Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்க காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்!
உணவுகளில் உள்ள உட்பொருட்கள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கத் தூண்டுகின்றன. உணவுகளுடன் ஒருசில பானங்களும் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.
உடல் எடையைக் குறைப்பது என்பது மிகவும் சவாலானது. ஏன் சிலருக்கு இது ஒரு கனவாக கூட இருக்கலாம். ஏனெனில் அந்த அளவில் உடல் பருமனானது பலரது வாழ்க்கையை கஷ்டமாக்கியுள்ளது. அதுவும் அன்றாட செயல்பாடுகளைக் கூட செய்ய முடியாதவாறு பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இப்படி அதிகரித்த உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள் மற்றும் டயட்டுகள் பெரிதும் உதவி புரிகின்றன. முக்கியமாக உணவுகளில் உள்ள உட்பொருட்கள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கத் தூண்டுகின்றன. உணவுகளுடன் ஒருசில பானங்களும் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. அதுவும் சரியான பானங்களைத் தேர்ந்தெடுத்து குடிப்பது, பசியைக் கட்டுப்படுத்தவும், கலோரிகளைக் குறைக்கவும் உதவும் என்று மெடிக்கல் நியூஸ் டுடே தெரிவித்துள்ளது.
நீங்கள் உடல் எடையைக் குறைக்க காலையில் தினமும் உடற்பயிற்சியை செய்து வருபவராயின், அத்துடன் காலையில் எடை இழப்பு இலக்குகளை அடைய உதவும் ஒருசில பானங்களைக் குடித்து வாருங்கள். இதனால் உங்களின் உடல் எடை இரட்டிப்பு வேகத்தில் கரையும். இப்போது உடல் எடையைக் குறைக்க காலையில் குடிக்க வேண்டிய பானங்கள் எவையென்று காண்போம்.

தண்ணீர்
காலையில் எழுந்ததும் நூறு சதவீதம் கலோரி இல்லாத பானத்துடன் அந்நாளைத் தொடங்குவது மிகவும் நல்லது. தண்ணீர் ஒருவரது தாகத்தைத் தணிப்பதோடு, பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியது. அதுவும் உணவிற்கு முன் தண்ணீரைக் குடிப்பது, ஒவ்வொரு ஆண்டும் 27,000-க்கும் குறைவான கலோரிகளை எடுக்க உதவுகிறது. மேலும் இது கலோரிகள் மற்றும் சர்க்கரையை குறைப்பதற்கான மிகவும் எளிய வழியாகும். அதோடு கலோரிகளை எரிப்பதற்கு நீரேற்றம் செயல்படுகிறது. ஆகவே உங்களின் எடை இழப்பு ஒரு நீண்ட கால நோக்கமாக இருந்தால், நீரேற்றத்துடன் இருப்பது அதற்கு ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்.

காய்கறி ஜூஸ்
கலோரி மற்றும் சர்க்கரை குறைவான காய்கறி ஜூஸ்கள், உடல் எடையை நிர்வகிக்க ஆரோக்கியமான வழியை வழங்குகின்றன. காய்கறிகளான கேரட், வெள்ளரிக்காய், செலரி மற்றும் கேல் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இந்த காய்கறிகளில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளதால், இது உடலை ஆற்றலுடன் வைத்திருப்பதோடு, கடுமையான உடல் செயல்பாடுகளை செய்யும் போது உடல் இழக்கும் எலக்ட்ரோலைட்டுக்களை நிரப்புகின்றன. மொத்தத்தில் காய்கறி ஜூஸ்கள் புத்துணர்ச்சி அளிப்பதுடன், செரிமானத்தை விரைவுப்படுத்தும் மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆகவே காய்கறி ஜூஸ்களை காலையில் ஒரு டம்ளர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

சியா விதைகளுடன் எலுமிச்சை ஜூஸ்
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நற்பதமான எலுமிச்சை சாறு பிழிந்த நீரில், அரை டீஸ்பூன் சியா விதைகள் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிப்பது எடை இழப்பிற்கு மிகவும் நல்லது. இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் மேம்படும். அடிக்கடி பசித்தால் தான் கண்ட உணவுகளின் மீது நாட்டம் எழும். ஆனால் இந்த ஜூஸ் பசியைக் கட்டுப்படுத்துவதால், எடை இழக்க நினைப்போருக்கு இது ஒரு அற்புதமான காலை பானம்.

க்ரீன் டீ
எடை இழக்கும் முயற்சியில் இருப்பவர்கள், க்ரீன் டீயை குடிப்பது நல்லது. க்ரீன் டீயில் உள்ள பயோஆக்டிவ் மெட்டீரியல்களான காஃப்பைன் மற்றும் ஊட்டச்சத்துக்கள், கலோரிகளை குறைக்க உதவுகின்றன. ஆகவே உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், காலையில் எழுந்ததும் க்ரீன் டீயை ஒரு கப் குடியுங்கள். அதுவும் உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடிப்பது இன்னும் நல்லது.

இஞ்சி டீ
மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த இஞ்சி எடை இழப்பு செயல்பாட்டை விரைவுப்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளும், ஆன்டி-ஆக்டன்ட்டுகளும், உடல் பருமன் மற்றும் நாள்பட்ட இதய பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி பாதுகாப்பளிக்கின்றன. தினமும் இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து இரண்டு வேளை குடித்து வந்தால், எதிர்பார்த்த உடல் எடையைக் குறைக்கலாம். இஞ்சி டீயின் சுவையை அதிகரிக்க விரும்பினால், அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.

பட்டை மற்றும் தேன்
மிகவும் பழமையான மூலிகை தான் பட்டை. இந்த ஆரோக்கியமான மூலிகை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்புக்களைக் குறைக்கவும், இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் மற்றும் செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இப்படிப்பட்ட பட்டையின் பொடியை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து, சுவைக்கு தேன் கலந்து குடித்தால், உணவுகளின் மீதான ஆர்வம் குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.

ப்ளாக் டீ
ப்ளாக் டீ வயிற்றுப் கொழுப்பைக் குறைத்து, எடை இழப்பை மேம்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ப்ளாக் டீயில் உள்ள காப்ஃபைன் என்னும் பொருள், எடையைக் குறைக்க உதவுகிறது. எனவே உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், ப்ளாக் டீ தயாரித்து தேன் கலந்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து குடியுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர் நீர்
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை நீக்கவும், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் சீடர் வினிகர் எடை இழப்பிற்கு மட்டும் உதவுவதோடு மட்டுமின்றி, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கும் ஆதரவளிக்கிறது.



Click it and Unblock the Notifications











