Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
நீங்கள் ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கிறீர்களா என்பதை இந்த அறிகுறிகளை வைச்சு தெரிஞ்சிக்கலாமாம் தெரியுமா?
எடையை அதிகரிப்பது போல எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. ஏனெனில் எடைக்குறைப்பு என்பது மெதுவாக செயல்படக்கூடிய செயல்முறையாகும்.
எடை அதிகரிப்பு என்பது இப்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. எடையை அதிகரிப்பது போல எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. ஏனெனில் எடைக்குறைப்பு என்பது மெதுவாக செயல்படக்கூடிய செயல்முறையாகும். மேலும் எடைக்குறைப்பு என்பது நம்மை சோர்வாக்கும் செயல்முறையாகும்.

தற்போதைய காலக்கட்டத்தில் எடையை குறைக்க பல எளிதான வழிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் அந்த வழிகள் அனைத்தும் பாதுகாப்பானதா என்றால் அது கேள்விக்குரிய ஒன்றுதான். நீங்கள் விரும்பும் அளவு எடையைக் குறைக்க நிச்சயமாக உங்கள் முயற்சியும், உடல் உழைப்பும் தேவை. நீங்கள் ஆரோக்கியமான வழியில் எடையை குறைக்கிறீர்கள் என்பதை நீங்கள் சில அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அது என்னென்ன அறிகுறிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முன்பு போல பசி இல்லாமல் இருப்பது
உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நீங்கள் உறுதியான உணவுத் திட்டங்களில் ஈடுபட வேண்டும், கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறைகளை நாட வேண்டும் மற்றும் அதிக கலோரி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் எடை இழக்க ஆரம்பித்தவுடன், நீங்கள் முன்பு போல் பசியுடன் இருக்க மாட்டீர்கள். ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான உங்கள்ஆர்வமும் காலப்போக்கில் குறையும்.

நன்றாக தூங்குவீர்கள் குறட்டை விடமாட்டிர்கள்
வளர்சிதை மாற்ற குறைபாடு உள்ளவர்கள், குறிப்பாக பெண்கள் தூக்கத்தில் அதிக குறட்டை விடும் பழக்கம் மற்றும் எடை அதிகரிப்பிற்கு ஆளாகின்றனர். நீங்கள் ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு தூக்கத்தில் பிரச்சினைகள் இருக்காது குறிப்பாக குறட்டை தொந்தரவு இருக்காது.

உடைகள் நன்றாக பொருந்தும்
உங்கள் உடைகள் அதிக விசாலமானதாகவும் காற்றோட்டமாகவும் மாறிவிட்டன என்று நினைக்கிறீர்களா? அல்லது உங்கள் உடைகள் உங்களுக்கு சரியான அளவாகிவிட்டதா? ஆம் எனில், நீங்கள் எடையை வெற்றிகரமாக குறைக்கத் தொடங்கிவிட்டிர்கள் என்று அர்த்தம். உங்கள் உழைப்பிற்கான பலன்களை நீங்கள் அறுவடை செய்யத் தொடங்கிவிட்டிர்கள்.

சுறுசுறுப்பாக உணர்வீர்கள்
நீங்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் கடினமான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் அதிக ஆற்றலையும், சுறுசுறுப்பையும் உணர்வது ஆதாரமாகும். உங்கள் ஆளுமையிலும் மாற்றத்தையும் நீங்கள் கவனிப்பீர்கள், முன்பை விட உயிரோட்டமாக இருப்பீர்கள்.

உடல் அளவீடுகள் மாறிவிடும்
நீங்கள் எடையைக் குறைக்கிறீர்களா இல்லையா என்பதைக் கண்டறிய உங்களை அளவிடுவது சிறந்த வழியாகும். உங்கள் எடை இழப்பு திட்டத்தின் தொடக்கத்தில் நீங்கள் இருக்கும்போது இருந்த எடைக்கும், பயிற்சிகளுக்கு பிறகு நீங்கள் அளவிடும்போது இருக்கும் எடைக்கும் இடையில் மாற்றங்கள் இருந்தால் நீங்கள் ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அதிக நம்பிக்கையாக உணர்வீர்கள்
நீங்கள் உடல் எடையை குறைக்க ஆரம்பித்ததும், உங்கள் தோற்றத்தைப் பற்றி தானாகவே அதிக உற்சாகத்தையும் கூடுதல் நம்பிக்கையையும் உணர்வீர்கள். இது உங்கள் ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்துகிறது, இது மீண்டும் உடல் எடையை குறைக்க அவசியம் தேவையானதாகும்.



Click it and Unblock the Notifications
