For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி 70 வயதிலும் ஃபிட்டாக இருப்பதன் ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...

|

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது 70 ஆவது பிறந்தநாளை இன்று (செப்டம்பர் 17, 2020) கொண்டாடுகிறார். 1950 ஆம் ஆண்டு பிறந்த நரேந்திர மோடி, நாட்டிலேயே மிகவும் அதிக மன அழுத்தம் நிறைந்த ஒரு பதவியான பிரதமர் பதவியில் உள்ளார். சுமார் 132 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நிறைந்த நாட்டை வழிநடத்துவது என்பது எளிதான காரியமல்ல. இத்தகைய வேலையை உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் ஃபிட்டாக இருப்பவரால் தான் முடியும்.

பிரதமர் மோடி தனது உடல்நிலையை மிகவும் இலகுவாக எடுத்துக் கொள்பவரில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதற்கு சான்று, இவர் யோகா பயிற்சியில் ஈடுபடுவது போன்ற பல போட்டோக்களைக் கூறலாம். குறிப்பாக இவர் எப்போதும் தான் உண்ணும் உணவிலும், ஒட்டுமொத்த வாழ்க்கை முறையிலும் அதிக கவனத்தை செலுத்தக்கூடியவர். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான இன்று, ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தரமான தூக்கம்

தரமான தூக்கம்

2011 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், பிரதமர் ஒரு நாளைக்கு 5-6 மணிநேரம் மட்டுமே தூங்குவதை ஒப்புக்கொண்டார். மேலும் இது பெரும்பாலான மக்களின் தரத்திற்கு போதுமானாதாக இருக்காது. ஒவ்வொரு நாளும் நமக்குத் தேவையான சரியான அளவு தூக்கத்தைப் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. அதோடு எவ்வித இடையூறும் இல்லாத தூக்கத்தைப் பெற வேண்டியது முக்கியம். அதுவே நல்ல தூக்கம் என்றும் மோடி கூறினார். அதோடு தான் படுக்கைக்கு சென்றதும் 30 விநாடிகளுக்குள் தூங்கிவிடுவேன் என்றும் நேர்காணலில் கூறினார்.

யோகா

யோகா

வேறு எந்த ஒரு தலைவரும் பிரதமர் மோடியைப் போல் யோகாவை ஊக்குவிக்கவில்லை. இதற்கு அவர் யோகாவின் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக இருக்கலாம். பல சந்தர்ப்பங்களில், பிரதமர் மோடி யோகா மீதான தனது ஆர்வத்தைப் பற்றி பேசியுள்ளார். மேலும் ஒவ்வொரு வருடமும் சர்வதேச யோகா தினத்தன்று, பிரதமர் மோடி ஒட்டுமொத்த நாட்டிற்கே யோகாசனங்களைச் செய்து காட்டுவார். இவர் ஒரு சுறுசுறுப்பான ஆர்வலர். இவர் தினமும் யோகாசனங்களுடன் தான் அன்றைய தினத்தையே தொடங்குவாராம்.

வெஜிடேரியன் டயட்

வெஜிடேரியன் டயட்

பிரதமர் மோடியின் மிகவும் விருப்பமான உணவு கிச்சடி, சாதம் மற்றும் மசித்த பருப்புடன் நெய். இது எளிதில் செரிமானமாவதோடு, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு. அவருக்காக சமைத்த பிரபல சமையல்காரர் சஞ்சீவ் கபூரின் கூற்றுப்படி, பிரதமர் கண்டதை உண்பவர் அல்ல. ஒன்றும் இல்லாத சிம்பிளான உணவை விரும்பி சாப்பிடுபவர். மேலும் இவர் சைவ உணவை மட்டுமே உண்பவர், அதோடு நாள் முழுவதும் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பார்.

தியானம்

தியானம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் மிகப்பெரிய பதவியை வகிக்கும் போது, மிகவும் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். மோடி அவர்கள் விராட் கோலியின் சேலன்ஞ் ஒன்றை ஏற்று தனது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக தியானத்தை மேற்கொள்வதை வீடியோ ஒன்றை வெளியிட்டு காட்டினார். அந்த வீடியோவில் பத்மாசன நிலையில் அமர்ந்து இருப்பதைக் காணலாம். பொதுவாக தியானம் மனதிற்கு அமைதியை அளித்து, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கக்கூடியது என்பதை நன்கு அறிந்தவர் பிரதமர் மோடி.

பஞ்சதத்துவங்களில் நடைபயிற்சி

பஞ்சதத்துவங்களில் நடைபயிற்சி

பிரதமர் மோடி ஒரு தனித்துவமான பண்டைய உடற்பயிற்சி வழக்கத்தையும் பின்பற்றுகிறார். அது என்னவெனியில் பஞ்சத்தத்துவங்கள் அல்லது ஐந்து கூறுகளான பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் மீது நடந்து செல்வது. தினமும் காலையில் இந்த ஐந்து கூறுகளால் நிரப்பப்பட்ட புல், நீர் மற்றும் கூழாங்கற்களில் நடைப்பயிற்சியை மேற்கொள்வாராம். இந்த செயல் புத்துணர்ச்சி அளிப்பதோடு, புதுப்பிப்பதாகவும் மோடி கூறுகிறார்.

முடிவு

முடிவு

ஆரோக்கியம், ஃபிட்னஸ் என்று வரும் போது, இந்திய பிரதமர் மோடியிடம் இருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. மோசமான வாழ்க்கை முறையை மேற்கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறோம். அதோடு நேரமில்லை என்று கூறி பல ஆரோக்கியமான செயல்களையும் தவிர்த்து வருகிறோம். ஆனால் நாட்டின் மிக முக்கிய பதவியை வகிக்கும் பிரதமர் மோடி அவர்களால் ஆரோக்கியத்திற்காக நேரத்தை செலவிட முடியும் போது, நம்மாலும் நிச்சயம் முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Happy Birthday Narendra Modi: Diet and Fitness Lessons To Learn From The Prime Minister of India

How does PM Narendra Modi stay fit at 70, holding the most demanding portfolio in the country? Happy Birthday Narendra Modi: Diet and Fitness Lessons To Learn From The Prime Minister of India.