக்கிறது.

செஸ்ட் பிரஸ் செய்வது எப்படி?
* முதலில் பெஞ்சில் படுத்து, இரண்டு கைகளிலும் பார்பெல்லைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்போது கால்களை தரையில் ஊன்றிய நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* பின் முழங்கைகளை வளைத்து மார்புக்கு இணையாக எடையைத் தூக்கி வைத்திருக்க வேண்டும்.
* பின்பு மெதுவாக பார்பெல்லை மேல் நோக்கி தூக்க வேண்டும். பின் தொடக்க நிலைக்கு கொண்டு வர வேண்டும். இப்படி இந்த பயிற்சியை 15-20 முறை செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications